எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 11- அதிமுக அரசு நிரந்தர அரசு என்றால், அதன் சாதனைகள் என்ன? என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப் பியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று (10.6.2017) அவர் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அதி முகவின் ஆட்சி பெரும் பான்மை பலத்துடன் கூடிய நிரந்தரமான ஆட்சி என்றும், திமுகதான் மைனாரிட்டி ஆட் சியை நடத்தியது என்றும் பேசியுள்ளார்.

திமுக அரசு மைனாரிட்டி அரசு என்றால் நம்பிக்கையில் லாத் தீர்மானம் கொண்டு வந்து வீழ்த்தியிருக்கலாம். அதிமுக வால் அதைச் செய்ய முடிந் ததா?

மக்களின் பேராதரவு எனும் உண்மையான பலத்துடன் தமி ழகத்தின் நலன் காக்கும் திட் டங்களை நிறைவேற்றியதுதான் கலைஞர் தலைமையிலான ஆட்சி என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

நிரந்தர முதல்வர் என்று புகழ்பாடுவது அதிமுகவுக்குப் புதிது இல்லை. ஆனால், ஓராண்டு ஆட்சி காலத்தில் 3 முதல்வர்களைக் கண்டிருக் கிறது இந்த நிரந்தர அரசு. தமி ழக அரசு திவாலாகும் அள வுக்கு ரூ.3 லட்சம் கோடி நேர டிக் கடன் சுமையை உண்டாக் கியது மட்டுமே இந்த ஆட்சி யாளர்களின் சாதனை.

நீட் தேர்விலிருந்து தமிழகத் துக்கு விலக்கு கோரும், தமிழக சட்டப்பேரவையின் ஒருமித்த தீர்மானத்துக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற முடிய வில்லை.

இறைச்சிக்காக மாடுகள் விற்பனைக்குத் தடை விதிக் கும் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து கேரள மாநிலத்தில் புதிய சட்டத்தை அம்மாநில சட்டப்பேரவையில் பெரும் பான்மை பலத்துடன் கேரள முதல்வர் நிறைவேற்றியுள்ளார்.

ஆனால், இங்கு மெஜாரிட்டி பலத்துடன் ஆள்கிறோம் என்று சொல்பவர்கள் அதுபோன்ற எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றாதது மட்டுமல்ல, மாநில சுயாட்சிக்கு சவால் விடும் வகையிலான மத்திய அரசின் நடவடிக்கை குறித்து வாய் திறக்காமல் மவுனம் காத்து வருகிறார்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner