எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அறிஞர் அண்ணா நினைவு நாள் : நினைவிடத்துக்கு மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

சென்னை, பிப்.3 அண்ணா வின் 48-ஆவது நினைவுதினம் இன்று (3.2.2017) கடை பிடிக் கப்பட்டது. இதையொட்டி தி.மு.கவினர் அமைதிப் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்கள்.

காலை 8.10 மணியளவில் சேப்பாக்கத்தில் இருந்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. பிர மாண்டமான மலர் வளை யத்தை சுமந்தபடி தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் பேரணியாக சென்றனர்.

முன்னாள் மத்திய அமைச் சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன், முதன்மை செயலாளர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.கே. சேகர்பாபு, ஜெ. அன் பழகன், கு.க.செல்வம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

8.40 மணிக்கு பேரணி அண்ணா நினைவிடத்தை வந்தடைந்தது. அங்கு தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி,  உள்ளிட்ட நிர்வாகி கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

தி.மு.க. மகளிர் அணியினர், தொண்டர் அணியினர், தொழிற் சங்கத்தினர் உள்ளிட்ட ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண் டனர்.

ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைப்போம்
மு.க.ஸ்டாலின் சூளுரை

தமிழ்நாடு என்ற பெயரை இந்த மாநிலத்திற்கு சூட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 48ஆவது நினைவு நாள் இன்று.
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தை நிறுவிய அந்தப் பெருந்தகை யின் இதயத்தை இரவலாகப் பெற்று, அந்த இதயத்தில் எப்போதும் அவரது நினைவு களை ஏந்தியிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் தலை மையில் அறிஞர் அண்ணா துயில் கொள்ளும் கடற்கரையில் உள்ள நினைவிடத்திற்கு அமை திப் பேரணியாக செல்வது கழகத்தினரின் வழக்கம்.

ஓய்வறியா நம் தலைவர் கலைஞர் அவர்கள் ஓய்வில் இருக்கும் சூழலில், அவரது வழிகாட்டுதல்படி கழகத்தின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்கள் தலை மையில், அண்ணா சாலை யி லிருந்து அண்ணா சதுக்கம் வரை ஆயிரக்கணக்கான கழகத் தினருடன் அமைதிப் பேரணி யில் பங்கேற்று, பேரறிஞர் பெருந்தகையின் நினைவிடத் தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினோம்.

மொழிப்பற்று- இனப்பற்று -மாநில உரிமை-, சமூக நீதி உள்ளிட்ட கழகத்தின் அடிப் படை கொள்கைகளை ஏந்தி அண்ணா வழியில் அயராது உழைத்து ஆதிக்கமற்ற சமுதா யத்தை அமைத்திட தலைவர் கலைஞர் அவர்கள் காட்டிய பாதையில் தொடரும் நம் இலட்சியப் பயணத்திற்கு இந்த நாள் உணர்வுப்பூர்வமான ஊக் கத்தை வழங்குவதாக அமைந் திருந்தது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner