எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மார்ச் 26- தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு நேற்று  (25.3.2017) பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செய்தியா ளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில் களும் வருமாறு:-

கேள்வி:- சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் மாற்றப்பட்டு இருக்கிறாரே?

பதில்:- தேர்தல் ஆணையம் முறையாக செயல்பட வேண் டும் என்று தொடர்ந்து நாங்கள் ஏற்கனவே பலமுறை சொல்லி வலியுறுத்தி வந்திருக்கிறோம். தி.மு.க. சார்பாக எங்களுடைய அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அதேபோல நாடாளு மன்ற உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் ஆணையரை சந் தித்து, சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருக்கக் கூடிய ஜார்ஜை மாற்றிட வேண்டும், அதேபோல ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை மாற்றிட வேண்டும் என்று எடுத்து வைத்த கோரிக்கை நியாயமானது என்பதை தேர்தல் ஆணை யம் உணர்ந்த காரணத்தினால் தான் இந்த மாற்றம் நடந்திருக் கிறது.

கேள்வி:- நீங்கள் எப்போது பிரச்சாரத்தை தொடங்க இருக் கிறீர்கள்?

பதில்:- தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் 28-ஆம் தேதி தி.மு.க. கூட்டணி யில் இடம் பெற்று இருக்கக்கூடிய எல்லா கட்சிகளின் தலை வர்களும் பங்கேற்கக்கூடிய வகையில், ஒரு பொதுக்கூட்டம் ஆர்.கே. நகரில் நடைபெற இருக்கிறது.

கேள்வி:- ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா நடக்கிறது என்று மதுசூதனன் சொல்லி இருக்கிறார். தி.மு.க. சார்பாக இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் படுமா?

பதில்:- இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் தொடர்ந்து சொல்லி வருகிறோம். விரைவில் ஆதாரங்களோடு நாங்கள் இந்த செய்தியை மீண்டும் தேர்தல் ஆணையத்தில் வலியுறுத்துவோம்.

கேள்வி:- பன்னீர்செல்வத்துடன் தி.மு.க. இணைந்து செயல்படுகிறது, அ.தி.மு.க.வை அழிப்பதற்கான முயற்சியில் தி.மு.க. ஈடுபட்டு இருக்கிறது, எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபட்டுள்ளர்கள் என்று டி.டி.வி.தினகரன் பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்திருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அதாவது, தனக்கு ஒரு விளம்பரம் தேடிக்கொள்வ தற்காக இப்படிப்பட்ட செய்திகளை சொல்வதற்கெல்லாம் பதில் சொல்லி என்னுடைய தரத்தைத் தாழ்த்திக்கொள்ள என்றைக்கும் நான் தயாராக இல்லை.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner