எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை,பிப்.17 சட்டசபையில் முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமி பெரும் பான்மையை நிரூபிப்பதற்காக கொண்டு வரும் தீர்மானத்தின் மீது பகுதி வாரியாக வாக்கெடுப்பு நடைபெறும்.

அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததை தொடர்ந்து, சட்டசபையில் பெரும் பான்மையை நிரூபிப்பதற்காக முதல மைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

15 நாள்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவருக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து 18 ஆம் தேதியன்றே சட்டசபை கூட் டத்தைக் கூட்ட பேரவைத் தலைவர் ப.தனபால்உத்தரவிட்டிருப்பதாகசட்ட சபை செயலாளர் ஜமாலுதீன் தெரி வித்துள்ளர்.

இதுகுறித்து ஜமாலுதீன் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 26(1)-ன் கீழ், சட்டசபையின் அடுத்த கூட்டத்தை பிப்ரவரி 18- ஆம் தேதி (நாளை) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர் கூட்டி இருக்கிறார்.

அப்போது அமைச்சரவைமீது நம் பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போதுள்ளசூழ்நிலையில்,சட்ட சபை கூடியதும் முதலமைச்சர் எடப் பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கையை கோரி தீர்மானம் கொண்டுவருவார்.அதன்மீதுஅவர் உரையாற்றுவார். அப்போது எம்.எல். ஏ.க்கள் அனைவரும் தனது அரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுப்பார்.

அவரை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் வெவ் வேறு சட்டமன்ற கட்சி தலைவர்கள் உரையாற்றி தங்கள் கருத்தை தெரி விப்பார்கள்.

அதன் பின்னர் அந்த தீர்மானத்தை எம்.எல்.ஏ.க்களின் வாக்கெடுப்புக்கு பேரவைத் தலைவர் ப.தனபால் விடுவார். தீர்மானத்தை ஆதரிப்போர், எதிர்ப்போர், நடுநிலை வகிப்போர் என மூன்று பிரிவுகளாக வாக்கெடுப்பை பேரவைத் தலைவர் நடத்துவார். முன்னதாக இந்த தீர்மானத்தில் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற அரசுக் கொறடாவின் உத்தரவு வாசிக்கப்படும்.

பின்னர்சட்டசபையின் 6 பிளாக் குகளில், (பகுதி) ஒவ்வொரு பிளாக்கி லும் உள்ள எம்.எல்.ஏ.க்களை எண்ணிக் கணிக்கும் முறையில் வாக்களிக்க பேரவைத் தலைவர் கேட்டுக் கொள்வார். தீர்மானத்தை ஆதரிப்போர் முதலில் எழுந்து நிற்பார்கள். அவர்களின் பெயர் களை சட்டசபை செயலாளர் குறித்து வைத்துக் கொண்டு அதைப் படிப்பார்.

பின்னர் எதிர்ப்போர், நடுநிலை வகிப்போரின் பெயர்கள் எழுதப்படும். 6 பிளாக்களிலும் வாக்கெடுப்பு முடிந்த பிறகு, ஆதரிப்போரின் எண்ணிக்கை கணக்கிடப்படும். 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைமுதலமைச்சரின்தீர்மானம் பெற்றிருந்தால், அரசு தனது பெரும் பான்மையை நிரூபித்துவிட்டதாக அறி விக்கப்படும்.

இந்தத்தீர்மானத்தின்போதுபேர வைத் தலைவர் நடுநிலை வகிக்க வேண்டும். தீர்மானத்துக்கு ஒரு ஓட்டு தேவைப்படும்போது மட்டுமே அவர் ஒரு சார்பாக வாக்களிக்க முடியும். அந்த வகையில் ஓட்டெடுப்பு நடக்கும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner