எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்தது

ரகசிய வாக்கெடுப்புக் கோரிக்கை நிராகரிப்பு

சென்னை, பிப்.18 தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்ற அமளி, துமளிகளுக்குப் பிறகு, இறுதியாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அமைச்சரவை 122 வாக்குகள் கிடைத்து வெற்றி பெற்றது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளும் கட்சி தரப்பில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று (18.2.2017) கூடியது. சட்டமன்றத் தில் ரகளை ஏற்பட்டதாலும், ரகசிய வாக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று சபா நாயகரை வலியுறுத்தி தி.மு.க. உறுப்பினர்கள் முற்றுகையிட்டதாலும் சட்டப்பேரவை பிற்பகல் 3 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

சட்டமன்றத்தில் இன்று (18.2.2017) முதலமைச்சர் பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு எடுப்பதற்கான சிறப்புக் கூட்டம்  நடைபெற்றது.

முன்னதாக, திமுக, காங்கிரசு, இந்திய யூனியன் முசுலீம் லீக் மற்றும் அதிமுக ஓபிஎஸ் பிரிவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி பேரவைத் தலைவருக்கு கோரிக்கை விடுத்தனர். அதனை அவைத் தலைவர் நிராகரித்தார்.

சட்டமன்றத்தில் இன்று (18.2.2017) நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரி சிறப்புக்கூட்டம் காலை 11 மணிக்குத் தொடங்கியவுடன், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரசு கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, இந்திய யூனியன் முசுலீம் லீக் உறுப்பினர் அபுபக்கர், அதிமுக ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான பிரிவினர் செம்மலை, ஓ.பன்னீர்செல்வம், பாண் டியராஜன் மற்றும் எந்த பிரிவையும் சாராத நடராஜ் ஆகியோர் பேரவைத் தலைவரைப்பார்த்து, கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற சட்டமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக அவர வர் தொகுதிகளுக்கு சென்று மக்களின் கருத்தைக் கேட்டு, அவர்களின் விருப்பப்படி, சட்டமன்றத்தில் சுதந்திரமாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தனர்.

இன்று சட்டப்பேரவை சிறப்புக்கூட்டத்துக்கு நாங்கள் வருகை தந்தபோது, காவல்துறையினர் சாலையில் எங்கள் வண்டிகளை மறித்து, சோதனை என்ற பெயரில், சட்டமன்ற உறுப்பினர்களின் மாண்புகள் மற்றும் உரிமைகள் பறிக்கும் அளவுக்கு நடந்துகொண்டனர்.

எங்களைப் பிணைக் கைதிகளைப்போல், பேரவைக்குள் அனுமதிக்கின்றனர். எனவே, காவல்துறையின் இச்செயலைக் கண்டிக்கிறோம். அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இச்சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் சுதந்திரமாக வாக் களிக்க அவர்களை அனுமதித்து, பாதுகாப்பு அளித்தும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தவேண்டும் என பேரவைத் தலைவருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி திமுக சட்ட மன்ற உறுப்பினர்கள் பேரவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டனர்.

பேரவைத் தலைவர் ப.தனபால் அவர்கள், “திமுக உறுப்பினர்களிடம், இப்படி செய்வது முறையல்ல, நியாயம் அல்ல’’ என்றார்.

பின்னர் அமளி ஏற்பட்டு, பேரவைத் தலைவர் இருக்கை சேதப்படுத்தப்பட்டது.

பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டு, பகல் 1 மணிக்கு கூடும் என்று அறிவித்து அவையைவிட்டு வெளியேறினார்.

மீண்டும் கூடிய அவை

மீண்டும் பகல் ஒரு மணிக்கு கூடியது.

முதல்வர் நம்பிக்கைக் கோரும் தீர்மானத்தை மீண்டும் முன்மொழிந்தார்.

சட்டப்பேரவையின்மாண்பைக்குலைத்த தாக திமுக உறுப்பினர்களை அவையைவிட்டு வெளியேற்ற அவைத்தலைவர் உத்தரவிட்டதன் பேரில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. ஜனநாயக விரோதம் என்று கூறி சட்டப்பேரவைக்குள் திமுகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.  பிற்பகல் 3 மணி வரை அவை ஒத்தி வைக்கப்பட்டது.

மு.க.ஸ்டாலின் பேட்டி

சட்டசபையில் நடந்தவற்றிற்கு வருத்தம் தெரிவித்தேன். சட்டப்பேரவையில் நடந்தவைகளை ஆளுநரைச் சந்தித்து முறையிடுவோம் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner