எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 8 ‘தி.மு.க., தலைவர் கலைஞரின், சட்டசபை வைர விழாவை ஒட்டி, அவ ருக்கு பாராட்டு தெரிவித்து, சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும்‘ என, எதிர்க்கட்சிகள் சார்பில், பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.,தலைவர்கலை ஞர், சட்டசபைக்கு தேர்வு செய்யப்பட்டு,இந்தஆண்டு, 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அதை வைர விழாவாக, தி.மு.க.,வினர் கொண்டாடினர். அதையொட்டி, அவருக்கு பாராட்டு தெரிவித்து, சட்ட சபையில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, தி.மு.க., - காங்., - முஸ்லிம் லீக் கட்சிகள் சார்பில், தனித்தனியே பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதை பரிசீலிப்பதாக, பேர வைத் தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.