எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நிதி மேலாண்மை மோசமானதால் அரசு நிர்வாகம் நிலை குலைவு
மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, மார்ச் 25 அரசின் நிதி மேலாண்மை மோசமான தால் அரசு நிர்வாகம் நிலை குலைந் துள்ளதாக சட்டப் பேரவை எதிர்க்கட்சித்  தலைவர்  மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டி னார்.

சட்டப்பேரவையில் நேற்று (24.3.2017) நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் அவர்
பேசியதாவது:

அமைதி இல்லை

அரசின் தலைமைச் செய லாளர் இடைநீக்கம் செய்யப் பட்ட நிலை இந்த ஆட்சியில் தான் நடந்துள்ளது. அதிமுக ஆட்சியில்தான் இன்னொரு தலைமைச் செயலாளர் வீட்டி லும் சோதனை நடந்துள்ளது. இதைவிடக் கொடுமை தமிழக டி.ஜி.பி. ஆக இருந்தவரை நள்ளிரவில் பதவியிலிருந்து நீக்கியதும் இந்த ஆட்சியில் தான். ஆக தமிழகத்தில் அமைதி இல்லை, வளம் இல்லை, வளர்ச்சியும் இல்லை, மக்கள் வாழ்வில் மலர்ச்சியும் இல்லை.

பெட்ரோல் வரி உயர்வு

நிதி நிலை அறிக்கை தாக் கல் செய்வதிலேயே ஒரு முரண் பாடு; அதாவது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படு வதற்கு முன்பே பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்த் தப்பட்டது. இதுவரை மத்திய அரசுதான் பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி அறிவிப்பார்கள். ஆனால் இந்த முறை மாநில அரசு அறிவித் திருக்கும் கொடுமை அரங்கேறி யுள்ளது.

கடன் அதிகரிப்பு

2016--17 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.2.52 லட்சம் கோடி கடன். 2017--18 நிதிநிலை அறிக்கையில் ரூ.3.14 லட்சம் கோடி என்று அதிகரித் துள்ளது. இதேபோல் 2016--17-இல் வருவாய் பற்றாக்குறை ரூ.9,154 கோடி. இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.15,930 கோடி, 2016--17 நிதிநிலை அறிக்கையில் நிதிப் பற்றாக் குறை ரூ.40,533 கோடி, இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.41,977 கோடி. இந்த வேற்றுமையைத் தவிர வேறெதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் பெரிதாக இல்லை. 2006 மே மாதம் அதிமுக அரசு ரூ.4,200 கோடி என்ற நிலையில் மூலதன முதலீட்டை விட்டுச் சென்றது. ஆனால் திமுக ஆட்சி இருந்த போது 2011 மே மாதம் ரூ.13,926 கோடி என்ற நிலையில் மூல தன முதலீட்டை விட்டுச் சென் றது. இது அதிமுக 2006 இல் விட்டுச் சென்றதை விட 331 சதவீதம் அதிகம்.

தற்போது உங்கள் ஆட்சி யில் 2016 மே மாதத்தில் இந்த மூலதன முதலீடு ரூ.18,994 கோடியாக இருந்தது. அதாவது 136 சதவீதம் மட்டுமே அதிகம். இதுதான் திமுக ஆட்சிக்கும் அதிமுக ஆட்சிக்கும் உள்ள வேற்றுமை.

திட்டங்கள் இல்லை

உள்கட்டமைப்புத் திட்டங் களும் இல்லை, மெகா குடிநீர் திட்டங்களும், புதிய குடிநீர்த் திட்டங்களையும் என்னால் காண முடியவில்லை. இந்த இரு நிதிநிலை அறிக்கைகளி லும் நிதிப் பற்றாக்குறை இருக் கிறது, வருவாய்ப் பற்றாக்குறை இருக்கின்றது, கடன் சுமை இருக்கிறது. இதுதான் தமிழக நிதிநிலை அறிக்கையின் இலக் கணமாக இருந்து கொண்டு இருக்கிறது. நிதி நிலைமை மோசமானால் நிதி நிர்வாகம் படுமோசமாகும், நிதி நிர் வாகம் மோசமானால் அரசு நிர்வாகம் முடங்கி நிற்கும். இதுதான் தமிழக அர சில் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு:
சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சென்னை, மார்ச் 25 தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 16-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 2017-2018ஆம் ஆண்டுக் கான பட்ஜெட்டை நிதிய மைச்சர் டி.ஜெயக்குமார் தாக் கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் முடிந்ததும் சபையை 20-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

3 நாட்கள் விடுமுறையைத் தொடர்ந்து மார்ச் 20இ-ல் கூட்டத் தொடர் தொடங்கியதும் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் தெரி விக்கப்பட்டது. பின்னர் பட் ஜெட் மீது பொது விவாதம், முன்பண மானியக் கோரிக் கைகள் தாக்கல் மற்றும் வாக் கெடுப்பு, மானியக்கோரிக்கை குறித்த நிதி ஒதுக்க சட்ட முன் வடிவு அறிமுகம் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. பேரவைத் தலைவர் ப. தனபால் மீது தி.மு.க. கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர் மானம் மீதும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், நம்பிக் கையில்லா தீர்மானம் தோல்வி யடைந்தது. கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று (24.3.2017) நிதியமைச்சர் ஜெயக் குமார் பதிலுரை வழங்கினார். அத்துடன் அரசினர் சட்ட முன் வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. பட் ஜெட்  கூட்டத்  தொடர் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதை யடுத்து சட்டசபையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப் பதாக பேரவை தலைவர் தனபால் அறிவித்தார்.


சேலம் உருக்காலையை தாரைவார்க்க மத்திய அரசுக்கு ஒத்துழைக்க மாட்டோம் அமைச்சர் உறுதி

சென்னை, மார்ச் 25 மத்திய பாஜக அரசு சேலம் உருக் காலையை தனியாருக்கு தாரை வார்க்க முயன்றாலும் மாநில அரசு ஒருபோதும் அனுமதிக் காது என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் சட்டப் பேரவையில் அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று (24.3.2017) நிதி நிலை அறிக்கை மீது நடந்த விவாதத்தின்போது சேலம் இரும்பு உருக்காலையைத் தனியாருக்குத் தாரைவார்க்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி சட்டமன்றக்குழுத் தலைவர் இராமசாமி வலியுறுத்தினார்.விளக்கமளித்துப் பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், சேலம் உருக் காலை மத்திய அரசின் நிறு வனமாகும். இந்த நிறுவ னத்தை மத்திய பாஜக அரசு தனியாருக்கு தாரைவார்க்க முயல்கிறது. மாநில அரசைப் பொறுத்தமட்டில் அதை ஒரு போதும் அனுமதிக்காது என் றார். என்எல்சி பங்குகளை மத்திய அரசு தனியாருக்கு விற்க முயன்றபோது மாநில அரசே வாங்கிக்கொண்ட முன்னுதார ணம் உள்ளது என்றும் அமைச் சர் குறிப்பிட்டார்.

திமுக சார்பில் பேசிய துரை முருகன், சேலம் உருக்கா லையை தனியாருக்கு விற்கத் துடிக்கும் மத்திய அரசை எதிர்த்து அதிமுக கிளர்ச்சிப் போராட் டத்தை நடத்த வேண்டும். அதற்கு திமுகவும் துணை நிற்கும். மக்களவை உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைப்போம் என்றும் மத்திய அரசுக்கு மிரட்டல் விடுக்க வேண்டும் என்று கூறினார்.


ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை : பேரவையில் அரசு தகவல்
சென்னை, மார்ச் 25 ஏழா வது ஊதியக் குழு பரிந்துரைகள் எப்போது நடைமுறைப் படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதி-மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பதிலளித்தார்.
சட்டப் பேரவையில் நேற்று (24.3.2017) நிதிநிலை அறிக்கை மீது நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து அவர் வெள்ளிக் கிழமை பேசியது: ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளுக்கு நிதி ஒதுக்கவில்லை என பேரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்கென நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு பரிந்துரைக்கும் போதுதான் நிதிச் சுமை எவ் வளவு எனத் தெரியும். அதன் அடிப்படையில் திருத்த மதிப் பீடுகளில் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்தக் கூடுதல் செலவுக்கான நிதி ஆதாரங் களும் அப்போது கண்டறியப்படும்.
உதய் திட்டம் இல்லாவிட் டால்....மார்ச் 31-ஆம் தேதி நில வரப்படி, அரசு கடன் ரூ.2.72 லட்சம் கோடியாக இருக்கும். ரூ.22,815 கோடி மின்சார வாரி யத்தின் கடனை அரசு ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்டது. இல்லையென்றால், அரசின் கடன் மார்ச் 31 நிலவரப்படி ரூ.2.50 லட்சம் கோடியாகத்தான் இருந்திருக்கும். பொது நிறுவ னங்களின் கடன் இந்த ஆண்டு இறுதியில் ரூ.94,000 கோடி அளவு மட்டுமே இருக்கும். அடுத்த நிதியாண்டு இறுதியில் அரசின் கடன் அளவு ரூ.3.14 லட்சம் கோடியாகும் என்றார் ஜெயக்குமார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner