எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 10- திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலை மையில் ஜூன் 11-இல் புதுக் கோட்டையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக மு.க. ஸ்டா லின் அவர்கள் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை வரு மாறு: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி தொடக்க விழாவில் பங்கேற்கப் புறப் பட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரகுபதி, பெரி யண்ணன் அரசு, மெய்யநாதன் ஆகியோரைத் தடுத்து நிறுத்தி, காவல்துறையினர் கைது செய் துள்ளனர்.

தமிழக அரசு விழாவை ஏதோ அதிமுக விழா என்றும் புதுக்கோட்டை அரசு மருத்து வக் கல்லூரிக்கு ஏதோ அதிமுக தலைமைக் கழக நிதியிலிருந்து செலவு செய்து திறப்பது போல வும் நினைத்துக் கொண்டு, திமுக எம்.எல்.ஏ.க்களைக் கைது செய்யும் புது அரசியல் அநாகரிகத்தை அதிமுக அரசு தொடங்கி வைத்துள்ளது.

பொதுமக்கள் பிரதிநிதிக ளான சட்டப்பேரவை உறுப்பி னர்களைக் கைது செய்திருப்பது, அவர்களுக்கு வாக்களித்து, தேர்வு செய்த பொது மக்களைக் கைது செய்வது போன்ற செயல் என்பதை முதல்வர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

திமுக ஆட்சியில் நான் துணை முதல்வராக இருந்த போது, கலைஞரின் ஒப்புதலு டன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப் படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.

கலைஞர் அடிக்கல் நாட்டி வைத்த மருத்துவக் கல்லூரியை அப்படியே கிடப்பில் போட்ட அதிமுக அரசு, மீண்டும் புதுக் கோட்டையில் மருத்துவக் கல் லூரி அமைக்கப்படும் என்று 2015 ஆகஸ்ட் 25-இல் ஒரு புதிய அறிவிப்பு போல வெளியிடப் பட்டது.

எனவே, அதிமுக அரசின் இந்த முறையற்ற நடவடிக்கை யைக் கண்டித்து, ஜூன் 11-ஆம் தேதி புதுக்கோட்டையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடத்தப்படும். திமுக எம்.எல்.ஏ.க்களைக் கைது செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல் துறை அதிகாரியை உடனடியாக அங்கிருந்து பணி யிட மாறுதல் செய்வதுடன், உரிய விசாரணை நடத்தி பணி நீக்கம் செய்ய வேண்டும் என அறிக்கையில் வலியுறுத்தி யுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner