எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப். 9- சென்னை எழும் பூர் இராசரத்தினம் விளை யாட்டரங்கம் அருகிலிருந்து  டாஸ்மாக் ஏஅய்டியூசி மாநிலத் தலைவர், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் நா.பெரியசாமி தலைமையில் பேரணி இன்று (9.4.2017) காலை நடைபெற்றது.

தமிழ்நாடு ஏஅய்டியூசி பொதுச்செயலாளர் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டி.எம்.மூர்த்தி, துணைத் தலைவர் ஆ.மோகன், பொதுச்செயலாளர் டி.தனசேகரன் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங் குன்றன் டாஸ்மாக் பணியாளர் களின் கோரிக்கைப் பேரணிக்கு திராவிடர் கழகத்தின் ஆதரவி னைத் தெரிவித்து சிறப்புரை யாற்றினார்.

இப்பேரணிக்கு காங்கிரசு கட்சி, விடுதலைசிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட கட்சி உள்பட பல் வேறு அமைப்பினரும் ஆதரவி னைத் தெரிவித்துள்ளார்கள்.

பணி இழந்த பணியாளர்கள் அனைவருக்கும் மாற்றுப்பணியினை அரசு வழங்க வேண் டும், பணி இழந்த அனைத்து பணியாளர்களுக்கும் அரசில் காலியாக உள்ள 2 லட்சம் பணியிடங்களில் பணியமர்த்த வேண்டும், பணியிழந்த பணி யாளர்களை உடனடியாக பணி இழப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கைகள் பேரணியில் வைக்கப்பட்டன.

பேரணியில் மணிகண்டன், கோவிந்தராஜ், த.காரல் மார்க்ஸ், சரவணன், அழகு முத்து, பால சந்தர், நெப்போலியன், மணி கண்டன், சொக்கலிங்கம், இளங் கோவன் உள்ளிட்ட  ஏஅய்டி யூசி டாஸ் மாக் மாநில மய்யத் தின் நிர்வாகிகள், பணியாளர் கள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner