எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பயண ஊர்தி வழங்கும் விழாவில் திராவிட முன்னேற்றக் கழக தீர்மானக் குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம் அவர்களின்  உரை

மதுரை, பிப். 24- எங்களுடைய தலைவர் - எங்களுக் கெல்லாம் முகவரி கொடுத்த தலைவர் கலைஞர் அவர் கள், இன்றைக்கு முதுமையில் இருந்துகொண்டிருக்கிறார். எனவே, ஆலோசனை சொல்வதற்கும், வாழ்த்துவதற்கும், ஆசிரியருக்கு வயது இருக்கிறது, மரபணு உரிமை இருக் கிறது என்றார் திராவிட முன்னேற்றக் கழக தீர்மானக் குழுத் தலைவர் பொன்.முத்துராமலிங்கம் அவர்கள்.

4.2.2017 அன்று மாலை மதுரையில் நடைபெற்ற சுயமரியாதை இயக்கத்தின் 90 ஆம் ஆண்டு விழா - தந்தை பெரியார் அவர்களுடைய சுயமரியாதை இயக் கக் கொள்கைகளைப் பரப்புவதற்கு உதவக்கூடிய பரப் புரை பயண ஊர்தி வழங்கும் விழாவில் திராவிட முன் னேற்றக் கழக தீர்மானக் குழுத் தலைவர் பொன்.முத்து ராமலிங்கம் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

சுயமரியாதை இயக்க 90 ஆம் ஆண்டு விழா - தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு வீரமணி அவர் களுடைய 84 ஆவது பிறந்த நாள் விழா - அந்த விழா வினையொட்டி பரப்புரை தொடர்ந்து நிகழ்த்துவதற்காக  பயண ஊர்தி வழங்கும் நிகழ்ச்சி ஆகிய இந்த நிகழ்ச்சி களை ஒருங்கிணைத்து நடைபெறக்கூடிய இந்த விழா வினுடைய தலைவர் திராவிடர் கழகத்தினுடைய துணைத் தலைவர் மானமிகு கவிஞர்  கலி.பூங்குன்றன் அவர்களே,
வரவேற்புரை வழங்கிய தலைமைச் செயற்குழு உறுப்பினர் எடிசன் ராஜா அவர்களே,

தொடக்கவுரையாற்றிய திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்களே,

தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுவிக்கப்படும்வரை...

எனக்குப் பின்னால் சிறப்பானதொரு உரை நிகழ்த்த விருக்கின்ற விடுதலை சிறுத்தைகளின் தலைவர், தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுவிக்கப்படும்வரை என்னுடைய போராட்டம் ஓயாது, ஒழியாது அதுவரை நான் போராடிக் கொண்டே இருப்பேன் என்ற உந்துத லைப் பெற்ற, உணர்வைப் பெற்ற போராளி தொல்.திருமாவளவன் அவர்களே,

மக்களுக்கு அறிவொளியை உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடியவர்

இங்கே ஏற்புரை, விழாப் பேருரை நிகழ்த்தவிருக்கின்ற தமிழர் தலைவர் இன்றைக்கு தந்தை பெரியார் அவர்களுடைய கொள்கைகளை, சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை, அய்யாவினுடைய எண்ணங்களை நாடு முழுவதும் எடுத்துச் சென்று, மக்களுக்கு அறிவொளியை உருவாக்கிக் கொண்டிருக்கக் கூடிய எங்களுடைய போற்றுதலுக்குரிய தமிழர் தலைவர் அவர்களே,
குழுமியிருக்கக்கூடிய சகோதரர்களே, சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள், எனக்குப் பிறந்த நாள் என்பது இயக்கத்தோடு நடைபெறக்கூடிய விழாதானே அல்லாமல், எனக்கென்று ஒரு தனி பிறந்த நாள் தேவையில்லை என்பதை மய்யப்படுத்தித்தான், சுயமரியாதை இயக்கத்தினுடைய 90 ஆவது ஆண்டு விழாவையும், தன்னுடைய பிறந்த நாளான 84 ஆவது பிறந்த நாளையும் ஒன்றாக இணைத்து இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தந்தை பெரியார் அவர்கள் தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதி

அய்யா அவர்கள் ஒரு சமூக விஞ்ஞானி. சோசியல் சயின்டிஸ்ட்; உலகத்திலே தோன்றிய சமூக சீர்திருத்த அறிஞர்களோடு ஒன்றாக வைத்து பாராட்டப்பட வேண்டிய தலைசிறந்த சமூக சீர்திருத்தவாதி.
அப்படிப்பட்ட அய்யா அவர்களுக்கு, கிடைத்த அரும்பெரும் பொக்கிஷமாக நமக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கிடைத்திருக்கிறார்கள்.

அய்யா அவர்களுடைய கொள்கைகளை, சமுதாய சீர்திருத்த கருத்துகளை இன்றைக்கு உலகம் முழுவதும் சென்று, அந்தக் கருத்துகளுக்கு அடித்தளமிட்டு, பல்வேறு நாடுகளில் அய்யாவினுடைய புகழை பரப்பிக் கொண்டிருக்கக்கூடிய ஒரு மகத்தான பணியை, அய்யா வினுடைய கருத்துகளை அகிலம் அறியச் செய்யத் தக்க வகையில், ஆற்றலோடு அந்தப் பணியினை செய்து கொண்டிருக்கக்கூடிய நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், இன்னும் பல லட்சக்கணக்கான மைல்கள் பயணம் செய்து, இந்தக் கருத்துகளைப் பரப் பிடவேண்டும் என்பதற்காகத்தான், பரப்புரை வழங்கக் கூடிய இந்தப் பயண ஊர்தியை இளைஞர் அணியினரும், மாணவரணியினரும் சேர்ந்து வழங்கியிருக்கிறார்கள்.

திராவிடர் கழகத்தினுடைய கொள்கை, திராவிட இனம், சமூகநீதி இந்த இரண்டில் எந்தவிதமான சமரசத் திற்கும் உடன்படாத, ஏற்றுக்கொள்ளாத ஒரு உறுதியான கொள்கையைக் கொண்ட ஒரு மகத்தான இயக்கம்தான் திராவிடர் கழகம்.

திராவிடர் கழகம், திராவிட இனத்தினுடைய ஒரு ஆய்வுக்கூடம். அங்கே வார்க்கப்படக் கூடிய வார்ப்படம் தான், இன்றைக்கு திராவிடர் இயக்கத்தினுடைய தலை வர்களாக, தளபதிகளாக நாட்டில் இருந்து கொண்டிருக் கிறார்கள்.
திராவிடர் கழகம் அய்யா அவர்கள் சுயமரியாதைக் கொள்கை எடுத்துச் சொல்கின்ற நேரத்தில், தமிழ் நாட்டிலே அல்லது இந்திய நாட்டில் இருந்த நிலைமை என்பது, மனுதர்மக் கொள்கைகள் - ஜாதிய வேறுபாடுகள் - மனிதன் பிறப்பால் ஒன்று என்றாலும், ஏற்றத் தாழ்வுகள் கற்பிக்கப்பட்டு, பார்ப்பன ஆதிக்கம் தலைதூக்கி இருந்த காலகட்டம்.

அய்யா அவர்கள் காங்கிரசு கட்சியிலிருந்து பணி யாற்றிக் கொண்டு, பார்ப்பனரல்லாதவருக்கு, பிற்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமைகளைப் பெற லாம் என்று ஆரம்பத்தில் கருதி, காங்கிரசு இயக்கத்தில் பணியாற்றினார்.

அதுபோன்று, திராவிட இயக்க சிந்தனையாளர்களான நடேசனார், பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர் இவர்க ளெல்லாம் திராவிடர் இயக்கம் தென்னிந்திய நல உரிமை சங்கம் என்று பார்ப்பனரல்லாதவர்களுக்கு உரிமை வேண்டும் - சமுதாய நீதி வேண்டும் என்கின்ற அடிப் படையில், அவர்கள் போராடிக் கொண்டிருந்தார்கள்.

அய்யா அவர்கள், காஞ்சிபுரம் மாநாட்டிற்குப் பின்னாலே, இனி காங்கிரசு இயக்கத்தில் இருந்துகொண்டு சமூக நீதியைக் காப்பாற்ற இயலாது - முடியாது என்று தீர்க்கமாக உணர்ந்த பின்தான், சுயமரியாதை இயக்கத் தினை உருவாக்கி, இந்த நாட்டில் ஏற்றத் தாழ்வுகளுக்கு அடிப்படையாக உள்ள ஜாதிய கட்டமைப்பைத் தகர்த்து, தரைமட்டமாக்கவேண்டும் என்று தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார்கள்.

அப்பொழுது அய்யாவைப் போல், ஜாதியத்தினுடைய அஸ்திவாரத்தைத் தொட்டு, அசைத்து ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும் என்ற அந்த ஓங்கிய குரலைக் கொடுத்தது - அய்யாவைத் தவிர அன்றைய காலகட்டத் தில் வேறு யாருமில்லை - வேறு எந்தக் கட்சியும் இல்லை என்பதை நான் பட்டவர்த்தனமாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அய்யாவினுடைய கருத்துகளை - பிறப்பால் ஒன்று என்கிற கருத்தை - செய்யும் தொழிலால் வேற்றுமை காணக்கூடாது என்கிற கருத்தை -முன்னாலே நம்முடைய முன்னோர்கள் சொல்லியிருந்தாலும், அதற்கான ஆக்கப்பூர்வமான வடிவத்தைக் கொடுத்து, ஜாதீய சக்திகளுக்கு முன்னால் நின்று, இதனை நான் அடித்துத் தகர்ப்பேன் என்று பாமர மக்களுக்கு நடுவே சென்று, குரல் எழுப்பி, ஜாதீயத்தை இன்றைக்குத் தடுமாற வைத்திருக்கின்ற பெருமை அய்யா அவர்களுக்கும், சுயமரியாதை இயக்கத்திற்கும் உண்டு என்பதை நான் இந்த நேரத்தில் திட்டவட்டமாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

எனவே, சுயமரியாதை இயக்கம் என்பது ஒரு தன்மான இயக்கம். ஒரு மனச்சாட்சி உள்ள மனிதனுக்கு இருக்கக்கூடிய உணர்வுதான் சுயமரியாதை. சுயமரி யாதை உள்ளவன் யாருக்கும் அஞ்சமாட்டான். சுயமரி யாதை உள்ளவன் லஞ்சம் வாங்கமாட்டான். சுயமரி யாதை உள்ளவன் ஊதாரியாக இருக்க மாட்டான். சுயமரியாதை உள்ளவன் சமூகநீதிக்கு பாடுபடக்கூடி யவனாக இருப்பான். சுயமரியாதை உள்ளவன் தன்னைப் போல் பிறரையும் மதிப்பான்.

சுயமரியாதையினுடைய
வடிவத்தினுடைய பிரதிபலிப்பாக....

இந்த அனைத்துக் குணங்களையும் அய்யா அவர் கள் பின்பற்றினாரா? இல்லையா? அல்லது அய்யா அவர்கள், இந்த ஒட்டுமொத்த சுயமரியாதையினுடைய வடிவத்தினுடைய பிரதிபலிப்பாக அன்றைக்குக் காட்சி தந்தார். சாதாரணமானவன் அய்யாவைப் பார்க்கச் சென்றால், அந்தத் தள்ளாத வயதிலும் எழுந்து நிற்க வரவேற்கத் தயாராவார்.

என் வேண்டுகோளை ஏற்று...

1970 ஆம் ஆண்டுகளில், நான் ஊராட்சி ஒன்றியத்தி னுடைய பெருந்தலைவராக 30 வயதில் தேர்ந்தெடுக் கப்பட்ட நேரத்தில், ஒரே ஒரு கடிதம் - இன்லேன்ட் லெட்டர் - அதில் நான் என்னுடைய 30 ஆவது வயதில், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தினுடைய பெருந்தலை வராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறேன். அய்யா அவர்களே, நீங்கள் என்னுடைய மன்றத்திற்கு வந்து, என்னை வாழ்த்திட வேண்டும் என்று, வேண்டுகோளை தெரிவித்து, அதில் சுயமரியாதைத் தொண்டன் பொன்முத்துராமலிங்கம் என்று கையொப்பமிட்டு அனுப்பியிருந்தேன்.

அதனைப் பார்த்தவுடன், எந்தவித மறுப்பும் சொல்லா மல், நேரிடையாக வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு வருகை தந்து, அதுவும் சரியான நேரத்தில் வருகை தந்து - அவர் வருகின்றபொழுது, தள்ளாத வயது. சிறுநீர்கூடி வாளியில்தான் வடிந்து கொண்டிருந்தது.

அந்தத் தள்ளாத வயதில், இரண்டு, மூன்று அனாதை சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு வந்து மேடையில் அமர வைத்து, அன்றைக்கு என்னை வாழ்த்தினார்கள் - சுயமரியாதை கருத்துகளை சொன்னார்கள்.

ஒரு சரியான தொண்டரை,
ஒரு பொருத்தமான தொண்டரை...

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னால், அவருக்கு ஜிலேபியை ஊட்ட ஆசைப்பட்டு, ஜிலேபி ஊட்டினேன். அதையும் அவர்கள் வாங்கி சாப்பிட்ட அந்தக் காட்சி என்பது, என்னுடைய வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த பெரும் பேறாக - ஒரு மிகப்பெரிய வரலாற்றுப் பதிவாக இன்றைக் கும் எண்ணி நான் பூரித்துக் கொண்டிருக்கிறேன்.

அப்படிப்பட்ட அய்யாவினுடைய மறைவிற்குப் பின்னாலே, இன்றைக்கு அவருடைய கொள்கைகளை எடுத்து, இதுவரையிலும் அய்யா காலத்தில் இருந்ததை விட, விரிவடைந்திருக்கிறது. எல்லா நாடுகளுக்கும் சென்றிருக்கிறது. பல்வேறு மொழி பேசுபவர்களும், அய்யாவினுடைய தீர்க்கதரிசனங்களை உணர்ந்திருக் கிறார்கள் என்பதை எண்ணுகின்றபொழுது, ஒரு சரியான தொண்டரை, ஒரு பொருத்தமான தொண்டரை நமக்கு அய்யா அவர்கள் வழங்கி சென்றிருக்கிறார்கள்.

அந்த இளைஞன்தான் தமிழர் தலைவர் நம்முடைய ஆசிரியர் அவர்கள் என்பதை நான் இங்கே குறிப்பிட்டுக் காண்பிக்க விரும்புகிறேன்.

எந்த வகையிலும், எந்தக்
கோணத்திலும் நடுநிலை தவறாதவர்

எனவே, அய்யா அவர்கள் தேர்ந்தெடுத்து நமக்கு வழங்கியிருக்கின்ற அய்யாவின் தொண்டர், எந்த வகையிலும், எந்தக் கோணத்திலும் நடுநிலை தவறாது மனதில் பட்டதை எடுத்துச் சொல்கின்ற திறமையும், ஆற்றலும், துணிச்சலும் அய்யாவைப் போல் அவருக்கு உண்டு என்பதையும் எடுத்துச் சொல்ல விரும்புகிறேன்.
பெரியார் திடலும் -அய்யாவினுடைய அலுவலகமும் - திராவிட இயக்கங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு கலங்கரை விளக்கம்.

நாங்கள் அந்தக் கலங்கரை விளக்கத்தினுடைய வெளிச்சத்தினை நோக்கி கப்பல் செலுத்தவேண்டும். அய்யாவினுடைய கருத்துகள் எங்களுடைய அரசியல் பயணத்தில் சரியாக இருக்குமானால் ஏற்றுக்கொள் கிறோம்; ஏற்றுக்கொள்ள முடியாத அரசியல் நிர்ப்பந் தங்கள், சூழ்நிலைகள் இருக்குமேயானால், விமர்சனங் களுக்கு அப்பாற்பட்டு எங்களுடைய பயணம் தொட ரும். இதுதான் எங்களுடைய அணுகுமுறையாக இன்றைக்கு நான் பின்பற்றிக் கொண்டிருக்கின்றோம்.

இன்றைக்கு இந்திய நாட்டில், மத்திய அரசால் ஒரு மிகப்பெரிய அபாயகரமான சூழ்நிலை உருவாகயிருக்கிறது.

ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு

மத்தியில் ஆட்சி செய்துகொண்டிருக்கக்கூடிய பாரதீய ஜனதா கட்சியினுடைய ஆட்சி என்பது நரேந்திர மோடியினுடைய ஆட்சி என்பது, ஜாதீய வேறுபாடுகளை மறைமுகமாக, வேத கால ஆட்சியினுடைய ஆண்டான் அடிமை கொள்கை - சமஸ்கிருதம்தான் அகில இந்தியா வும் பரவிக் கிடக்கின்ற பாராட்டுக்குரிய மொழி என்கிற - வேத கால மனுதர்ம சாஸ்திர சமுதாயத்தை இந்திய நாட்டிலே உருவாக்குகின்ற முயற்சியில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அதனைத் தடுத்து நிறுத்தவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நாம் அந்தப் பணியை வேகமாக செய்யவில்லை என்று கருதுகிறார்களோ அல்லது இன்னும் முனைப்பாக செய்யவேண்டும் என்று எண்ணுகிறார்களோ அல்லது என்ன காரணமோ என்று தெரியவில்லை. மாணவர் போராட்டம் - இளைஞர் போராட்டம் - பக்கவாட்டில் ஒரு வெடிப்பாக இன்றைக்குக் கிளம்பியிருக்கிறது.

எனவே, இது நம்முடைய சிந்தனைக்குரிய, ஆழ்ந்த பரிசீலிக்கக் கூடிய ஒரு அரசியல் பிரச்சினையாக நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசியல் சட்டத்தில்
உரிய மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்!

இந்திய அரசியல் சட்டம் நம்முடைய போராட்டங் களுக்கு வலுவூட்டத்தக்க வகையில், இந்திய அரசியல் சட்டத்தில் உரிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டே தீரவேண்டும்.
எதற்கு ஜல்லிக்கட்டு மத்திய அரசினுடைய அனுமதி? அவர்களிடம் கேட்டுத்தான் இங்கே ஜல்லிக்கட்டை நடத்தவேண்டுமா?

இந்திய அரசியல் சட்டம் என்பது, பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டதைப்போல,
ஒரு உற்சாகக் களிப்பில் இருக்கின்றபொழுது, ஆழ மாக சிந்திக்காத ஒரு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நம்முடைய அய்யா பாபா சாகேப் அம் பேத்கர் அவர்களும், இன்னொரு இஸ்லாமிய பிரதிநிதியையும் தவிர்த்து, மற்றைய அந்த வரைவுக் குழுவில், எல்லோரும் அய்யர், அய்யங்கார்.

அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், டி.டி.கிருஷ்ணமாச் சாரி, கோபாலசாமி அய்யங்கார், கே.எம்.முனிஷி என்கிற குஜராத் அய்யர்.

ஆக, இவர்கள் அனைவரும் சேர்ந்து சில தடைக் கற்களை உருவாக்கியிருக்கிறார்கள். அந்தத் தடைக் கற்களையெல்லாம் விவரமாகப் பேசுவதற்கு கால அவகாசம் இப்பொழுது இல்லை.
இந்திய அரசியல் சட்டத்தை எப்படி மத்திய அரசு பயன்படுத்திக் கொண்டு, மாநிலங்களை  உள்ளாட்சி மன்றங்களாக ஆக்கிக் கொண்டிருக்கின்றது என்கிற விவரங்களையெல்லாம் சட்ட ரீதியாக உங்களுக்கு விளக்கிச் சொல்ல முடியும்.

நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் பேச வேண்டும்; நம்முடைய எழுச்சித் தமிழர் என்னுடைய அருமைச் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்கள் பேசவேண்டும் என்கிற காரணத்தினாலே,
ஆசிரியருக்கு மரபணு உரிமை இருக்கிறது

என்னுடைய மரியாதைக்குரிய நம்முடைய ஆசிரியர் அவர்களைக் கேட்டுக்கொள்வதெல்லாம், எங்களுடைய தலைவர் - எங்களுக்கெல்லாம் முகவரி கொடுத்த தலைவர் கலைஞர் அவர்கள், இன்றைக்கு முதுமையில் இருந்துகொண்டிருக்கிறார். எனவே, நீங்கள் ஆலோ சனை சொல்வதற்கும், வாழ்த்துவதற்கும், வாழ்த்துவதற்கு உங்களுக்கு வயது இருக்கிறது. ஆலோசனை சொல்வ தற்கும் உங்களுக்கு மரபணு உரிமை இருக்கிறது என் பதையும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எனவே, ஆலோசனைகள் சொல்வதில் எந்தவித மான ஆட்சேபணையும் எங்களுக்கு இல்லை. அந்த ஆலோசனைகளை நாங்கள் கேட்பதற்குக் கடமைப் பட்டிருக்கிறோம் என்பதை மட்டும் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி,நூறாண்டு காலம் வாழ்ந்து, வழிகாட்டவேண்டும்

அய்யாவினுடைய புகழைப் பரப்பிக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து, வழிகாட்டவேண்டும் என்று கேட்டு, விடைபெறுகிறேன், நன்றி வணக்கம்!

- இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக தீர்மானக் குழுத் தலைவர் பொன்முத்துராமலிங்கம் அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner