எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.10 ஜல்லிக் கட்டுக்கு ஆதரவாக மாண வர்கள் நடத்திய போராட் டத்தின் முடிவில் வன்முறை வெடித்தது. இது குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசா ரணைக் குழு நேற்று (9.2.2017) விசாரணையை தொடங்கி யுள்ளது.

கடந்த 23ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை கலைக்க காவல்துறையினர், மாணவர்கள் மீது தடியடி நடத் தினார்கள். இதனைத் தொடர்ந்து கல்வீச்சு, குடிசை, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு என காவல்துறையினரே வன்முறையில் ஈடுபட் டனர். இந்த சம்பவங்களின் ஒளிப்பதிவுகள் சமூக வலை தளங்களில் வெளியாகி தமிழ கத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கி யது. இந்நிலையில், இந்த வன் முறை குறித்து, நீதி விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் காவல்துறையினரின் வன்முறைகள் குறித்து கண்டனம் தெரிவித்தன.

இதனைத் தொடர்ந்து, ஜல் லிக்கட்டு நடைபெறக் கோரி நடத்தப்பட்ட போராட்டங் களின் தொடர்ச்சியாக சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில் நடந்த சட்டம் ஒழுங்கு பிரச் சினைகளின் உரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசா ரிப்பதற்கு தனி விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

மெரினாவில் தொடங்கி யுள்ள இந்த விசாரணையின் முதல் கட்டமாக காவல்துறையினரிடம் விசாரணை தொடங் கியுள்ளது. போராட்டத்தின் போது சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை உயர் அதிகாரி களான பாலகிருஷ்ணன், அன்பு, சுதாகர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இந்தப் போராட்டத்தில் மிக அதிகமாக பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் நடுக்குப்பம், மாடங்குப்பம், அம்பேத்கர் பாலம் பகுதிகளில் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் விசாரணை மேற்கொள்கிறார். இந்தப் பகுதிகளில்தான் காவல் துறையினரே ஆட்டோ உள் ளிட்ட வாகனங்கள், மீன் சந்தை, குடிசைகளுக்கு தீ வைத்த பகுதிகளாகும்.

இந்த விசாரணையின் போது, எவ்வளவு பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர், எவ் வளவு பேர் அடி உதைகள் வாங்கி பாதிக்கப்பட்டுள்ளனர், எத்தனை பேரின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது என்பது குறித்தெல்லாம் விசாரிக் கப்பட்டு அதன் அறிக்கையை 3 மாத காலத்திற்குள் தமிழக அரசுக்கு விசாரணைக் குழு சமர்ப்பிக்கும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner