எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, பிப்.17 சொரி யாசிஸ் நோயால் பாதிக்கப் பட்ட மக்களிடையே நடத்தப் பட்ட உலகின் மிகப்பெரிய கணக்கெடுப்பின் முடிவுகளை நோவார்டிஸ் நிறுவனம்  வெளியிட்டுள்ளது.

இந்த உலகளாவிய கண்டு பிடிப்புகளில் நடுத்தர நிலை முதல் தீவிர நிலை வரையிலான சொரியாசிஸ் பாதிப் பினைக் கொண்ட மக்களில் 84 சதவிகிதத்தினர் அவர்களது மருத்துவ நிலை காரணமாக பொதுவெளியில் வெறுக்கப்படு தல் (40 சதவிகிதம்) உட்பட்ட பாகுபாடு மற்றும் அவமானங் களை சந்திப்பதாக 84 சதவிகித மக்கள் தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது.கூடுதலாக 8300  க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர் களிடமிருந்து பெற்ற முடிவு களில் தெளிவான சருமம் பெறுவதற்கான சிகிச்சை எதிர் நோக்கங்களில் சொரியா சிஸ் பாதிக்கப்பட்ட மக்கள் மிகக் குறைவான நம்பிக்கைகையே கொண்டுள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

சொரியாசிஸ் என்பது பரவும் தன்மையற்றதொரு நோய் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டியது மிகவும் முக்கியமாகும். எனினும் அதை முறையாக மேலாண்மை செய்யவில்லை எனில் நீரிழிவு இதயநோய் மனஅழுத்தம் மற்றும் சொரியாடிக் ஆர்த்ரிட் டீஸ் போன்ற தீவிர ஆரோக்கி யப் பிரச்சனைகள் உண்டாக லாம் என்று கூறுகிறார் நோவார்டிஸ் மருத்துவ நிறுவன தலைவர் ஜாவத் ஜியா, சொரியாசிஸ் தொடர்பான விழிப்புணர்வை அதிகரித்தல் நோய் தொடர்பான பொய்யான நம்பிக்கைள் மற்றும் உணர்வு ரீதியிலான இழுக்குகளை குறைத்தல் மற்றும் நோயாளிக் கான சிகிச்சையின் மீதான முழுமையான அணுகுமுறை யின் வழியாக அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்து தல் போன்றவைகளை இந்த கிளியர் ஸ்கின் கணக்கெடுப்பு இலக்காகக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner