எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப்.11 சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்து செல்லும் பயணிகள், தங்களது இருப்பிடங்களுக்குச் செல்வதற்கு வசதியாக, சைக்கிள் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த வசதியின் மூலம், வடபழனியில் குடியிருக்கும் ஒருவர் மெட்ரோ ரயில் நிலை யத்தில் பயணித்து கோயம்பேட் டில் இறங்கினால், அங்கிருந்து தான் செல்லவேண்டிய இடத் துக்கு மெட்ரோ ரயில் நிலை யத்தில் வழங்கப்படவுள்ள சைக்கிள் சேவையை பயன் படுத்திக் கொள்ளலாம்.

தற்போது, முதல்கட்டமாக ஈக்காட்டுதாங்கல் ரயில் நிலை யத்தில் 10 சைக்கிள்களை கொண்டு இந்தச் சேவை அளிக் கப்பட்டு வருகிறது. பயணிகளின் வரவேற்பைப் பொருத்து மற்ற ரயில் நிலையங்களுக்கும் இந்தச் சேவை விரிவுப்படுத்தப்படும் என மெட்ரோ ரயில்வே வட் டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த சைக்கிளை வசதியைப் பயன்படுத்த ரூ.3 ஆயிரம் திருப்பி அளிக்கப்படும் வைப்புத்தொகை (ரீஃபண்ட் டெபாசிட்) செலுத்த வேண்டும் என்று மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித் துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதாலும், சென்னை மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காகவும் சைக்கிள் சேவை தொடங்கப் பட்டுள்ளது.

மெட்ரோ ரயில் நிலையங் களில் சைக்கிள்களை தினசரி வாடகைக்கு விடும் திட்டம் ஏதுமில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுபோன்ற திட்டம் பெங்க ளூரு, டில்லி மெட்ரோ ரயில் நிலையங்களில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner