எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி

திருச்சி, மே 28- திருச்சியில் பெண்ணுரிமை மாநாட்டில் பங் கேற்பதற்காகவும், நேற்று (27.5.2017) காலையில் நடைபெற்ற மாநில மகளிரணி கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொள்வ தற்காகவும் திருச்சிக்கு வருகைதந்த திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டதாவது:

திராவிடர் கழகத்தினுடைய சார்பிலே மகளிரணிப் பொறுப்பாளர்களான அருமைத் தோழியர்கள் கடந்த பல வாரங்களாக முயற்சி எடுத்து மாநில மகளிரணி கலந்துரை யாடல், இட ஒதுக்கீடு சட்டம் நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோல, மகளிர் உரிமை பறிக்கக்கூடிய பல்வேறு தடை களை மத்திய மாநில அரசுகள் அகற்ற வேண்டும்.

மகளிர் உரிமை என்பது மக்கள் தொகையில் சரிபகுதியாக இருக்கக்கூடிய மனித குலத்தினுடைய மிக முக்கிய தேவை களிலே ஒன்றாகும் என்பதை யெல்லாம் வலியுறுத்தி மாலையிலே திராவிடர் கழக மகளிரணித் தோழியர்கள் சிறப்பாக தோழர்கள் அங்கே உரையாற்ற இருக்கிறார்கள். அதனை யொட்டி காலையிலே மாநிலம் தழுவிய அளவிலே எல்லா மாவட்டங்களிலிருந்தும் குமரி மாவட்டம் முதல் திருத்தணி, திருவள்ளூர் மாவட்டம் வரையிலே தோழியர்கள் வந்திருக் கிறார்கள்.  அவர்களுடைய கருத்தரங்கம், கலந்துரையாடல், தொடர்ந்து மாலையிலே பொது அரங்க நிகழ்ச்சியாக உழவர் சந்தையிலே நடைபெற இருக்கிறது.

இதற்கிடையிலே நேற்று வந்திருக்கிற ஒரு செய்தி என்பது இந்துத்துவாவை எவ்வளவு வேகமாக மத்தியிலே இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். பாஜக ஆட்சி மிகத்தீவிரமாக தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை இப்போதே, காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதைப்போல, அதிகாரம் உள்ள போதே செய்து முடிக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அந்த ஒரு நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.

அதன்காரணமாகத்தான் மாடுகள், பிராணிகள் இவை களையெல்லாம் சந்தையிலே விற்க வேண்டும் என்றால், இறைச்சிக்காக அவை விற்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டால்தான் அவை விற்கப்பட முடியும். அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்கிறோம் என்று சொல்லி மறை முகமாக, மாட்டிறைச்சியை உணவாகக் கொண்டிருப்பவர் களையே அடியோடு அறைகூவலுக்கு அழைத்ததைப்போல, அதையே ஒழித்துவிட வேண்டும் என்பதற்கான முயற்சிகள் செய்கிறார்கள்.

எங்கெங்கெல்லாம் பிஜேபியின் ஆட்சி இருக்கிறதோ, அங்கெல்லாம் பசுப்பாதுகாப்பு என்ற பெயராலே தாழ்¢த்தப் பட்டவர்களையும், ஒடுக்கப்பட்டவர்களையும் மற்றும் சிறு பான்மை சமுதாயமான மற்றவர்களையும் அடித்துக்கொல்லு கின்ற நிகழ்ச்சி என்பது ஏற்கெனவே சர்வ சாதாரணமாக நிகழ்கிறது.

 

பசுப்பாதுகாப்புப் படை என்ற ஒன்றை உருவாக்கியிருக் கிறார்கள். கேட்டால், அவர்களுக்கும், எங்களுக்கும் சம்பந்த மில்லை என்று சொல்லி தப்பித்துக்கொள்கிறார்கள்.

இந்த சூழ்நிலையிலே வெளிப்படையாகவே இப்போது வந்து இப்படி ஓர் ஆணையை மாட்டிறைச்சிக்குத் தடை போடக்கூடிய அளவுக்கு செய்திருக்கிறார்கள். இதைக் கண்டித்து சென்னையிலே ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பாக, ஒத்த கருத்துள்ள அத்தனை பேரும் இணைந்து வருகின்ற ஒன்றாம் தேதி (1.6.2017) சென்னையிலே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அனைத்துக்கட்சிகள், ஒத்த கருத்துகள் கொண்ட, முற்போக்கு கருத்துள்ளவர்கள், உண்ணும் உரிமையும்  எண்ணும் உரிமையும் யாராலும் பறிக் கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தக் கூடியவகையிலே அந்த போராட்டம் நடத்தப்பட இருக்கிறது.

அதுபோலவே, இந்திய அரசமைப்புச்சட்டத்திலே இருக் கக்கூடிய அடிப்படை உரிமைகளுக்கு இது விரோதமானது. சட்டப்படி வாதித்தால் நீதிமன்றங்களிலே செல்லுபடியாக முடியாத ஒன்றாகும்.

அதுமட்டுமல்ல, இன்னொரு கொடுமை, எப்படி நீட் தேர்வு, ஜல்லிக்கட்டு இன்னும் மற்ற மற்ற உரிமைகள் இவை யெல்லாம் மாநிலத்தின் உரிமைகளை பறிப்பதை ஒரு கொள் கைத் திட்டமாகவே மத்திய அரசு, மோடி அரசு வைத்திருக் கிறதோ, அதே நிலையிலே இன்னொரு அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார்கள்.

இதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், மிருக வதையைத் தடுப்பது என்பது இருக்கிறதே, அது வெறும் மத்திய அரசுக்கு மட்டுமே இருக்கக்கூடிய அதிகாரம் அல்ல. அது பொதுப்பட்டியலிலே (நீஷீஸீநீuக்ஷீக்ஷீமீஸீt றீவீst) மிகத் தெளிவாக இருக்கின்ற ஒன்றாகும்.

எனவே, இந்த பொதுப்பட்டியலிலே இருக்கக் கூடிய ஏழாவது அட்டவணையிலே 17ஆவது விஷயமாக இருக் கிறது. மாநிலங்களையே கலக்காமல், அவர்களே தன்னிச்சை யாக, எதேச்சதிகாரமாக நாங்களே இதை செய்துகொண்டோம் என்று சொல்வது இருக்கிறதே, இனிமேல் சந்தைக்குப் போகிற கிராமவாசிகள், ஏழை எளியோர் இனிமேல், அந்த மாட்டை வைத்துக்கொண்டு தாங்கள் பராமரிக்க முடியாது அல்லது தங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிட்டது, பயிர்த் தொழிலிலே லாபம் ஒன்றுமில்லை. எனவே, இருக்கின்ற ஆடுமாடுகளை, தங்களுடைய பிராணிகளை, மாடுகளை எருமை மாடுகளை, பசு மாடுகளை விற்றாவது வாழ்வாதார ஜீவனத்தை நடத்தலாம் என்று நினைக்கிறவர்களுக்குக் கூட, இது இடையூறை உண்டாக்கும். மிகவும் அவர்களை மிரட்டுவதும், அச்சுறுத்துவதும், நீ இறைச்சிக்காக விற்கிறாயா? என்று அவர்களைக் கேட்பதும் தவறானது.

மாட்டிறைச்சி இங்கேயோ, மற்ற மாநிலங்களிலோ  தடை செய்யப்படவில்லை. மாட்டிறைச்சிக்கூடங்கள் அனுமதிக்கப் பட்டிருக்கின்றன. அப்படி அனுமதிக்கப்பட்டிருக்கிற ஏன் உத் தரப்பிரதேசம் போன்ற இடங்களிலேகூட மாட்டிறைச்சிக் கூடங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. எனவே, சட்டத் திலே அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடியதையே ஒருபக்கம் கொடுத்து, மறுபக்கம் மறுக்கக்கூடிய அளவிற்கு, அச்சுறுத் தக்கூடிய அளவிற்கு இந்த ஆணை இருக்கிறது.

எனவே, மத்திய அரசு சுற்றுசூழல் சார்பாக தன்னதிகார மாக, தானடித்த மூப்பாக செய்து கொண்டிருக்கிற இதை அவர்கள் திரும்பப் பெற வேண்டும். இதற்காக நீதிமன்றத்திலும் போராடுவோம்,   வீதிமன்றத்திலும் மக்களிடத்தில் போராடு வோம். இது அடிப்படையான உரிமை. சிறுபான்மை சமுதாயத் தினருக்கு உணவாக இருக்கிறது. எளிய கிராம மக்கள் ஆட்டுக்கறி விலை அதிகம், கோழிக்கறி விலை அதிகம், மாட்டுக்கறி ரொம்ப குறைச்சலான விலை. சத்துள்ள உணவு. உழைக்கிற மக்களுக்கு வேறு ஒன்றும் கிடையாது. எனவே, டாஸ்மாக் எல்லாம் மூடவேண்டும் என்று சொல்கின்ற நேரத் திலே நல்ல சத்தாவது அவர்களுக்கு வேண்டும். ஆகவே, அதையெல்லாம் பறிக்கக்கூடிய அளவிலே இங்கே இருக்கக்கூடிய உரிமை அரசுக்கு கிடையாது. எனவே, ஒவ் வொருவருக்கும்  உள்ள கலாச்சார உரிமை, சட்டபூர்வமான அடிப்படை உரிமை, 29ஆவது பிரிவுப்படி பார்த்தால்,  மொழி உரிமையை எப்படி காப்பாற்ற வேண்டுமோ, அதுமாதிரி கலச்சார உரிமை, உண்ணும் உரிமை, எண்ணும் உரிமையும் கலாச்சார உரிமையைப் பொறுத்தது. ஆகவே, இதையெல்லாம் பறிப்பதற்கு மத்திய அரசு இன்றைக்கு வெளிப்படையாகவே வந்துவிட்டது.

இந்து ராஷ்டிரா, இந்துத்துவா ஆட்சியையே நாங்கள் நடத்துகிறோம் என்று காட்டக்கூடிய அளவிலே மாநில அரசு களின் உரிமைகளைப்பறிப்பதுபோல், பொதுப் பட்டியலையே மத்திய அரசின் பட்டியலைப்போல் நடத்துவதெல்லாம் அரச மைப்புச்சட்ட விரோதம். மனித விரோதம். நியாய விரோதம். சிறுபான்மை சமுதாய மக்களுக்கு கேடு செய்வது. பெரும் பான்மையான மக்கள்கூட இதிலே பார்த்தீர்களேயானால், இதில் மதம் கிடையாது, பலரும் மாட்டிறைச்சி, எங்கு பார்த் தாலும் பீப் பிரியாணி என்று எங்கு பார்த்தாலும் சாப்பிடு கிறார்கள். ஆகவே, இதில் மறுப்பதற்கு இடமில்லை.

இப்போது ஆங்காங்கே கார்ப்பரேசன் அதிகாரிகள் கூடங்களை மூட வலியுறுத்துகிறார்கள். ஆனால், அந்த கூடங் களுக்கு சட்டபூர்வமாக அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

எனவே, இதையெல்லாம் எதிர்த்துப்போராட வேண்டிய இடத்திலே இருக்கிறோம். இது தேவையற்ற பிரச்சினை. இதுதான் அவசரமான பிரச்சினை.

செய்தியாளர்: விவசாயத்தைக் காப்பாற்றத்தான் இந்த நடவடிக்கை என்று அவர்கள் சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: விவசாயத்தை, விவசாயிகளை எப்படி காப்பாற்ற முடியும்? முதலில் விவசாயிகளுக்கு தர வேண்டியவற்றை தர வேண்டாமா? அவர்களுக்கு உணவு வேண்டாமா? தானியம் வாங்கிப்போடுவதற்கு விவசாயிகளி டம் பணம் இருக்கிறதா? ஏற்கெனவே, விதை நெல்லையே அவித்துப்போட்டு சாப்பிட்டுவிட்டான். அதனாலே விவசாயி களை இப்போது காப்பாற்ற வேண்டும் என்றால், கால்நடைச் செல்வங்கள் என்பதில் முதலில் செல்வம் இருக்கிறதா? இவர்கள் பட்டிக்கு அனுப்புகிறார்கள், அதிலேயே தீனி போடவில்லை. கோசாலைகளிலேயே நிறைய பசுக்கள் செத்துப்போய் இருக்கின்றன. இன்னும் சொல்வதானால், அதிகமான அளவில் தோல் ஏற்றுமதி எங்கே நடக்கிறது என்று சொன்னால், குஜராத்தில்தான்.

செய்தியாளர்: திகவும், திமுகவும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று சொல்வார்கள். கலைஞரின் வைர விழாவுக்கு உங்களுக்கு அழைப்பிதழ் வந்திருக்கிறதா?

தமிழர் தலைவர்:  அழைப்பு வந்திருக்கிறது. 31 ஆம் தேதி அதில் கலந்து கொள்கிறேன். நேற்றே நான் வாழ்த்து சொல்லியிருக்கிறேன். அதனால், இரட்டைக்குழல் துப்பாக்கிதான் எப் போதும் ஒலிக்கும். உங்களுக்கு அதில் சந்தேகம் வேண்டாம்.

செய்தியாளர்: மாட்டிறைச்சித் தடை என்பது பீட்டா அமைப்பின் செயல்பாடுதான். அதன் வழிகாட்டலின்படிதான் நடக்கிறது, அதன் கட்டுப்பாட்டின்படிதான் மத்திய அரசு கூறியுள்ளதாகக் கூறப்படுகிறதே...?

தமிழர் தலைவர்: பீட்டாவுக்கு மத்திய அரசு அடிமையா?  மத்திய அரசுக்கு மேற்பட்டதா பீட்டா? இந்த கேள்விக்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

செய்தியாளர்: மாநில சுயாட்சி பறிக்கப்படுகிறது என்று நாம் சொல்லிக்கொண்டிருக்கிறோம். ஆனால், நேற்று ஆர்.வி.உதயக்குமார் வருவாய்த்துறை அமைச்சர் என்ன சொல்லியிருக்கிறார் என்றால், மத்திய அரசு எல்லாவற்றிலும் முழுமையாக ஆதரவு தருகிறார்கள். தமிழ்நாட்டுக்குத்தான் கூடுதலான நிதி கொடுக்கிறார்கள் என்று அமைச்சர்கள்  தொடர்ந்து பிஜேபிக்கு ஆதரவாக கூறிவருகிறார்கள். முதல் அமைச்சர் என்ன செய்ய வேண்டும்? இந்த விஷயத்தில் அவர் என்ன செய்கிறார்?

தமிழர் தலைவர்: Ôமடியில் கனம், வழியில் பயம்Õ எனவே அவர்கள் பேசவில்லை. உளறுகிறார்கள்.

செய்தியாளர்: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து பெரிய விவாதம் நடைபெற்று வருகிறது.  அதில் தங்களின் நிலைப்பாடு என்ன?

தமிழர் தலைவர்: பசு மாடு இப்போது முக்கியம். சாப்பாடு முக்கியம். பெரும்பான்மையானவர்களின் வயிற்றில் அடித் திருக்கிறார்கள். அதுதான் முக்கியம். அவர் வடிவேல் பாணி யில் வருவார், வரமாட்டார், வரும்போது பார்க்கலாம்.

செய்தியாளர்: தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது என்று அமைச்சர் குற்றச்சாற்று வைத்திருக்கிறாரே?

தமிழர் தலைவர்: அதாவது அது எதைக்காட்டுகிறது என்று சொன்னால், அரசு எப்படி நடந்துகொண்டிருக்கிறது, அதைக் கண்காணிக்க வேண்டியவர்கள் இப்போது மாட்டை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றால், இதிலிருந்தே  விவசாயம் எப்படி நடந்துகொண்டிருக்கிறது? விவசாயிகள் நலன் இந்த ஆட்சியில் எப்படி இருக்கிறது என்பதற்கு அடையாளம்.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner