எழுத்துரு அளவு Larger Font Smaller Font


‘இனமுரசு' சத்யராஜ் தொடங்கி வைத்தார் தமிழர் தலைவர் கையெழுத்திட்டார்

சென்னை, மார்ச் 11- ஈழத்தில் நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு காரணமான வர்கள் மீதான நடவடிக்கைகளை இழுத்தடித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை இனமுரசு சத்யராஜ் அவர்கள் இன்று (11.3.2017) காலை சென்னை  பிரஸ் கில்டு அரங்கில் தொடங்கி வைத்தார் - தமிழர் தலைவர் கையெழுத்திட்டார்.

இலங்கையில் தொடர்ந்து நடந்து வந்த உள்நாட்டுப் போரின் தொடர்ச்சியாக,

2008ஆம் ஆண்டு துவங்கிய இறுதிக் கட்டப்போரின்போது லட்சக்கணக்கான தமிழர்கள் பன்னாட்டு இராணுவ உதவியோடு (இந்தியா, சீனா உள்பட) கொன்று குவிக்கப்பட்டனர். இப்படு கொலை நடந்து 8 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், பன் னாட்டு நீதிபதிகளைக் கொண்டு போர்க்குற்ற விசாரணைக்கு ஒப் புக்கொண்ட இலங்கை அரசு தற்போது இழுத்தடித்து வருகிறது.

தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு இலங்கை அரசின் நீதியை மறைக்கும் செயலை மக்களுக்கு உணர்த்த வேண்டி இன்று (11.3.2017) சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றம் அருகில், பிரஸ் கில்டு அரங்கில் மாபெரும் கையெழுத்து இயக்கத் தினை முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழு சார்பில் காலை 9 மணிக்கு இனமுரசு சத்யராஜ் அவர்கள் தமிழர் தலைவர் முன்னிலையில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

இதையடுத்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கையெழுத்திட்டார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சி.மகேந்திரன், திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், கழக மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், ஓவியர் சந்தானம்,  அற்புதம் அம்மாள், த.வெள்ளையன், வழக்குரைஞர் பால்கனகராஜ் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்கள்,  இந்நிகழ்வில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு கையெழுத்திட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner