எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அரசமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு

ஆளுநர் செயல்பட திருமா. வலியுறுத்தல்

சென்னை, பிப். 11- விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று 10.2.2017 வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆதரவுபெற்ற நிலையான ஆட்சியை அமைப்பதற்கு தமிழக பொறுப்பு ஆளுநர் அரசி யலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக் கின் விசாரணை இன்னும் சில நாட்களில் உச்சநீதிமன்றத்தில் துவங்கவுள்ளது. அதில் தமிழகத்தின் நியாயத்தை முன்வைத்து வாதாடவேண்டும்;

நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாகத் தமிழக அரசு நிறை வேற்றியுள்ள சட்டங்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லையென்றால் லட்சக்கணக்கான மாணவர் களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்; வறட்சியின் காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது தொடர்கதையாக இருக்கிறது. அவர்களுக்கான வறட்சி நிவாரணம் உடனடியாக வழங்கப்படவேண்டும். இந்தக் கடமைகளையெல்லாம் சிறப் பாகச் செய்வதற்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையானதொரு அரசாங்கம் தமிழ் நாட்டில் இல்லையென்றால் மாபெரும் இழப்பைத் தமிழகம் சந்திக்க நேரிடும். இது ஆளுநருக்குத் தெரியாததல்ல.

எனவே அவர் தமிழ்நாட்டில் பெரும்பான்மை ஆதரவின் அடிப்படையில் நிலையான ஆட்சி அமைவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். முதலமைச்சராகவோ அமைச் சராகவோ பதவி ஏற்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் என்ன வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதைப் பின்பற்றுவதுதான் ஆளுநரின் கடமை. அதற்கு மாறாக, தாம தம் செய்வது தேவையற்ற குதிரை பேரங்களுக்கு இடமளிப் பதாக அமைந்துவிடும். அப்படியான பேரங்களுக்கு ஊக்க மளிப்பதும், அரசியல் குழப்பநிலையை ஏற்படுத்துவதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கு ஒப்பாகிவிடும் என்பதையும் ஆளுநரின் மேலான கவனத்துக்கு சுட்டிக்காட்டுகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


திமுக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் வழக்கு:

வீடியோ தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

சென்னை, பிப். 11- தமிழக சட்டப்பேரவையிலிருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட நாளில் பதிவு செய்யப்பட்ட வீடியோவை தாக்கல் செய்ய சட்டப் பேரவைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் அமளியில் ஈடுபட்டதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப் பட்டனர். இதை எதிர்த்தும், இடைநீக்கம் செய்ய அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவை எதிர்த்தும் எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அதேபோல பேரவையில் இல்லாத தன்னை இடைநீக்கம் செய்ததை எதிர்த்து மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ. பி.டி.ஆர்.பி.தியாகராஜன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்குக்கு பதிலளித்த சட்டப்பேரவைச் செயலாளர், அந்த நாளில் தியாகராஜன் பேரவையில் இருந்தார் என தெரிவித்திருந்தார்.அதனால், பேரவை நடவடிக்கைகளின் போது எடுத்த வீடியோவை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி தியாகராஜன் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று (10.2.2017) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டப் பேரவை நடவடிக்கைகளின் போது எடுத்த வீடியோவை தாக்கல் செய்யும் படி பேரவை செயலருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணையை மார்ச் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


இ-சேவை மய்யங்களில் வாக்காளர் அட்டை

சென்னை, பிப். 11- புதிய வாக்காளர்கள் 15,26,985 பேருக்கு அரசு இ.சேவை மய்யங்கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:கடந்த 1.9.16 முதல் 30.9.16 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த, இடம் மாற்றம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அவர்களுக்கு புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் அந்தந்த பகுதி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.இந்த ஆண்டு புதிய வாக்காளர்கள் 15,26,985 பேருக்கு அரசு இ.சேவை மையங் கள் மூலம் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அவர்களுக்கு செல்பேசியில் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்ட அடையாள எண்ணை சேவை மய்யத்தில் காண்பித்து பெற்றுக் கொள்ளலாம். செல்பேசி எண்ணை பதிவு செய்யாதவர்கள் 1950 என்ற கட் டணம் இல்லா தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


பொன்னேரி அருகே செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த 22 பேர் மீட்பு

பொன்னேரி, பிப்.11 பொன்னேரியை அடுத்த செக்கஞ்சேரியில் உள்ள செங்கல் சூளையில் கொத்தடிமையாக ஏராளமானோர் வேலை பார்ப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சார் ஆட்சியர் தண்டபாணி, வட்டாட்சியர் செந்தில்நாதன், தனி வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன் மற்றும் அதிகாரிகள் அங்கு அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது பெண்கள் உள்பட 22 பேர் கொத்தடிமையாக பணியில் அமர்த்தப்பட்டு இருப்பது தெரிந்தது. அவர்கள் அனைவரும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

அனைவரையும் அதிகாரிகள் மீட்டனர். அவர்களுக்கு உதவித் தொகை வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப் பட உள்ளனர். இது குறித்து செங்கல்சூளை உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner