எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சட்டமன்ற சிறப்புக்கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் எச்சரிக்கை
அய்தராபாத், ஏப். 20- முசுலீம் களுக்கு இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றுவதில் நாங்கள் பிச்சை எடுக்கமாட்டோம்,  மத் திய அரசுக்கு எதிராக போராடு வோம் என்று தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் மத்திய அரசுக்கு எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

முசுலீம்களுக்கும், பழங்குடியினத்தவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்குவதில் தேவைப்பட்டால் உச்சநீதிமன் றத்தை அணுகுவோம் என்று தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர்ராவ் 16.4.2017 இல் நடைபெற்ற தெலங்கானா மாநில சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் கூறினார்.

முசுலீம்கள், பழங்குடியி னத்தவர்கள் மற்றும் தாழ்த்தப் பட்டவர்கள் ஆகியோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலம், அவர்கள் சந்தித்து வரு கின்ற பாகுபாடுகளிலிருந்து விடு பட, அவர்களுக்கு உரிய விகி தாச்சாரத்தின்படி    வாய்ப்புகள் அளித்திட வேண்டும் என்று தெலங்கானா மாநில அரசு தன்னை ஒப்படைத்துக்கொண்டு உள்ளது.

முதல்வர் சந்திரசேகர்ராவ் கூறும்போது, “முசுலீம்கள், பழங்குடியினருக்கான இட ஒதுக் கீடு வழங்குவதற்கான சட்டம் ஒரே இரவில் நிறைவேற்றப் பட்டுவிடும் என்று நான் கருத வில்லை. அதற்குரிய நடை முறைக்கான கால அவகாசம் தேவைப்படும்.உள்துறை அமைச்சகத்திலிருந்து சட்ட அமைச்சகத்துக்கு செல்லவேண்டும்.

இப்பிரச்சினையில் சட் டத்தை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டிய இடத்தில் மத்திய அரசு உள்ளது’’ என்றார்.

தெலங்கானா மாநில சட்ட மன்ற சிறப்புக்கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தின்போது  இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட வரைவுகுறித்த விவாதத் தில்  முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் கூறும்போது, முசுலீம்க ளுக்கு 4 முதல் 12 விழுக்காட் டளவிலும், பழங்குடியினத்த வர்களுக்கு 6 முதல் 10 விழுக் காட்டளவிலும் இட ஒதுக்கீடு வழங்க பரிந்துரைத்துள்ளதாக குறிப்பிட்டார்.

முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் சட்டமன்ற சிறப்புக் கூட் டத்தில் பேசும்போது, “இட ஒதுக்கீட்டில் உச்ச வரம்பாக கூறப்பட்டுள்ள 50 விழுக்காட் டுக்கும் மேல் பல மாநிலங்க ளில் அளிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், தெலங்கானா மாநிலத்தில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்துவது குறித்து முதல்வர் கே.சந்திர சேகர்ராவ் கூறும்போது, நாங் கள் பிச்சை கேட்கப்போவ தில்லை, அதற்காகப் போராட வும் தயாராக இருக்கிறோம். பிரதமரும், அமைச்சரவையும் உரிய ஒப்புதலை அளிக்கா விட்டால், முசுலீம்கள், பழங் குடியினப் பிரிவினருக்காக தெலங்கானா ராஷ்டிர சமிதி சார்பாக நாடாளுமன்றத்தில் தேசிய அளவில் இப்பிரச்சினை குறித்து குரல் எழுப்பப்படும். குழப்பங்கள் இருந்தாலும், அதற்கு தீர்வு காண உரிய காலம் எடுக்கும். அதில் நிச்சய மாக வெற்றி பெறுவோம்’’ என்றார்.

“தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத்துக்கு அளிக்கப்பட்ட ஒப்புதலைப்போல், தமிழ்நாடு இடஒதுக்கீடு சட்டத்தின் அடிப் படையிலேயே தெலங்கானா மாநில அரசு தயாரித்தளித்துள்ள சட்டத்தின்படி தெலங்கானா  மாநிலம் பயன்பெறுவதை மத் திய அரசு மறுக்க முடியாது.

தெலங்கானா மாநிலத்துக்கான இடஒதுக்கீடு சட்டத்தை நடை முறைப்படுத்த மத்திய அரசு அனுமதிப்பதில், தேவைப் பட்டால் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம். மத்திய அர சுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரும்.

இட ஒதுக்கீட்டுக்கு உச்ச வரம்பாக 50 விழுக்காடு இருப் பதால், கூடுதலாக இடஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு அரசமைப் பின்படி சட்டமியற்றப்பட வேண் டியதாக இருக்கிறது.

இடஒதுக் கீடுக்கு   உச்ச வரம்பாக 50 விழுக்காட்டை உச்சநீதிமன்றம் அறிவித்திருந்த போதிலும், வேறு ஒரு தீர்ப்பில்  கூடுதலாக இட ஒதுக்கீடு அளிப்பதற்கான எண்ணிக்கைக்குரிய புள்ளி விவரங்களின்படி கூடுதல் இட ஒதுக்கீட்டை அளிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது” என் பதை முதல்வர் கே.சந்திர சேகர்ராவ் விளக்கினார்.

பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த பிரச்சினையில் பிற் படுத்தப்பட்டவர்கள்குறித்த வரையறையில் ஆலோசனை கள் நடைபெற்று வருகின்றன.

பிற்படுத்தப்பட்டவர்கள் ஆணை யத்துக்கு மாவட்ட ஆட்சியர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த புள்ளிவிவரங்களை தேவைப்படும்போது அளிக்கு மாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

ஏற்கெனவே 50 விழுக்காடு வரை உள்ள இடஒதுக்கீட்டில் முசுலீம்களுககு 4 விழுக்காடு உள்ளது. அது மாற்றப்படாது. சட்டப்படியான தீர்வை எட் டும் வகையில் சட்டரீதியிலான தடைகளை தகர்ப்போம் என்று தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர்ராவ் குறிப்பிட்டு உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner