எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.30 திராவிட உணர்வு மேலோங்கியிருக்கும் தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைக்கும் முயற்சி பலிக்காது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும்; தமிழகத்தில் மத்திய பாஜக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை கள் அனைத்தும் மர்மமாகவே உள்ளன என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று (29.4.2017) வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மருத் துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து இன்றுவரை தமிழக அரசின் நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது. மத்திய பாஜக அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள வரு மானவரித் துறை, அமலாக்கத் துறை, டில்லி காவல்துறை என அனைத்து வகை யான அமைப்புகளையும் முடுக்கிவிட்டு அதிமுகவை முதலில் உடைத்தும், பிறகு இணைப்பதற்குமான முயற்சிகளை செய்து வருகிறது.

தமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் தொடர் நடவடிக் கைகள் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் போலவே உள்ளன. எப்படியாவது பாஜகவைக் காலூன்ற வைக்க வேண்டும் என்ற அவசரத்தில் தமிழக அமைச்சர்கள், அய்ஏஎஸ் அதிகாரிகள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் மாநில நிர்வாகத்தை முடக்கி யுள்ளனர். இதனால் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள, ஒரு அதிகாரமுள்ள அரசு மாநிலத்தில் இல்லாத சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு, தமிழக மக்கள் பரிதாபமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். அதிமுகவின் அணிகளை இணைப்பதற் காக எடுக்கும் நடவடிக்கைளில் ஒரு சதவீதம்கூட தமிழக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பாஜக தலைமையிலான மத்திய அரசு எடுக்கவில்லை. தமிழகத்தில் அரசியல் சட்டப் படி நிலையான ஆட்சி நடைபெறுவதையும், மாநில அரசுக் குள்ள அதிகாரங்களுடன் செயல்படுவதையும் பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


மண்டை ஓட்டுடன் கேரள விவசாயிகள் போராட்டம்

பாலக்காடு, ஏப்.30 விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது.

தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை போன்று கேரள மாநிலம் பாலக்காடு நகரில்  பாலக்காடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் இடுப்பில் பச்சை துண்டு கட்டி கழுத்தில் மண்டை ஓட்டை மாட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.

விவசாய சங்கத்தலைவர் வேணுகோபால் கூறும்போது, கடந்த 2 ஆண்டுகள் இந்த பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாய பயிர்கள் கருகி அழிந்து விட் டது. எனவே விவசாயத்திற்காக வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆழியாற்றில் இருந்து சித்தூர் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கோரிக்கை குறித்து முழக்கம் எழுப்பியவாறு பாலக்காடு நகர் முழுவதும் விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர்.