எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 2- தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க் கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் நேற்று (1.4.2017) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்ட ணத்தை உயர்த்தி தமிழக மக்க ளின் தலையில் மீண்டும் ஒரு கட்டண சுமையை ஏற்றி வைத் திருக்கிறது மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம்.

இந்த கட்டண உயர்வால் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச் சாவடிகளின் வழியாக செல் லும் வாகனங்கள் இனி அதிக கட்டணத்தை செலுத்த வேண் டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத் தில்தான் சுங்கச்சாவடி கட்ட ணங்கள் உயர்த்தப்பட்டன. அதற் குள் இன்னொரு சுங்கச்சாவடி கட்டண உயர்வு என்பது சரக்கு கட்டண உயர்வுக்கு வித்திட் டுள்ளது. இதன்மூலம் அத்தியா வசிய பொருள்களின் விலை மேலும் அதிகரித்து அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்க ளுக்கு மிகப்பெரிய இன்னல் களைத் தோற்றுவித்துள்ளது.

மக்களுக்கு பொது சேவை களை வழங்க வேண்டியது ஒரு அரசின் கடமை. ஆனால் சுங் கச்சாவடிகளில் கட்டணம், வங்கிகளில் எதற்கெடுத்தாலும் கட்டணம், மானியங்கள் ரத்து என்று பல்வேறு நடவடிக்கை கள் மூலம் நாட்டில் உள்ள மக் கள் அனைவருமே அரசு வழங்க வேண்டிய அத்தியாவசியமான பொது சேவைகளுக்குக்கூட அத்துமீறிய கட்டணங்களை செலுத்தும் நிலை உருவாகியிருக்கிறது. ஒரு அரசாங்கமே எதற்கெடுத்தாலும் மக்களிடம் இருந்து கட்டண வசூல் செய்வது மக்களால் மக்களுக் காக மக்களே ஆட்சி செய்யும் ஜனநாயக பாதையில் இருந்து விலகிச் செல்லும் ஆபத்தான போக்காகவே நான் கருதுகி றேன்.

சுங்கச்சாவடிகளில் உயர்த் தப்பட்ட கட்டணத்தை எதிர்த்து ஏற்கனவே போராட்டங்களை தொடங்கி லாரி உரிமையாளர் கள் தங்கள் லாரிகளை நிறுத்தி விட்டார்கள். இதனால் காய்கறி கள் உள்ளிட்ட பல்வேறு அன் றாட தேவைக்குரிய பொருட் கள் எல்லாம் எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகி அடித் தட்டு மக்கள் முதல் வியாபா ரிகள் வரை அனைவரும் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கி றார்கள். தமிழகத்திலும் 5 லட் சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை என்பதால் மக்க ளின் அன்றாட வாழ்க்கை  நிலை குலைவு ஏற்பட்டுக்கொண்டிருக் கிறது.

ஆகவே, சுங்கச்சாவடிகள் கட்டணத்தை உடனடியாக திரும் பப்பெற வேண்டும் என்றும், 20 ஆண்டுக்கும் மேலாக கட் டணங்களை வசூலிக்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங் கச்சாவடிகளை மூடவேண்டும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தையும், மத் திய அரசையும் கேட்டுக்கொள்கி றேன். இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner