எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 30 புதிய சட்டம் கொண்டுவந்து  மறைமுக மாட்டிறைச்சித் தடையை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் மாட்டு இறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து சென்னை அய்.அய்.டி.யில் மாட்டு இறைச்சி திருவிழா நேற்று (29.5.2017) நடந்தது.

ஜனவரி மாதம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் நாடு முழுவதும் பசுவதைச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசுக்கு மிரட்டல் கோரிக்கை விடுத்தார். நேரடியாக நாடு முழுவதும் பசுவதைச்சட்டம் கொண்டுவரமுடியாது என்ற நிலையில் மாட்டி றைச்சித் தடைக்கான புதிய சட்டங்களைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மறைமுக பசுவதைச் சட் டத்தை உருவாக்கி விட்டது. இதற்கு வடகிழக்கு மாநிலங் கள் முழுவதிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, அதேபோல் மேற்குவங்கம், ஒரிசா, கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா மாநிலங்களிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல இடங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

சென்னை அய்.அய்.டி.யில் மாணவர்கள் ஒன்று கூடி சமைத்த மாட்டிறைச்சியை உண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான காணொலிப் பதிவு ஒன்று சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. அதில் மாணவர்கள் ஆர்வத்துடன் மாட்டு இறைச்சியை ரொட்டியுடன் இணைத்து சாப்பிடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

மிருகவதை சட்டப்படி கால் நடைகளை இறைச்சிக்காக சந்தைகளில் விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சென்னை அய்.அய்.டி. செய்தி. தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், கடந்த ஒரு வார காலமாக அய்.அய்.டி.க்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நிர்வாகப் பிரிவும் மூடப்பட் டிருப்பதால் சரியான தகவல் தெரியவில்லை என்றார்.

கேரளாவில் இந்தச் சட் டம் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்தே போராட்டங்கள் கடுமையாகியுள்ளது. மேலும் அங்கே மாநிலம் முழுவதும்  மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மாட்டிறைச்சி விருந்து நடக்கும் போராட்டத்தை நடத்திவருகின்றனர். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் மாட்டிறைச்சி விருந்து விழா நடத்தி தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை அய்.அய்.டி.யிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேற்று கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், மலப்புரம், எர்ணாகுளம் உள் ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாட்டு இறைச்சி திருவிழா நடந்தது. இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு இந்த விழாவை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிட்டுள்ளது.