எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

மத்திய பா.ஜ.க. அரசைக் கண்டித்து தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் மாபெரும் ஆர்ப்பாட்டம்!

சென்னை, மே 31-- மாடு, காளை கள், ஒட்டகம் போன்ற கால் நடைகளை இறைச்சிக்காக விற்கவோ, வாங்கவோ கூடாது என்று மத்திய அரசு கடந்த 23ஆம் தேதி தடை உத்தரவு பிறப்பித்தது. கால் நடைகளை விற்பனை செய்யவும், வாங்க வும் கடும் கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் அரசியல் கட் சிகள் பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

கேரளா, கர்நாடகம், புதுச் சேரி மாநில அரசுகளும் மேகா லயா உள்ளிட்ட வட கிழக்கு மாநில அரசுகளும் இந்த உத்தர வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள் ளன. இது மாநில அரசுகளின் அதிகார  வரம்புக்கு உட்பட் டது. எனவே நாங்கள் அமல் படுத்த மாட்டோம் என்று அந்த மாநில முதல்- அமைச் சர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த சட்டத்தை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மத்திய அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் மத்திய அரசின் உள் துறை செயலாளர், சுற்றுச்சூழல் துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்துக்குள் பதில் அளிக்கு மாறு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர்.

இதற்கிடையே மத்திய அர சின் உத்தரவை எதிர்த்து சென் னையில் இன்று (31.5.2017) தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறி வித்து இருந்தார்.

அதன்படி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (31.5.2017) காலை கண் டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளரும் துறைமுகம் சட்டமன்ற உறுப்பினருமான பி.கே.சேகர் பாபு முன்னிலை யில் நடந்தது.  ஆர்ப்பாட்டத் திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். மாட்டிறைச்சி மீதான மத்திய அரசின் தடை உத்தரவை கண்டித்தும், இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத தமிழக அரசை கண்டித்தும் தி. மு.க.வினர் ஒலி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய் தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கனி மொழி எம்.பி., பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பேராயர் எஸ்ரா சற்குணம், இந்திய யூனி யன் முஸ்லிம் லிக் அப்துல் ரகுமான், தமிழ் மாநில தேசிய லிக் திருப்பூர் அல்டாப் சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர்கள் மா.சுப்பிரமணி யன், ஜெ.அன்பழகன் முன் னாள் அமைச்சர் த.மோ.அன்ப ரசன், ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., வி.பி. துரைசாமி, சட்டமன்ற உறுப்பி னர்கள் ரங்கநாதன், வாகை சந்திரசேகர்,  இ.கரு ணாநிதி, முன்னாள் எம்.பி. எஸ்.ஆர். ஜெயதுரை, கவிஞர் காசி முத்து மாணிக்கம், வர லட்சுமி மதுசூதனன் தலைமை கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, வட்ட, பகுதி நிர்வா கிகள் திரளாக கலந்து கொண் டனர்.