எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இராஜபாளையம், ஏப்.6- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் கே.தொட்டியபட்டியில் கடந்த மார்ச் 29 அன்று அருந்ததியர் மக்கள் ஜாதி ஆதிக்க சக்தியினரால் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு வீடு உடைமைகளை இழந்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, விடு தலை சிறுத்தைகள் கட்சி, ஆதி தமிழர் கட்சிஆகியவை ஒருங்கிணைந்து பாதிக் கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவி களை செய்வதோடு அவர்களுக்கு உரிய நிவாரணத்தை பெறுவதற்காக பல்வேறு முயற்சிகள், போராட்டங்களை நடத்து வதற்கு ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இந்நிலையில் புதனன்று தேசிய ஆதி திராவிடர் நலஆணையத்தின் சார்பில் உறுப்பினர் கள் மற்றும் அலுவலர்கள் நேரடியாக கே.தொட்டியபட்டி கிராமத் திற்கு வந்துஆய்வு செய்தனர்.

முன்னதாக தாக்குதல்களுக்கு உள் ளாகி ராஜபாளையம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் கிராம மக்களை நேரில் பார்த்து விவ ரங்கள் கேட்டறிந்தனர். பின்னர் அருந் ததியர் காலனியில் பாதிப்புக்குள்ளான மக்களை சந் தித்து பாதிப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தனர். தீக்கிரையான வீடுகளின் உரிமையாளர்கள் ஆணைய உறுப்பினரிடம் வீடு இழந்ததை பற்றி விரிவாக எடுத்துக் கூறினர். ஆணைய உறுப்பினர்கள் லிங்க்ஸ்டன் மற்றும் இனியன் ஆகியோரிடம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் முருகேசன், செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் பாதிப்பு விபரம் பற்றியஅறிக்கையை மனுவாக கொடுத்தனர். அதை பெற்றுக் கொண்ட ஆணையத்தினர் விரைவில் உறுதியான நடவடிக்கை மேற்கொள் வோம் என்று கூறினர்.

பள்ளியில் ஆய்வு

பின்னர் பிரச்சினைக்குக் காரணமான இடமாகிய மயானம் மற்றும் அருகில் உள்ள குடிநீர்க் குழாய் ஆகியவற்றை நேரில் பார்த்தனர். பின்னர் ஆணையத் தினரிடம் பேசிய காலனிமக்கள் பள்ளியில் எங்கள் பிள்ளைகளை பாத் ரூமை கழுவச் சொல்கிறார் கள் என்று கூறினர். அதையடுத்து நேரிடையாக அருகில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு சென்று தலைமையாசிரியரை சந்தித்து விவரம் கேட்டறிந்தனர்.

பேட்டி

ஆணையத்தின் உறுப்பினரான லிவிங்க்ஸ்டன், இனியன் ஆகிய இருவரும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். சம்பவம் நடைபெற்ற 29.3.2017அன்று இரவே மாவட்ட ஆட்சி யரும், காவல்துறை கண்காணிப்பாளரும் வந்து சம்பவ இடத்தைபார்வையிட்டது நல்ல நடவடிக்கை. சம்பவத்தில் பாதிக் கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங் கப்பட வேண்டும். அதே நேரத்தில் பாதிப்புக்கு தகுந்தவாறு நிவாரண உதவிகள் வழங்கப்பட வேண் டும். மேலும், சம்பவத்தை யொட்டி மக்கள் தங்குவதற்கு இடமில்லாமல் உணவும் இல்லாமல் உள்ளனர். இந் நிலை மாற வேண்டும்.

தற்காலிக பந்தல்

அரசு தரப்பில் சம்பவம் நடந்த அன்று இரவு, மறுநாள் காலை, மதியம் ஆகிய 3 வேளை மட்டும் உணவுகள் வழங்கப்பட்டுள்ளன. சமுதாயக்கூடம் சிறிதாக இருப்பதால் முழுமையாக மக்கள் தங்க முடியாத சூழல் உள்ளது.அருகில் தற்காலிகமாக பந்தல் அமைத்து அவர்களை தங்க வைக்கலாம். அப்படி அமைக்கும்பொழுது பாதிபேர் பந்தலிலும் பாதி பேர் சமுதாயக் கூடத் திலும் தங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. எஸ்சி, எஸ்டி சட்டத்தில் உள்ளதுபோல் உரிய முறையில்நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கு வேண்டிய நடவடிக்கை களை நாங்கள் எடுப்போம் என்று கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner