எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஜூன் 5-  மறைவுற்ற பத்திரிகையாளர் ‘விடுதலை’ ராதா அவர்கள் உடல் எவ்வித மூடசடங்குமின்றி இன்று (5.6.2017) முற்பகல் 11.30 மணிக்கு சென்னை மயிலாப்பூர் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.

விடுதலைக் குடும்பத்தின் பாசமிகு உறுப்பினரான விடுதலை ராதா அவர்கள் (வயது 67) உடல் நலக் குறைவால் நேற்று (4.6.2017) காலை 5 மணிய ளவில் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

மறைவு தகவல் அறிந் ததும் தமிழர் தலைவர் ஆசிரி யர் கி.வீரமணி அவர்கள் ஒரு நல்ல சேவகத் தோழனை, ‘விடு தலை’க் குடும்பத்து கடமை வீரனை இழந்து தவிக்கிறோம் என்று சிங்கப்பூரில் இருந்து இரங்கல் தெரிவித்தார்.

உடனே மறைவுற்ற விடுதலை ராதா அவர்களின் வாழ்விணையர் டாக்டர் இளமதி அவர்களிடம் தொலைப்பேசி மூலம் கழகத் தலைவர் ஆறுதல் தெரிவித்தார்.

கழகத் துணைத் தலைவர் கவி ஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்பு ராஜ் ஆகியோர் விடுதலை ராதா மறைவு தகவல் அறிந்த தும் உடனே நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி அவரது குடும்பத்தா ருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

உடல் அடக்கம்

மறைவுற்ற விடுதலை ராதா அவர்களின் இறுதி ஊர்வலம் இன்று (5.6.2017) காலை 11 மணிக்கு சென்னை திருவான் மியூர், கொட்டிவாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் குடி யிருப்பு எண் 50இல் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டது.

முற்பகல் 11.30 மணியளவில் சென்னை மயி லாப்பூர் இடுகாட்டில் (அய்.ஜி. அலுவலகம் பின்புறம், அம்பேத் கர் பாலம் அருகில்) டாக்டர் இளமதி அவர்களின் தந்தையார் நினைவில் வாழும் திருச்சி சி.ஆளவந்தார் மற்றும் தாயார் பாப்பாத்தி அம்மாள் ஆகி யோரின் நினைவிடத்தின் அரு கிலேயே விடுதலை ராதா அவர்களின் உடல் எவ்வித மூடசடங்குமின்றி அடக்கம் செய்யப்பட்டது.

முக்கிய பிரமுகர்கள் மரியாதை

விடுதலை ராதா அவர்களின் மறைவு செய்தி கிடைத்ததும் அவரது இல்லத்தில் வைத்தி ருந்த அவரது உடலுக்கு விடு தலை நாளிதழின் பொறுப்பாசி ரியர் கவிஞர் கலி.பூங்குன்றன், விடுதலை அச்சக பிரிவு மேலா ளர் க.சரவணன், விடுதலை தலைமை செய்தியாளர் வே.சிறீதர், தலைமை புகைப்படக் கலைஞர் பா.சிவக்குமார், செய் திப் பிரிவு தோழர்கள் கி.இராம லிங்கம், எஸ்.பாஸ்கர், ம.கதி ரேசன், ஆர்.பிரபாகர், பா.அருள், ப.ஆனந்தன், இரவி, பெரியார் திடல் தோழர்கள் சுரேஷ், சு. சுதன், ஓட்டுநர் அசோக், மகேஷ் ஆகியோர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

திராவிடர் கழகம் சார்பில்...

திராவிடர் கழக பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் க.பார்வதி, ச.இன்பலாதன், சி.வெற்றிசெல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள், நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், சைதை எம்.பி.பாலு, தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில் வநாதன், செயலாளர் பார்த்த சாரதி, துணைச்செயலாளர் கோ.வீ.ராகவன், இரா.பிரபா கரன், தரமணி மஞ்சுநாதன், தருமராசன், சிதம்பரம் கலிய பெருமாள், தென் சென்னை இளைஞரணித் தலைவர் செ. தமிழ்சாக்ரட்டீசு, ச.இ.இனி யன், புவனகிரி தோழர் மாறன், புரசை சு.அன்புச் செல்வன், பெரியார் மருத்துவமனை மேலா ளர் குணசேகரன், ஆடிட்டர் இராமச்சந்திரன், சுதா அன்பு ராஜ், கு.அன்புமதி, தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தை யன், மாணவர் நகலகம் சவுரி ராசன், தென் சென்னைமாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராசன், டாக்டர் தமிழ் மணி, மு.பழனியப்பன், முன் னாள் துணைவேந்தர் ராஜேந் திரன், பத்திரிகையாளர் வீட்டு வசதி கூட்டுறவு  சங்க துணைத் தலைவர் எஸ்.ரமேஷ், சங்க நிர்வாகிகள் சரவணன், சண் முகம், முருகன், வேலு, ராயப் பன் மற்றும் அச்சரப்பாக்கம் பார்த்தசாரதி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர்.

மூத்த பத்திரிகையாளர்கள் மரியாதை

சென்னை பத்திரிகையா ளர்கள் சங்கம் (எம்.யூ.ஜே) சார் பில் அதன் பொதுச் செயலாளர் ஆர்.மோகன் தலைமையில் அதன் நிர்வாகிகள் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்து பத்திரிகை யூனியன் முன்னாள் தலைவர் ஜி.எஸ். ஈ.கோபால், சென்னை பிரஸ் கிளப் சார்பில் ஜேக்கப், பாரதி தமிழன், முன்னாள் முதலமைச் சர் கலைஞர் அவர்களின் மக் கள் தொடர்பு அதிகாரி மருத நாயகம், ஓய்வு பெற்ற காவல் துறை ஆய்வாளர் மணிபாபு.

மூத்த பத்திரிகையாளர்கள் இந்து என்.கணபதி, கிருஷ் ணன், மாலைச்சுடர் எம்.சுப்பிர மணியன், தினகரன் சேகர், நக்கீரன் கோபால், நக்கீரன் காமராஜ், பி.டி.அய்.துரைராஜ், ஜி.சந்திரசேகர், தினத்தந்தி சுகுமார், இந்து ரமேஷ், துக்ளக் ரமேஷ், ஜேசுராஜா, நூருல்லா, கஜேந்திரன், சுப்பிரமணியன், போட்டோ ராமமூர்த்தி, மக்கள் குரல் குணசேகரன், நியூஸ் 18 குணசேகரன், இராமலிங்கம், ஜவகர், தமிழ்துரை, பகவான் சிங், சிகாமணி, போட்டோ ராஜேந்திரன், சுபா, இந்து சரஸ் வதி, வால்டர் ஸ்காட், புதிய தலைமுறை முருகேசன், நியூஸ்-7 தில்லை, அசோக், கிருட்டி ணன், சிறீதர், போட்டோ கண் ணன் மற்றும் திரளான பிர முகர்கள், பத்திரிகையாளர்கள் மறைவுற்ற விடுதலை ராதா உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தியும் இறுதி நிகழ்விலும் பங்கேற் றனர். கழகப் பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ் அவர்க ளின் நேரடி பார்வையில் இறுதி நிகழ்வுகள் அனைத்தும் நடை பெற்றது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner