எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, பிப். 7- தந்தை பெரியார் - அண் ணல் அம்பேத்கர் கொள்கைகளை தயங் காமல் எடுத்துச் செல்வோம்! என்றார் ஆர்.பி.அமுதன் அவர்கள்.

15.1.2017 அன்று மாலை சென்னை பெரி யார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றத்தில் நடைபெற்ற திராவிடர் திருநாள் பொங்கல் விழாவில் ஆர்.பி. அமுதன் உரை யாற்றினார்.

எல்லோருக்கும் வணக்கம்!  நான் அவசர மாக செல்லவேண்டி இருப்பதால், நிகழ்ச்சி நிரலை மீறி எனக்கு விருது அளிக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிக் கவும்.

சரியான ஒரு தூண்டுதல், சரியான ஒரு அடையாளம்

இந்த விருது, இதைவிட தமிழ்நாட்டில் பணி செய்பவருக்குத் தேவையில்லை. நாம் சரியாக வேலை செய்கிறோம், சரி யான ஒரு தூண்டுதல், சரியான ஒரு அடையாளம் என்று நான் நினைக்கிறேன்.

ஒன்று, அய்யாவின் பெயரால் கிடைக் கின்ற விருது; மற்றொன்று திராவிடர் கழ கம் சார்பாக கிடைக்கின்ற விருது. அடுத்த தாக, என்னோடு சக விருது பெறுகிறவர் களும் முக்கியமானவர்கள், அற்புதமாக பணி செய்கிறவர்கள்.

சரியான காலத்தில் எல்லோரும் அவர வர் துறையில் சிறப்பாக பணியாற்றுகிற தோழர்கள். இங்கேகூட சொன்னார்கள், முகநூலில் 3, 4 நாள்களாக பெரியார் விருது வாங்கும் தோழர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்ட பொழுது என்ன சொன் னார்கள் என்றால்,

சரியான நேரத்தில், சரியான நபர்களை நீங்கள் தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள். இது ஒரு வகையான நல்ல வெளிப்பாடு - அரசியல் வெளிப்பாடாக நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

மத்திய அரசு எந்த அளவிற்கு தமிழர்களுக்கு எதிரான ஒரு அரசாக இருக்கிறது

இங்கே உரையாற்றும்பொழுது ஆசிரி யர் அவர்கள் சொன்னார்கள், இக்கட்டான கால கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக் கிறோம் என்றும், மத்திய அரசு எந்த அளவிற்கு தமிழர்களுக்கு எதிரான ஒரு அரசாக இருக்கிறது என்பதை நாம் அறி வோம். அந்தச் சூழலில், இங்கிருந்துதான் நம்முடைய எதிர்ப்பினை தெரிவிக்க வேண்டும். இங்கிருந்துதான் நம்முடைய செயல்பாட்டினை நாம் தொடங்க வேண்டும். இதுதான் சரியான இடம். இந்த இடத்திலிருந்து எங்களுக்குக் கிடைத்திருக் கின்ற அங்கீகாரம் உண்மையிலேயே நான் அவர்கள் சார்பாக பேசவில்லை என்றாலும், அவர்கள் எனக்குத் தனிப் பட்ட முறையில் தெரியும் என்கிற முறை யில் சொல்கிறேன், நிச்சயமாக எங்களுக்கு இது ஒரு புது உத்வேகத்தைக் கொடுக்கும். தொடர்ந்து நாங்கள் செயல்படுவோம். தொடர்ந்து பெரியாரின், அம்பேத்கரின் கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத் துச் செல்வதற்கு, எந்தவிதமான தடைகள் வந்தாலும், தயங்காமல் தொடர்ந்து அந்தப் பணியை செய்வோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்குப் பெரியார் விருது வழங்கியதற் காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் விருது பெறுகின்ற தோழர்க ளுக்கு வாழ்த்துகள். ஆசிரியர் அவர்களுக் கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடிகர் சத்யராஜ் அவர்கள் எனக்கு நெருங் கிய நண்பர் - அவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு ஆர்.பி.அமுதன் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner