எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சமூக நீதி தலைவர்களை தேச விரோதிகள் என

கொச்சைப்படுத்தி பேசிய எச்.ராஜாவிற்கு கடும் கண்டனம்

உணரத் தவறினால் நடவடிக்கை மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை

சென்னை, ஏப். 1- தேசபக்தி  தனக்கு மட்டுமே நிரந்தர குத்த கைக்கு விடப்பட்டது போல மற்றவர்களை தேச விரோதிகள் என்று பேசுவதை பா.ஜ.க., தேசியச் செயலாளர் எச்.ராஜா அவர்கள் உடனடியாக நிறுத் திக் கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று (31.3.2017) விடுத்துள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

அன்னை சோனியா காந்தி அவர்களை தரக்குறைவாக விமர்சித்திருக்கும் பாரதீய ஜனதா கட்சியின் தேசியச் செய லாளர் எச்.ராஜா அவர்களுக்கு எனது கண்டனத்தை தெரிவித் துக் கொள்கிறேன்.

நாகரீகமான அரசியலை யும், ஆரோக்கியமான விவா தங்களையும் விரும்புகிறோம் என்று கூறி வரும் பா.ஜ.க.,வின் தேசியத் தலைவர்கள் எச்.ராஜா போன்றவர்களின் பேச்சுக்க ளுக்கு எப்படி ஆக்கமும் ஊக்க மும் அளித்து, அவருக்கு ரயில்வே துறையிலும் அரசு பொறுப்பை வழங்கியிருக்கி றார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

சமூகநீதியின் திருவுருவம் தந்தை பெரியார்

சமூக நீதியின் திருவுருமாக இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் மனதில் வாழும் தந்தை பெரி யார் அவர்களை ஏற்கனவே கொச்சைப்படுத்தி பேசிய எச். ராஜா பிறகு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா அவர்களின் மகனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் தொனியில் கொடூர மாக மிரட்டினார். இப்போது தியாகத்தின் உருவமாக திக ழும் அன்னை சோனியா காந்தி அவர்களை கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். பத்திரிக்கை யாளர்கள் கேள்வி கேட்டால் நீ இந்திய விரோதி என்று ஆவேசமாகவும், ஆணவமாக வும் கை நீட்டிப் பேசுகிறார். நாம் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தரக்குறைவாக விமர்சிக்கலாம். மிரட்டும் தொனியில் பேச லாம். நம்மை யார் என்ன செய்ய முடியும்? என்ற ஆதிக்க மனப்பான்மையில் இருந்து எச்.ராஜா விடுபட முடியாமல் தவிப்பது தெரிகிறது. தமிழக பா.ஜ.க.,விற்குள் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதினால் அதற்கு அவர் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடலாமே தவிர, இது போன்று பத்திரிக் கையாளர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும், தேசம் போற்றும் தலைவர்களை யும் அநாகரீகமாக விமர்சிப்பது அவர் வகிக்கும் அரசு பதவிக் கும் அழகல்ல. அவர் சார்ந்தி ருக்கும் ஒரு தேசிய கட்சிக்கும் ஏற்ற இலக்கணம் அல்ல.

உணரத் தவறினால் நடவடிக்கை

தேசபக்தி என்பதும் இந்தி யன் என்பதும் ஏதோ தனக்கு மட்டுமே நிரந்தர குத்தகைக்கு விடப்பட்டது போல மற்றவர் களை தேச விரோதிகள் என் றும் இந்திய விரோதிகள் என் றும் பேசுவதை அவர் உடனடி யாக நிறுத்திக் கொள்ள வேண் டும். தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதையும், தேச பக்தியில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்ப தையும் எச்.ராஜா போன்றவர் கள் உணர்ந்து கொள்ள வேண் டும். அவர் உணரத் தவறினால் பா.ஜ.க.,வின் தேசிய தலைமை தந்தை பெரியார், அன்னை சோனியா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோர் மீது அவதூறான கருத்துக்களைப் பேசும் எச்.ராஜா அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner