எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தூத்துக்குடி, ஏப்.6- தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 54ஆவது தேசிய கடல் சார் வாணிப தினத்தை முன்னிட்டு இழுவை கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு நடந்தது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்5ஆம் தேதி தேசிய கடல்சார்வாணிப தினமாக கொண்டாடப் பட்டு வருகிறது. நடப்பாண்டில், 54ஆவது தேசிய கடல்சார் வாணிப தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் உள்ள மாலுமிகள் நினைவிடத்தில் வ. உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகத் தலைவர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் துறைமுக 8ஆவது சரக்கு தளத்தில் தேசிய கடல்சார் வாணிப தினம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து இழுவை கப்பல்களின் கண்கவர் அணிவகுப்பு நடந்தது.பின்னர் கப்பல் களில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து மீட்பு நடவடிக்கை மேற்கொள்வது போன்றுஇழுவை கப்பல்களில் இருந்து தண்ணீர் பீய்ச்சி அடித்து காண்பிக் கப்பட்டது. இதன்பின் இழுவை கப்பலான தூத்துக்குடி சார்பில் சாகச நிகழ்ச்சி நடத் தப்பட்டது. இந்த இழுவை கப்பல் செய்த சாகசநிகழ்ச்சிகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner