எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொது விநியோகத் திட்டத்தில்
சர்க்கரை மானியம் ரத்து ஏழை மக்களை பாதிக்கும்
காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி

சென்னை, பிப்.3 தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக் கரசர் சத்தியமூர்த்தி பவனில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறிய தாவது:-

மோடி அரசு அறிவித்துள்ள பட்ஜெட் ஏமாற்றம் தரும் பட் ஜெட்டாகவே அமைந்துள்ளது. தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான முயற்சிகளை பா.ஜனதா அரசு மேற்கொள்ளாதது கண்டனத்துக்குரியது.

வறட்சி நிவாரண நிதி வழங்குவதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது. மாநிலம் முழுவதும் வறட்சி யில் சிக்கித் தவிக்கிறது. பேரி டர் மேலாண்மைக்கு மத்திய அரசு ஒதுக்கி இருக்கும் நிதி மிகவும் குறைவு. பேரிடர் மேலாண்மையில் மத்திய- மாநில அரசுகள் கண்துடைப்பு நாடகம் ஆடுகிறது. தமிழக மக்கள் வஞ்சிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

பொது விநியோக திட்டத் தின் மூலம் ஒரு கிலோ சர்க் கரை ரூ. 13.50க்கு விற்கப்படு கிறது. இதற்காக காங்கிரஸ் அரசு மானியமாக மாநிலங் களுக்கு ரூ 18.50 வழங்கியது. இதனால் சுமார் 40 கோடி குடும்பங்கள் பயன் அடைந்து வந்தன. ஆனால் பா.ஜனதா அரசு மானியங்களை ஒழிப்ப தில் தீவிரம் காட்டி வருகிறது.

அதன் விளைவுதான் சர்க் கரை மானியத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படு வார்கள் மண்ணெண்ணெய்க்கு மாதந்தோறும் 10 பைசா விலை உயர்த்தி வருகிறது. இத்தகைய மக்கள் விரோத போக்கை பா.ஜனதா அரசு கைவிட வேண்டும்.

எண்ணூர் கடலில் பரவி உள்ள எண்ணெய் படிமத்தை அகற்றுவதற்கு உரிய தொழில் நுட்பத்தை கப்பல் போக்கு வரத்து துறை ஏற்பாடு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவா ரணம் வழங்கவேண்டும்.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் தமிழகத் திற்கு விலக்கு அளிக்கும் நீட் சட்டத்திருத்த மசோதா நிறை வேற்றிய முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள் கிறேன். நீட் விவகாரத்தில், தமிழக அரசின சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு துணை நிற்கவேண்டும். குடிய ரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று இந்தச் சட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner