எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 7- மாவட்ட நீதி பதியுடன், வழக்கு தொடர்பாக, தொலைபேசியில் காஞ்சி ஜெயேந்திரர் பேசியதாக, ‘ஆடியோ டேப்’ வெளியான விவகாரத்தில், சி.பி.அய்., விசாரணை கோரிய மனுவுக்கு, சைபர் கிரைம் காவல்துறை பதிலளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம், வரதராஜ பெரு மாள் கோவில் மேலாளராக பணியாற்றி வந்தவர், சங்கரரா மன். கோவிலில் இருந்தபோது, படுகொலை செய்யப்பட்டார்; 2004இல் இந்த சம்பவம் நடந் தது. இந்த கொலை வழக்கில், காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டனர்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, 21 பேரையும் விடுதலை செய்து, புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு விசாரணையில் இருக் கும் போது, மாவட்ட நீதிபதி யிடம், தொலைபேசி மூலம், ஜெயேந்திரர் பேசியதாக, ஆடியோ பதிவு வெளியானது.

இதுகுறித்து, சைபர் குற்றப் பிரிவு காவல்துறையினர் விசா ரணை நடத்தினர். ‘ஆடியோ டேப்’ வெளியான விவகாரம் தொடர்பாக, சி.பி.அய்., விசா ரணை நடத்தக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மணிகண்டன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

மனு, நீதிபதிகள் கிருபாக ரன், பார்த்திபன் அடங்கிய, ‘டிவிஷன் பெஞ்ச்‘ முன், நேற்று (மே 6) விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு, சைபர் குற் றப்பிரிவு காவல்துறை பதில ளிக்கும்படி, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தது.