எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

முழு வீச்சில் செயல்படுவதற்கு அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஏப். 4- சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிறுவப் பட்ட திராவிட இயக்க ஆராய்ச்சி மய்யம் முழு வீச்சில் செயல் படுவதற்கு அதிமுக அரசு உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள்.

இது குறித்து அவர் நேற்று (3.4.2017) வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:

தலைவர் கலைஞர் அவர் கள் முதலமைச்சராக இருந்த போது, சென்னைப் பல்கலைக் கழகத்தில் நிறுவப்பட்டுள்ள திராவிட இயக்க ஆராய்ச்சி மய்யம் அதிமுக ஆட்சியில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது என்று வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

திராவிட இயக்க வரலாறு களை எதிர்காலத் தலைமுறையினருக்குக் கொண்டு சேர்க்கும் சிறப்புமிக்க இந்த மய்யத்தை திராவிட என்ற சீரிய பெயரை தன் கட்சியின் பெயரில் வைத் துக் கொண்டு நாட்டு மக்களை நாள்தோறும் ஏமாற்றிக் கொண் டிருக்கும் அதிமுக அரசு செய லிழக்க வைத்திருப்பது திராவி டர் இனத்தைச் சேர்ந்த அனை வரது நெஞ்சங்களிலும் எரிம லையாகக் கனன்று கொண்டி ருக்கிறது.

தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் திரா விட முன்னேற்றக் கழக அரசு அமைந்த 2006-ஆம் ஆண்டில் திராவிட இயக்க ஆராய்ச்சி மய்யத்திற்கான விதை இடப் பட்டது. குறிப்பாக 2006-2007 நிதி நிலை அறிக்கையை பேர வையில் தாக்கல் செய்து பேசிய பேராசிரியர் பெருந்தகை அவர் கள் சென்னை பல்கலைக்கழ கத்தின் 150ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

எதிர்கால தலைமுறைக்காக

அதில், எதிர்காலத் தலை முறை திராவிட இயக்கம் பற்றி அறிந்து கொள்வதற்கு வழி வகுக்கும் வகையில் திராவிட இயக்கம் பற்றி ஆய்வு மேற் கொள்ள சென்னை பல்கலைக் கழகத்தில் திராவிட இயக்க ஆராய்ச்சி மய்யம் நிறுவப்படும் என்று அறிவித்தார். இந்த நிதி நிலை அறிவிப்பிற்கு செயல் வடிவம் கொடுக்கும் விதத்தில் உடனடியாக சென்னைப் பல் கலைக்கழக துணை வேந்தரின் பரிந்துரையைப் பெற்று, 12.12.2006 தேதியிட்ட அரசு ஆணை எண் 399-இன்படி திரா விட இயக்க ஆராய்ச்சி மய்யம் சென்னை பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டது.

பகுத்தறிவு - பாலின நீதி இருக்கை

அந்த ஆராய்ச்சி மய்யம், 1) பெரியார் ஈ.வெ.ரா பகுத்தறிவு மற்றும் பாலின நீதி இருக்கை 2) அறிஞர் அண்ணா தமிழ் மொழி வளர்ச்சி மற்றும் அரசியல் சிந்தனை இருக்கை. 3) சமூக, பொருளாதார, சம நீதி இருக்கை 4) மத்தியில் கூட் டாட்சி மாநிலத்தில் சுயாட்சி இருக்கை ஆகிய நான்கு இருக் கைகள் கொண்டதாக செயல் படும் என்றும் தெளிவுபடுத்தப் பட்டது. அது மட்டுமின்றி இந்த மய்யத்திற்கு அதே அர சாணையில் 3.9 கோடி ரூபாய் நிதியினை அனுமதித்து, அதில் ஒரு கோடி ரூபாய் உடனடியாக சென்னை பல்கலைக்கழகத் திற்கு வழங்கப்பட்டது. மீத முள்ள 2.9 கோடி ரூபாயை மனித வள மேம்பாட்டுத்துறை வழங்கும் நிதியிலிருந்து செலவு செய்யவும் அந்த அரசாணையில் அனுமதி வழங்கப்பட்டது.

இப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்க திராவிட இயக்க ஆராய்ச்சி மய்யத்திற்கு ஒதுக்கிய நிதியை செலவு செய்யவில்லை என்பது ஒருபுறமிருக்க, 2013ஆம் ஆண் டில் 1.14 கோடி ரூபாய் நிதி கேட்டு உயர்கல்வித்துறைக்கு சென்னை பல்கலைக்கழகம் விடுத்த கோரிக்கையையும் அதிமுக அரசு ஏற்கவில்லை என்பது திராவிட இயக்க வரலாறு வெளியே தெரிந்து விடக்கூடாது என்பதில் ஆட்சியிலிருந்த அதிமுக அரசு எவ் வளவு கீழ்த்தரமாக செயல் பட்டுள்ளது என்பது தெரிய வந்திருக்கிறது. திராவிட இயக் கத்தின் பெருமைகளை இருட் டடிப்பு செய்யவும், இளைய தலைமுறையினர் அந்த வர லாற்றை- குறிப்பாக சம நீதி, சமூக நீதி வரலாற்றை அறிந்து கொண்டு விடக்கூடாது என்ற திராவிட எதிர்ப்பு வஞ்சக எண் ணத்துடன் அதிமுக அரசு இந்த மையத்தை முடக்கி வைத்தது என்பது மிகுந்த வேதனைய ளிக்கிறது.

கடும் கண்டனத்திற்குரியது

நீதிக்கட்சியின் வரலாறு, திராவிட இயக்க போராட்டம் மற்றும் கறுப்பர் இனப் போராட் டங்களை ஒப்பீடு செய்த ஆய் வுகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான ஆய்வுகள், புத்தகங் கள், மொழிபெயர்ப்புகள் வெளி யிட உருவாக்கப்பட்ட திராவிட இயக்க ஆராய்ச்சி மய்யத்தை அதிமுக அரசு செயலிழக்க வைத்தது திராவிட சமுதாயத் திற்கு செய்த மாபெரும் துரோ கம். முன்னாள்  முதல்வர் அம் மையார் ஜெயலலிதா அவர் களை சிறையில் சென்று சந் தித்த ஒரே காரணத்திற்காக சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியைப் பெற்ற தாண்டவன் இப்படி யொரு துரோகத்திற்குத் துணை போயிருப்பது கடும் கண்டனத் திற்குரியது.

அவசரகால நடவடிக்கை தேவை

ஆகவே திராவிட இயக்க ஆராய்ச்சி மய்யம் முழு வீச்சில் செயல்படுவதற்கு அதிமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முத லமைச்சர் எடப்பாடி பழனிச் சாமி அவர்களை கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் சென்னை பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர்களாக இருக் கும் திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்க ளிடமும் திராவிட இயக்க ஆராய்ச்சி மய்யத்தை இயங்க வைக்க அவசரகால நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருக்கிறேன் என்ப தையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகி றேன்.