எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

செய்தியாளர்: தி.மு.க. தலைவர் கலைஞரின் சட்டமன்ற வைர விழாவைப்பற்றியும், அவரது பிறந்த நாளைப்பற்றியும்....

தமிழர் தலைவர் ஆசிரியர்: அறிவு ஆசான் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர் களுடைய ஈரோட்டு குருகுலத்தில் பயின்று, பேரறிஞர் அண்ணா அவர்களிடத்தில் அரசி யல் பாடத்தை சிறப்பாகக் கற்று ஒரு சிறந்த ஆட்சியை, எடுத்துக்காட்டான, உரிமையுள்ள ஒரு ஆட்சியை தந்து, பல்கலைக் கொள்கலனாக, சிறந்த எழுத்தாளராக, சிறந்த கவிஞராக, சிறந்த செயலாற்றும் நிர்வாகியாக, சட்டமன்றத்தில் எடுத்துக்காட்டான ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்ற கலைஞர் அவர்கள், 60 ஆண்டு கால சட்டமன்ற வைர விழாவினை சட்டமன்றத்தில் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், 94 ஆம் ஆண்டு அகவையில் அடியெடுத்து வைக்க விருக்கிறார்.

அவர் உடல்நலம் சற்று குறைந்திருந்தாலும், அவர்கள் மீண்டும் உடல்நலம் பெற்று முன்புபோல, களத்தில் வந்து மக்களை ஆயத்தப்படுத்தக் கூடிய அந்தப் பணியை செய்யவேண்டும் என்று சொல்லி, திராவிடர் கழகத்தின் சார்பில் மட்டுமல்ல, “மானமிகு சுயமரியாதைக்காரன் நான்” என்று சொன்ன அவருக்கு, சுயமரியாதை உலகு சார்பாக எங்கள் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: இன்று (26.5.2017) நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டத்திலும் முதலாவதாக இந்த வகையில் வாழ்த்துத் தெரிவிக் கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner