எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 23- நீட் தேர்வுப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு தான் வேண்டும் என்று உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் கூறினார்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை மற்றும் தமிழ் நாடு மாணவர் - பெற்றோர் நலச்சங்கம் இணைந்து “நீட் -- இந்தியா எனும் கோட் பாடுக்கே அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் தேசியக் கருத்த ரங்கை சென்னையில் திங்கள் கிழமை நடத்தின.

கருத்தரங்கில் ஹரிபரந் தாமன் பேசியது: இந்தியா என்பது ஒன்றியமா அல்லது ஒற்றை ஆட்சியா என்ற சந் தேகம் எழுகிறது. கிராமங்கள் வரை அதிகாரம் பரவலாக்க வேண்டும் என்றார் காந்தி. ஆனால் அதற்கு மாறாக அனைத்து அதிகாரமும் மத்தி யில் குவிந்துள்ளது. அதன் விளைவுதான் நீட் தேர்வுத் திணிப்பு.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று 2007-ஆம் ஆண்டு நீதி மன்றம் உத்தரவிட்டது. அதை அமைக்க வேண்டியது மத் திய அரசுதான். ஆனால் அமைக் கவில்லை.

நீட் தேர்வு போன்ற பிரச் சினைகளுக்கு நீதிமன்றத் தீர்வு தேவையில்லை, அரசியல் தீர்வுதான் அவசியம்.

நீதிமன்றம் தடை விதித்ததால் 2014, 2015, 2016-ஆம் ஆண்டுகளில் ஜல்லிக் கட்டு நடைபெறவில்லை. ஆனால் பொதுமக்கள் எழுச்சி யால் இந்த ஆண்டு ஜல்லிக் கட்டுக்கு அனுமதி கிடைத்து உள்ளது. அதனால் தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களி லும் மாடு காட்சிபடுத்தப்படக் கூடாத பட்டியலில்தான் உள் ளது. தமிழகம்தான் மாடுக ளுக்கு விடுதலை பெற்றுத் தந்துள்ளது.

தொடர்ந்து போராடினால் நிச்சயம் வெற்றி பெறுவோம். நீட் தேர்வுக்கு எதிரான போராட் டம் தொடரும் என்றார்.

கல்வி உரிமைக்கான அகில இந்திய கூட்டமைப்பின் தலைமைக் குழு உறுப்பினர் அனில் சட்கோபால் பேசியது: ஒரு மாநிலத்தில் மலைவாழ் பகுதியில் படிக்கும் ஒரு மாணவன் அதே மாநிலத்தில் சிபிஎஸ்இ பள்ளி மாணவ னோடு போட்டியிட முடி யுமா? அந்த மாணவன் தேசிய அளவில் நடைபெறும் நீட் தேர்வில் எவ்வாறு போட் டியிட முடியும்? ஒரு மாநி லத்துக்குள்ளேயே ஏற்றத் தாழ்வு இருக்கும்போது தேசிய அளவிலான தேர்வுகள் சாத்தியமில்லை.

கியூபா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பாலர் வகுப்புகள் முதல் முதுநிலைப் படிப்பு வரை இலவசமாக்கப்பட்டுள் ளது. கியூபா நாட்டில் இலவ சக் கல்வி படித்து வெளியே வரும் மருத்துவர் கிராமப் புறங்களில் சேவையாற்றச் செல்லவேண்டும் அல்லது போர் நடைபெறும் இடங் களில் சேவையாற்ற வேண் டும்.

கல்வியை இலவசமாகக் கொடுக்கும்போதுதான் சேவை மனப்பான்மையுடன் மருத்துவர்கள் பணியாற்றுவர். நீட் தேர்வு என்பது பன்னாடு களிடம் நிதி மூலதனத்தை அடகு வைக்கும் திட்டம். இது இந்தியாவின் கூட்டாட் சித் தத்துவத்துக்கு எதிரான நடவடிக்கை என்றார் அவர்.

பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, தமிழ்நாடு நலவாழ்வு இயக்கத்தின் தலைவர் டாக் டர் ரெக்ஸ் சற்குணம், அரசு மருத்துவர்கள் மற்றும் முது நிலை மருத்துவ மாணவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் லட் சுமி நரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner