எழுத்துரு அளவு Larger Font Smaller Font

“மகளிர் விடுதலையே மனித குலத்தின் விடுதலை!”

மு.க.ஸ்டாலின் உலக மகளிர் தின வாழ்த்துச் செய்தி

சென்னை, மார்ச் 8 ஆதிக்கமற்ற சமுதாயம் அமைப்போம் என் பதே தி.மு.கழகத்தின் இலட் சியமாகும்.

எந்த வகை ஆதிக் கமாக இருந்தாலும் அதற்கு எதி ராகக் குரல் கொடுத்து, அடக்கப் பட்டு ஒடுக்கப்படுவோரின் நலன் காக்கும் திராவிட இயக்கம், அந்நாள் தொட்டு இந்நாள் வரை மகளிர் விடுதலைக்காகப் போரா டுவதிலும், அவர்களின் நலன் காத்து அவர்களுக்கான முன்னேற் றப் பாதையைச் செப்பனிட்டுக் கொடுப்பதிலும் முன்னணியில் உள்ளது. “பெண்ணடிமை தீரும் மட்டும் பேசும் திருநாட்டு மண் ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே” என்று திராவிட இயக்கத்தின் சார்பில் பாவேந்தர் குரல் கொடுத்ததை திமுக நினை வில்  கொண்டு செயலாற்றி வரு கிறது.

திராவிட இயக்கத்தின் முன் னோடியான நீதிக்கட்சி ஆட்சியில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டு, சட்டமன்றத்தில் அவர்களுக்கானப் பிரதிநிதித்து வம் கிடைத்தது. அதுபோல, 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் நிறைவேற்றிய பெண்களுக்கு சொத்துரிமை தீர் மானத்தை 60ஆண்டுகள் கழித்து, 1989ஆம் ஆண்டில் தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையிலான கழக அரசு சட்டமாக்கி, பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கியது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு, மகளிர் சுயஉதவிக்குழுக்கள் என அனைத்து நிலைகளிலும் மகளிர் முன்னேற்றத்திற்குத் துணை நிற்கும் தி.மு.கழகம், பெண் களுக்கு எதிரான கொடுமைகளை எதிர்ப்பதிலும் தடுப்பதிலும் தன் கடமைகளைத் தவறாமல் நிறை வேற்றி வருகிறது. மேலும் சட்டப்பேரவையிலும், நாடாளு மன்றத்திலும் மகளிர்க்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கிட வேண்டு மென்று திமுக அகில இந்திய அளவில் தொடர்ந்து போராடி வருகிறது.

கல்லூரி மாணவி சரிகாஷா ஈவ்டீசிங் கொடுமையால் பாதிக் கப்பட்டு உயிரிழந்த நிலையில், ஈவ்டீசிங் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, மாண விகள், -பெண்கள் ஆகியோரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது தமிழகத்தில் பெண் களுக்கு எதிரான பாலியல் கொடு மைகள் அதிகரித்துள்ள நிலை யில், அவற்றுக்கு எதிராக சட்ட மன்றத்திலும் மக்கள் மன்றத்தி லும் தி.மு.க ஓங்கிக் குரல் எழுப்பி திமுக தன்பங்களிப்பைச் செய்து வருகிறது.

சமுதாயத்தில் நிலவும் பாரம் பரியமான தடைகளைக் கடந்து பெண்கள் வெற்றி பெற்று வருகிறார்கள். அவர்களின் ஆற்றல் முன்எப்போதையும் விட பெருகி வருகிறது.  பெண்களின் முன்னேற்றத்தினால் தான் ஒரு குடும்பத்தின் முன்னேற்றமும் அதன் காரணமாக சமுதாயத்தின் முன்னேற்றமும் சீராக அமையும். தடைக் கற்களைப் படிக்கட்டு களாக்கிக் கொண்டு, பல துறை களிலும் முன்னேறி வரும் பெண் சமுதாயத்திற்கு உலக மகளிர் தினத்தில் மனமார்ந்த வாழ்த்து களைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner