எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அம்பை, மே 29- நெல்லை மாவட் டம் கல்லிடைக்குறிச்சியில் தமி ழக காங்கிரஸ் தலைவர் திருநா வுக்கரசர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களை மோடி அரசு மிரட்டி வருகிறது. ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுகவை உடைத்து பின்பு சேர்க்க முயற்சிக்கிறார்கள். குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர்கள் வாக்கு வேண்டும் என்பதற்காக அரசு புலனாய்வு இயந்திரங் களைப் பயன்படுத்துகின்றனர். மாட்டு இறைச்சியை வெளி நாட்டினர் உண்பதற்காக ஏற் றுமதி செய்யலாம். நம் நாட்டு மக்கள் சாப்பிடக்கூடாதா? தனி மனிதர் உணவு பழக்க வழக்கங்களில் அரசு சட்டத்தின் மூலம் நுழைய முயற்சிப்பது கண்டனத்திற்குரியது.

இந்த உத்தரவை உடனடி யாக திரும்பப் பெற வேண்டும். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸ் சிறுபான்மை அணி சார்பில் போராட்டம் நடத்தப் படும். மேலும் மே 30இல் காங்கிரஸ், தி.மு.க., திராவிடர் கழகம் மற்றும் அனைத்துக் கட்சி கூட்டமைப்பு சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெறு கிறது. ஜூன் 1ஆம் தேதி வள் ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மக்களுக்கு தமிழக அரசின் நடவடிக்கை திருப்தியளிக்க வில்லை என்று கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner