எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர்  தலைவர் வாழ்த்துசென்னை, மார்ச் 20 தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தனின் 85- ஆவது பிறந்தநாள் விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று (19.3.2017) கொண்டாடப்பட்டது.

தனது 85- ஆவது பிறந்தநாளில் தமி ழகம் முழுவதும் பூரண மதுவிலக்கு வேண்டி நடைபயணம் மேற்கொள்வேன் என்று குமரி அனந்தன் கூறியிருந்தார். அதன்படி காமராஜர் அரங்கில் இருந்து ராஜாஜியின் சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி நோக்கி குமரி அனந்தன் மதுவிலக்கு நடைபயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

85- ஆவது பிறந்தநாளை கொண்டாடிய குமரி அனந்தனுக்கு, தமிழர் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் சு.திருநாவுக்கரசர், இந் திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர்கள் ஆர்.நல்லக்கண்ணு, தா. பாண்டியன், செயலாளர் இரா.முத்தரசன், உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட  மற்றும் பலர்  நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் குமரி அனந்தன் பேசியதாவது:-

85- ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளால் நான் 25 வயது குமரி போல உற்சாகம் அடைந்திருக்கிறேன்.மதுவிலக்குக்காக தொடர்ந்து போராடுவேன். நடை பயணம் செல்வேன். நடக்க முடிய வில்லை என்றால் தவழ்ந்து போவேன். அதுவும் முடியவில்லை என்றால் உருண்டுஉருண்டுபோவேன்.அதுவும் முடியவில்லை என்றால் மதுவிலக்குக்கானமுயற்சியில்மாண்டு போவேன். நான் மாண்டு போகவேண் டுமா? என்பதை மத்திய அரசு தீர் மானிக்கட்டும். கொடிய மதுவை ஒழிக்க கொடியெடுத்து கொடுத்தவர்களின் எண்ணம் ஈடேற நடப்பேன். நல்லது நடக்க நடப்பேன். நடந்துகொண்டே இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதனையடுத்து சு.திருநாவுக்கரசர் காந்தி உருவப்படம் பொறித்த கொடியை குமரி அனந்தன் கையில் கொடுத்து பூரண மதுவிலக்கு நடைபயணத்தை தொடங்கிவைத்தார். காமராஜர் அரங்கில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு, குமரி அனந்தன் தனது நடைபயணத்தை தொடங்கினார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை குமரி அனந்தனின் தம்பியும், தமிழக காங்கிரஸ் துணைத்தலைவருமான எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ. செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner