எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பேராசிரியர் க. அன்பழகன் பேச்சு
ராயபுரம், மார்ச் 20 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு தண்டையார்பேட்டை சிக்னல் அருகே தி.மு.க. தேர்தல் பணி மனை இன்று திறக்கப்பட்டது.

இதை தி.மு.க. பொதுச் செய லாளர் பேராசிரியர் க.அன்பழகன் திறந்து வைத்து பேசியதாவது:- இங்கு வந்திருக்கும் கூட்டத்தை பார்க்கும் போது பேரறிஞர் அண்ணா 1967இ-ல் சென்னையில் கூட்டிய கூட்டத்தை போல் இருக்கிறது. தமிழகம் முழுவதும் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டா லின் சுழன்று செயல் ஆற்றுவது தொண்டர்கள், பொது மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாதாரண தொண்டனும் கடுமையான உழைப்பு இருந் தால் தி.மு.க.வில் நன்மதிப்பு, மரியாதை பெறலாம். அதற்கு ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் மருது கணேஷ் ஓர் உதாரணம். ஒரு கால கட்டத்தில் தி.மு.க. வட சென்னையில் வெற்றி பெற முடியாத நிலைமையை மாற்றி காட்டியிருக் கிறோம். ஆர்.கே.நகர் தொகுதியில் தி.மு.க. முழு வெற்றியை பெறும். தோழமை கட்சிகளோடு இணைந்து பணியாற்றி வெற்றியை பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


ராமேசுவரம் மீனவர்கள் குழு நாளை மத்திய அமைச்சருடன் சந்திப்பு
ராமேசுவரம், மார்ச் 20 மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவும், கோரிக்கை மனு கொடுக்கவும் ராமேசுவரம் மீனவர்கள் குழு மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்திக்க உள்ளது.

இதற்காக பா.ஜனதா மாநில துணைத்தலைவர்கள் குப்புராம், சுப.நாகராஜன், மாவட்ட தலைவர் முரளிதரன் மற்றும் மீனவர் சங்க பொறுப்பாளர்கள் தேவதாஸ், சேசுராஜா, யு.அருளானந்தம், ஜெஸ்டின் ஆகியோர் அடங்கிய மீனவர்கள் குழு இன்று காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் டில்லி செல்கின்றனர்.

நாளை (21-ஆம் தேதி) காலை 11 மணிக்கு டில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வெளியுற வுத்துறை செயலர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்து மீனவர்கள் கோரிக்கைகள் குறித்து மீனவர்கள் குழுவினர் மனுகொடுத்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner