எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை சிறப்புக் கூட்டத்தில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் உரை

சென்னை, ஜூன் 13-  பெரிய ஒரு வணிகத்தைக் கொண்டிருக் கிற, தொழிலைக் கொண்டிருக்கிற தொழில் மாடு வளர்ப்புத் தொழிலாகும். இந்த மாடு வளர்ப்புத் தொழிலை முடக்குவதே மோடி அரசின் நோக்கம். எதற்கு என்றால்? விவசாயம் தொடர்பான பன்னாட்டு நிறுவனங்களுக்கு இவர்கள் சிவப் புக் கம்பளம் விரிக்கிறார்கள். விவசாயத்தை இயந்திரமயப்படுத் துவது - அவன் உருவாக்கியிருக்கின்ற இயந்திரங்களை - விதைக்கின்ற இயந்திரம் - களை பறிக்கின்ற இயந்திரம் - அறுப்பு அறுக்கிற இயந்திரம் - நீர்ப் பாய்ச்சுகின்ற இயந்திரம் - இவையெல்லாவற்றையும் இன்றைக்கு வளரும் நாடுகளில் சென்று அவர்கள் வியாபாரம் செய்யவேண்டும். சந்தை அவ னுக்குத் தேவைப்படுகிறது. என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

30.5.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலிலுள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘மாட்டுக்கறி உணவை தடை செய்யும் மத்திய பா.ஜ.க. மதவாத அரசைக் கண்டித்து’’ மாபெரும் சிறப்புப் பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

எழுச்சியுரையாற்றவிருக்கின்ற தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே, நம் அனைவரையும் வரவேற்று இந்தப் பொதுக்கூட்டத்திற்கான நோக்க உரை ஆற்றி அமர்ந்திருக் கின்ற கவிஞர் அண்ணன் கலி.பூங்குன்றன் அவர்களே,

இந்நிகழ்வில் பங்கேற்று காங்கிரஸ் பேரியக்கத்தின் சார் பில் கண்டன உரையாற்றி அமர்ந்திருக்கின்ற மேனாள் சட்டப் பேரவை உறுப்பினர் மதிப்பிற்குரிய அண்ணன் திரு.பல ராமன் அவர்களே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பில், தமது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்ற மதிப்பிற் குரிய தோழர் பீமாராவ் அவர்களே,

தமிழ்நாடு முஸ்லிம் லீக் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இங்கே உணர்ச்சிகரமாக உரையாற்றி அமர்ந்திருக்கின்ற மதிப்பிற்குரிய பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,

கடந்த மூன்றாண்டுகளில்

மோடி ஆட்சி சாதித்தது என்ன?

கடந்த மூன்றாண்டுகளில் மோடி ஆட்சி இங்கே சாதித்தது என்ன? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி தனது கண்டனத்தைப் பதிவு செய்து அமர்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினர் மதிப் பிற்குரிய அண்ணன் டி.கே.எஸ். அவர்களே,

தமிழகத்தின் பொதுவுடைமை இயக்க மூத்த தலைவர் பெருமதிப்பிற்குரிய தோழர் தா.பா. அவர்களே,

வழக்கம்போல பெரியார் அரங்கை சிறப்பித்துக் கொண் டிருக்கின்ற வகுப்புவாத அரசியலை எதிர்ப்பதற்காக இங்கே திரண்டு வந்திருக்கின்ற தமிழ்ச் சொந்தங்களே,

உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவார்ந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அசாத்திய துணிச்சலைப் பெற்றவர் - சுறுசுறுப்பாக எப்பொழுதும் இயங்கக்கூடியவர்

எத்தனை பணிச்சுமை இருந்தாலும், கோட்பாட்டு ரீதியாக நம்முடைய பகைவர்களை உடனுக்குடன் எதிர்கொள்ள வேண்டும் என்கிற அசாத்திய துணிச்சலைப் பெற்றவர் - சுறு சுறுப்பாக எப்பொழுதும் இயங்கக்கூடிய தலைவர் நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள்.

நேற்று கோழிக்கோட்டில் இருந்தார், இன்றைக்குப் பெரி யார் திடலில் இந்த மாபெரும் சிறப்புக் கூட்டத்தைத் தலைமை தாங்கி வழிநடத்திக் கொண்டிருக்கிறார்.

நீண்டதூரம் பயணம் செய்து வந்து, உடனடியாக இந்தக் கூட்டத்தை நாம் ஒருங்கிணைக்கவேண்டும் என்ற அந்தப் பொறுப்புணர்வோடு இந்த நிகழ்வை இன்றைக்கு வழி நடத்திக் கொண்டிருக்கிறார்.

‘‘பேய்கள் அரசாண்டால், பிணம் தின்னும் சாத்திரங்கள்’’ என்பது முதுமொழி.

நூல் வெளியீடு

இன்றைக்கு அதற்கு சான்றாக மோடி அரசு இருக்கிறது. 1966 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் என்ன பேசி னார் என்று இங்கே நூலாக ஆசிரியர் அவர்கள் வெளியிட்டி ருக்கிறார். தந்தை பெரியார் மட்டுமல்ல, புரட்சியாளர் அம் பேத்கர் அவர்களும் அதைப்பற்றி என்ன எழுதியிருக்கிறார் என்பதையெல்லாம் தொகுத்து இங்கே நூலாக வெளியிட்டி ருக்கிறார்.

ஆக, இந்தப் போராட்டம் என்பது, தொடர்ச்சியாக நம்முடைய தலைமுறையில் இருந்து மட்டுமல்ல, நம்முடைய முன்னோரும், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும், நம்மு டைய முன்னோர் பலரும், இவர்களை எதிர்த்துத் தொடர்ந்து போரிட்டு வந்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு 2015 ஆம் ஆண்டில்கூட இதே அரங்கில் இந்த மாட்டுக்கறித் தொடர்பான எதிர்ப்பைப் பதிவு செய்யக்கூடிய ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தைத் தமிழர் தலைவர் அவர்கள் நடத்தியதை, இங்கே வெளியிட்ட நூலில் பதிவு செய்திருப்பதை நாம் அறிகிறோம்.

ஆகவே, இது ஒரு தொடர் போராட்டம். மக்களைப் பாதுகாப்பதற்கு, நம்முடைய பண்பாட்டைப் பாதுகாப்பதற்கு, பண்பாட்டு உரிமைகளைப் பாதுகாப்பதற்கு, சோர்வின்றிப் போராடவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

மோடி அரசு இதனை எந்தப் பின்னணியில் செய்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். மிக முக்கியமாக இரண்டு பின்னணிகள் உள்ளன. ஒன்று, அவர்களின் அர சியல் ஆதாயத்திற்கான கோட்பாட்டுப் பின்னணி.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயல் திட்டங்களில் ஒன்று. இந்து வாக்கு வங்கியை அணிதிரட்டுவதற்கு அவர்கள், எப் பொழுதெல்லாம் அந்தத் தேவை எழுகிறதோ, அப்பொழு தெல்லாம் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது உண்டு.

பசுவதை கூடாது; கோமாதாவை காப்போம்; கோமாதா வைக் காப்போம் என்பது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய ஒரு வெளிப்படையான செயல்திட்டம். அது அவர்களுடைய கோட்பாடுகளில் ஒன்று. இது ஒரு முக்கியமான பின்னணி.

நாம் பெரியாரைப் படிக்கவேண்டும்; புரட்சியாளர் அம்பேத்கரைப் படிக்கவேண்டும்

உண்மையிலேயே இவர்கள் பசுவை தெய்வமாக வணங் கியிருக்கிறார்களா? பசுவை புனிதமாகக் கருதியிருக்கிறார் களா? இவர்களின் வரலாற்றுப் பின்னணி என்ன என்பதை நாம் அறியவேண்டுமானால், நாம் பெரியாரைப் படிக்க வேண்டும்; புரட்சியாளர் அம்பேத்கரைப் படிக்கவேண்டும். அவர்கள்தான் நமக்கு வழிகாட்டிகள்.

அவர்கள் ஏக காலத்திலிருந்து எப்படி வந்திருக்கிறார்கள்? அவர்களின் பாரம்பரியம் என்ன? உணவுப் பழக்கம் என்ன? அவர்களின் கலாச்சாரம் என்ன? என்பதை, ஆதாரங்களோடு, அவர்களின் நூல்களிலிருந்தே, வேதங்களிலிருந்தே, இதி காசங்களிலிருந்தே, புராணங்களிலிருந்தே, அவர்கள் பேசு கின்ற கதைகளிலிருந்தே, அவர்களின் கதாபாத்திரங்களிலி ருந்தே எடுத்து அடுக்குகிறார்கள்.

ஆதாரங்களோடு அடுக்கி வைத்திருக்கிறார்கள்

அவர்கள் பசுக் கறித் தின்று வளர்ந்தவர்கள்; பசுவைக் கொன்று யாகம் செய்தவர்கள். நாள்தோறும் பசுக்கறித் தின்ப தையே தமது வழக்கமாகக் கொண்டிருந்தவர்கள் என்பதுதான் உண்மையான வரலாறாக இருந்திருக்கிறது.

அதற்கு எத்தனையோ பல சான்றுகளை இந்த நூலில் எடுத்து வைத்திருக்கிறார்கள். புரட்சியாளர் அம்பேத்கரும் சரி, தந்தை பெரியாரும் சரி. அவற்றை ஆதாரங்களோடு அடுக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களின் சமஸ்கிருத சுலோ கங்களையே அப்படியே எடுத்துக் கையாண்டு, அதற்கு விளக்கமும் கொடுத்திருக்கிறார்கள்.

அப்படி பசுக் கறித் தின்றவர்கள், காளைகளை, எருது களைக் கொன்று தின்றவர்கள், அதாவது புலால் உணவு  பழக்கம் கொண்டிருந்தவர்கள் எப்படி திடீரென்று அதிலிருந்து மாறினார்கள்? இதற்கு விடை தேடுகிறார்கள் நம்முடைய தலைவர்கள். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் எழுதிய கட்டுரைகளில், எங்கெங்கே அதனைக் குறிப்பிட்டிருக்கிறார் என்பதைத் தொகுத்துத் தந்திருக்கிறார்கள்.

இந்த மண்ணில் பவுத்தத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் நடந்த யுத்தத்தைப்பற்றி நாம் இப்பொழுது யாரும் பேசுவதில்லை.

மூத்த கோட்பாடு;

முதன்மை கோட்பாடு பவுத்தம்

பார்ப்பனியத்தை இன்றைக்கு எதிர்க்கின்ற கோட்பாடு பெரியாரியல் என்பதை நாம் அறிவோம். அல்லது அம்பேத்க ரியம் என்று நாம் புரிந்துகொள்வோம். ஆனால், இதற்கெல்லாம் மூத்த கோட்பாடு, முதன்மை கோட்பாடு பவுத்தம்.

உண்மையிலேயே பவுத்தம்தான் பசுவதைக் கூடாது என்று சொன்ன கோட்பாடு;  பவுத்தம்தான் விலங்குகளை வதை செய்யக்கூடாது என்று சொல்லியிருக்கிறது.  பவுத்தம் தான் உயிர்களைக் கொல்லக்கூடாது என்று போதித்திருக்கிறது.  பவுத்தம்தான் புலால் உணவு கூடாது என்று போதித்திருக்கிறது. அப்படி பசுவைக் கொன்று, பசுவை யாகத்தில், வேள்வியில், தீயில் வேக வைத்து தின்கிறப் பழக்கமுடையவர்களாக இருந்ததினால், அவர்களை பவுத்தர்கள் வெறுத்திருக்கிறார்கள், விரட்டியடித்திருக்கிறார்கள். இது கடந்தகால கலாச்சார வரலாறு. மிகக் கடுமையாக அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கும்பகோணத்தில் ஒரு கிராமத்தில் இப்படி நடந்ததாக புரட்சியாளர் அம்பேத்கர் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். பிராமண வகுப்பைச் சார்ந்த, பார்ப்பன வகுப்பைச் சார்ந்தவர் கள் யாராவது எதிரிலே வந்தால், இன்றைக்குத் தலித்துகளாக அடையாளப்படுத்தப்படுகிற சமுதாயத்தைச் சார்ந்தவர்கள், சாணியை சட்டியில் கரைத்து, துடைப்பத்தில் துவைத்து, அதைக் கொண்டு அடித்து விரட்டுவார்கள் என்கிற குறிப்பை புரட்சியாளர் அம்பேத்கர் கையாண்டிருக்கிறார்.

ஆக, 60 ஆண்டுகளுக்குமுன்பு கூட இங்கே அவ்வாறு நிகழ்ந்திருக்கிறது என்பதற்கு சான்றுகளைக் காட்டுகிறார்கள் நம்முடைய புரட்சியாளர்கள். ஆக, இப்படி புலால் உண்ணும் பழக்கத்தில் இருந்தவர்கள், அதைத்தான் தம்முடைய கலாச்சாரமாகக் கொண்டிருந்த வர்கள், எந்தக் கட்டத்தில் இவர்கள் அதிலிருந்து மாறியிருக்க முடியும் என்பதை ஆய்வு செய்கிற நம்முடைய தலைவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பவுத்தத்தை எதிர்த்து அவர்களால் வெற்றிபெற முடிய வில்லை. ஏனென்றால், இந்த நாடு முழுவதுமே பவுத்த தேசமாக இருந்திருக்கிறது. இந்திய தேசத்தின் பெரும்பான்மை சமூகம் பவுத்தர்களாக இருந்த காலம் ஒன்று இருந்திருக்கிறது.

வேளாண்மை செய்யக்கூடிய அந்த மக்களும் பவுத்தர் களாக இருந்திருக்கிறார்கள். ஆக, அனைவராலும் வெறுக்கப் பட்டு, அனைவராலும் விரட்டியடிக்கப்பட்ட நிலையில், இவர்களை எதிர்த்து வெல்ல முடியாதபோது, அவர்களோடு அவர்களாக மாறி, அவர்களின் பழக்கத்தை உள்வாங்கி, அவர்களை விரட்டுவது என்கிற தந்திரத்தைக் கையாண்டு தான், புலால் உண்ணும் பழக்கத்தை அவர்கள் மெல்ல மெல்ல கைவிடத் தொடங்கியிருக்கிறார்கள்.

400 ஆண்டுகால வரலாற்று யுத்தத்தில்...

இந்தப் பவுத்தத்திற்கும், பார்ப்பனியத்திற்கும் நடந்த யுத் தம் என்பது சில ஆண்டுகளாக நிகழ்ந்ததாக என்றால், அல்ல; 400 ஆண்டுகாலமாக நடந்திருக்கிறது. ஒரு நானூறு ஆண்டு கால வரலாற்று யுத்தத்தில், பவுத்தம் முழுமையாக வீழ்த்தப் பட்டு, வேரோடு சாய்க்கப்பட்டு இருந்த சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டு விட்டது. பார்ப்பனியம் வென்று விட்டது. பவுத் தத்தை உள்வாங்கி, பவுத்த விழாக்களை - பார்ப்பன விழாக் களாக, இந்து விழாக்களாக மாற்றப்பட்டு, பவுத்த பண்டிகை களே இந்துப் பண்டிகைகளாக உள்வாங்கப்பட்டு, பவுத்த விகார்களே இந்துக் கோவில்களாக மாற்றப்பட்டு, புத்தரின் சிலைகளே, பெருமாள் சிலைகளாகவும், சிவன் சிலைகளாக வும் மாற்றப்பட்டு, ஒட்டுமொத்த வரலாறே தலைகீழாகப் புரட்டப்பட்டு இருக்கிறது. பவுத்தத்தை உள்வாங்கி, அவர்கள் பசுவதைத் தடையை கூறுகிறார்கள். பவுத்தர்கள் கூறியது, இன்றைக்குத் தலைகீழாக மாறியிருக்கிறது என்பதை, பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் உரை களிலிருந்தும், புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் எழுத்து களிலிருந்தும் நம்மால் அறிய முடிகிறது.

இந்துக்களின் வாக்குகளை அதிகரிக்க முடியும் என்பதால்தான்...

இது இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய செயல்திட்டமாக மாறியிருக்கிறது. அதற்குக் காரணம், உண் மையிலேயே பசுவைக் காப்பாற்றவேண்டும் என்பதற்காக அல்ல. இதை சொல்வதன்மூலம் இந்துக்களின் வாக்குகளை அதிகரிக்க முடியும் என்பதால்தான். இருக்கின்ற இந்த இருப்பை, அவர்கள் அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்துப் போலரிசேசன் - அதுதான் அவர்கள் அரசியல் அஜெண்டா. இதுதான் ஒரு முக்கியமான கோட் பாட்டுப் பின்னணி.

இரண்டாவது, மோடி அரசு இந்த அறிவிப்பைத் துணிந்து செய்வதற்கு என்ன காரணம்?

ஒரு சிவில் வார் இங்கே தொடங்கப்போகிறது என்று சொன்னோம்

விடுதலை சிறுத்தைகளின் சார்பில் விடப்பட்ட அறிக்கை யின் தொடக்கத்தில் நாம் என்ன சுட்டிக்காட்டினோம் என் றால், இந்த அறிவிப்பால் அல்லது இந்த விதிகளால் ஒரு சிவில் வார் இங்கே தொடங்கப்போகிறது என்று சொன்னோம். அது இன்றைக்கு  சென்னை அய்.அய்.டி.யில் தொடங்கியிருக்கிறது. அந்த வெறுப்பு இங்கே மூண்டு இருக்கிறது.

எவனும் மாட்டிறைச்சிக்காகத்தான் ஒரு மாட்டைப் பிடித் துப் போகிறான் என்று சொல்லி, அவனைத் தாக்க முடியும் - துன்புறுத்த முடியும் - ஏன் கொலை செய்ய முடியும். அதற்கு இந்த சட்ட விதிகள், மிருகவதை தடுப்புச் சட்டத்தில் இணைக் கப்பட்டிருக்கிற புதிய விதிகள் வழிவகுக்கிறது.

ஆக, அப்படிப்பட்ட ஒரு உள்நாட்டு யுத்தத்தை எதிர் கொள்ளக்கூடிய வகையில், இப்படி மோதல் வரலாம் என்பது மோடிக்குத் தெரியும். தாத்ரியில் நடந்ததா இல்லையா? ஒரு இஸ்லாமியரின் வீட்டுக்குள் புகுந்து, அவன் வீட்டுக் குழம்புச் சட்டிக்குள் கையைவிட்டு, அது என்ன கறி? என்று அவன் ஆராய்ச்சி செய்து, அது மாட்டுக்கறிதான் என்று சொல்லி, அந்தக் குடும்பத்தைத் தாக்கி கொலை செய்த கும்பல்தானே. நாடு முழுவதும் அது ஏன் பரவாது?

அரியானாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்பதற்காக, அய்ந்து தலித் இளைஞர்களை அடித்து அந்த இடத்திலேயே கொலை செய்த கும்பல்தானே. உயிரோடு இருந்த மாடுகூட அல்ல; செத்த மாடு - அது பசுமாடு. அந்த செத்த பசு மாட்டின் தோலை உரித்து, அந்தத் தோலை வியா பாரத்திற்காகப் பயன்படுத்தலாம் என்கிற முயற்சியில், அவர் கள் ஈடுபட்டதற்காக, அவர்களை அதே இடத்தில் அடித்து கொலை செய்தார்கள்.

இவ்வளவு மூர்க்கமான காட்டுமிராண்டிகளைக் கொண் டிருக்கிற ஒரு தேசத்தில், இப்படியொரு புதிய சட்ட விதி களைக் கொண்டு வந்தால், எவ்வளவு பெரிய சிவில் வார் உருவாகும் என்பது மோடிக்குத் தெரியாதா? அதனை எதிர் கொள்ளவும் இவர் ஏன் முன்வருகிறார் - அந்த நெருக்கடிக்கு அவர் எப்படி தள்ளப்பட்டார் என்பதற்கு ஒரு பின்னணி இருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் மோடி அரசு என்பது ஒரு கார்ப்பரேட் அரசு; கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான அரசு. பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கிற அரசு. ஏகாதிபத்திய நாடுகளின் அடிவருடி தேசியமாக இந்திய அரசை மாற்றிக் கொண்டிருக்கிற ஒரு அரசு.

மாடு வளர்ப்புத் தொழில்

ஆக, அவர்களின் நோக்கம் - உள்ளூர் உற்பத்திகளை முடக்குவது; உள்ளூர் தொழில்களை  முடக்குவது; மாடு வளர்ப்புத் தொழில் உள்பட. மாடு வளர்ப்பு என்பது ஒரு தொழில். வெறும் விவசாயத்திற்காக மட்டுமல்ல அது - உழவுக்காக மட்டுமல்ல - பால் கறப்பதற்காக மட்டுமல்ல. மாடு வளர்ப்பது மிகப்பெரிய ஒரு பொருளாதார தளத்தைக் கொண்டிருக்கிறது.

வெறுமனே உழவுக்காக மாடு வளர்க்கவேண்டும் என்று விரும்பினால், அந்த மாடு இனிமேல் உழவுக்குப் பொருந்தாது; உழவு செய்ய முடியாது. ஆனாலும், ஒரு 20 ஆண்டுக ளுக்கு       அந்த மாடு உயிர் வாழும் என்று சொன்னால், வய தான அப்பா - அம்மாவை பராமரிப்பதற்கே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறான் - முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்க்கிறார்கள். இனிமேல் இந்தக் கிழங்களால் எந்தப் பயனும் இல்லை- எனவே, இனிமேல் நாம் ஏன் இவர்களைப் பராமரிக்கவேண்டும் என்று முதியோர் இல்லத்தில் கொண்டு போய் சேர்ப்பவன், மாடுகள் இனி உழவுக்குப் பயன்படாது என்றால், வீட்டிலே வைத்துப் புல் அறுத்துப் போட்டுக் கொண்டிருப்பானா?

மாட்டின் எலும்பு உரம் தயாரிக்கப் பயன்படுகிறது

ஆக, உழவுக்குப் பயன்படாத மாடுகளை இறைச்சிக்கு விற்க முடியும். அதிலிருந்து அவனுக்கு லாபம் கிடைக்கும். மாட்டின் குளம்பும், கொம்பும் தவிர மற்ற அனைத்தும், ஏன் மாட்டின் கொம்புகளிலிருந்து பட்டன் தயாரிக்கப்படுகிறது. அதுவே ஒரு பெரிய தொழில். மாட்டின் எலும்பு உரம் தயாரிக்கப் பயன்படுகிறது. மாட்டின் தோல், பல்வேறு தோல் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது; மாட்டுக்கறிக்கு மட்டுமல்ல - மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது

ஆகவே, அவ்வளவு பெரிய ஒரு வணிகத்தைக் கொண்டிருக்கிற, தொழிலைக் கொண்டிருக்கிற தொழில் மாடு வளர்ப்புத் தொழிலாகும். இந்த மாடு வளர்ப்புத் தொழிலை முடக்குவதே மோடி அரசின் நோக்கம்.

எதற்கு என்றால்? விவசாயம் தொடர்பான பன்னாட்டு நிறுவனங்களுக்கு இவர்கள் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார்கள். விவசாயத்தை இயந்திரமயப்படுத்துவது - அவன் உருவாக் கியிருக்கின்ற இயந்திரங்களை - விதைக்கின்ற இயந்திரம் - களைப் பறிக்கின்ற இயந்திரம் - அறுப்பு அறுக்கிற இயந்திரம் - நீர்ப் பாய்ச்சுகின்ற இயந்திரம் - இவையெல்லாவற்றையும் இன்றைக்கு வளரும் நாடுகளில் சென்று அவர்கள் வியாபாரம் செய்யவேண்டும். சந்தை அவனுக்குத் தேவைப்படுகிறது.

கறக்காத மாட்டை வைத்து என்ன செய்ய முடியும்? அதனை எப்படி பராமரிக்க முடியும்?

அதற்காக அவன் விவசாயத்தை - மாடு வளர்ப்புமூலம் நடத்துகின்ற உள்ளூர் விவசாய முறையை மாற்றவேண்டும். அதில் பன்னாட்டு நிறுவனங்களில் தலையீடு தேவைப்படு கிறது. அதற்கான வணிகத் தளத்தை அவன் உருவாக்க வேண்டும். பால் கறப்பதற்கு, உள்ளூர் மக்கள் மாடு வளர்ப்புத் தொழிலைக் கைவிட்டுவிட்டால், பசு மாடு குறிப்பிட்ட காலம்வரையில் பால் கறக்கும், அதற்குப் பிறகு பால் கறக்காது - கறக்காத மாட்டை வைத்து என்ன செய்ய முடியும்? அதனை எப்படி பராமரிக்க முடியும்? ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பால் மாடு வளர்க்கும் தொழிலையும் கைவிட்டுவிடு வார்கள், இந்த அச்சுறுத்தலால். ஆனால், பால் நமக்கு அன்றாடம் தேவைப்படுகிறது.

இன்றைக்கு நாம் சாப்பிடுகிற பாலைப்பற்றி நம்முடைய தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர்கூட ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கிறார். வேதிப் பொருள்கள் கலந்திருக்கின்றன என்று. பாலில் ஏராளமான சோயா பருப்பினுடைய பால் அதில் கலக்கப்படுகிறது. அனைத்தும் தூய பால் கிடையாது - மாட்டுப் பால் கிடையாது.

மனிதர்களின் எண்ணிக்கைப் பெருகிவிட்டது; மாடுகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஆனால், பால் தினந்தோறும் தேவைப்படுகிறது. இந்தப் பாலின் தேவையை எப்படி ஈடுகட்டி, மக்களின் தேவையை நிறைவு செய்வது? ஆகவே, தினந்தோறும் நூற்றுக்கணக்கான லிட்டர் பால் கறக்கக்கூடிய கறவை மாடுகள் இங்கே தேவைப்படுகிறது. அந்தக் கறவை மாடுகளுக்கான வியாபாரத்தை பன்னாட்டு நிறுவனங்களின் மூலம் இங்கே கொண்டு வருவது - ஆங்காங்கே பால் பண்ணைகளை - ஜெர்சி பசுக்கள் போன்ற பன்னாட்டு வகை - பல கலப்பினை வகை மாடுகளைக் கொண்டு வந்து இங்கே இறக்குமதி செய்வது - மாட்டுப் பண்ணைகளை உருவாக்கு வது - அந்த வணிகம் கார்ப்பரேட் மூலமாக இங்கே நடை பெறவேண்டும்.

அந்த மாட்டிற்குத் தீவனம் - கார்ப்பரேட் நிறுவனங்களின் மூலம் நடைபெறவேண்டும். ஆக, ஒட்டுமொத்தத்தில் மாடு வளர்ப்புத் தொழிலை முடக்குவதன்மூலம், விவசாயம், பால் உற்பத்தி மற்றும் தீவன வணிகள் இதுபோன்ற பல பொருளா தார சந்தையை இங்கே உருவாக்குவதற்கு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழிவகையை ஏற்படுத்தித் தரவேண்டியது மோடியின் வாக்குறுதிகளில் ஒன்று.

‘அவுட் லுக்’ இதழ்

அம்பலப்படுத்திய உண்மை!

இல்லையென்றால், அவர்களுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து, அய்ந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் அவரை பிரதமராக்கி இருப்பார்களா? ‘அவுட் லுக்’ என்கிற பத்திரிகை அப்போதே அதை அம்பலப்படுத்தியது.

மோடி என்கிற ஒன்றை உயர்த்திப் பிடிப்பதற்கு, அய்ந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் செலவு செய்த தொகை 25 ஆயி ரம் கோடி ரூபாய் என்று சொல்லப்பட்டது. அவர் குஜராத்தில் நின்று பேசுவார்; ஆனால், குஜராத்தில் பல இடங்களிலும் டிஜிட்டல் தொழில் நுட்பத் துறையைப் பயன்படுத்தி ஆங் காங்கே நின்று பேசுவார். இதெல்லாம் பி.ஜே.பி. செய்யவில்லை; ஆர்.எஸ்.எஸ். செய்யவில்லை. இதற்கான எல்லா செயல் திட் டங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்தன. இதற்கான செலவுகளை பி.ஜே.பி. செய்யவில்லை; ஆர்.எஸ்.எஸ். இயக்கம் செய்யவில்லை. கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்தன.

ஆகவே, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சிவப்புக் கம் பளம் விரிக்கவேண்டியது மோடியின் கடமை. அவர் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று. எல்லாத் தொழில்களிலும் தலையிட அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் இந்தியாவை பன்னாட்டு நிறுவனங்களின் சந்தையாக மாற்றுவது என்பது தான். இதை ஒரு கார்ப்பரேட் அரசாக அவர் நடத்துகிறார். ஆகவே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினுடைய கோட்பாட்டுப் பின்னணியும் இதற்குப் பின்னால் இருக்கிறது, அரசியல் ஆதாயம் தேடுவதற்காக.

ஒட்டுமொத்த இந்த தேசத்தையே கார்ப்பரேட் நிறுவனங் களிடம் தாரை வார்ப்பது என்கிற வாக்குறுதியை நிறைவேற் றுவது மோடியின் கடமைகளில் ஒன்று.

இந்த இரண்டு பின்னணிகளோடு இந்த அறிவிப்பை செய் திருக்கிறது மோடி அரசு, அண்ணன் டி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் சொன்னதைப்போல, கவனத்தை திசை திருப்புகிற யுக்தியாகவும் இதைக் கையாளுகிறது.

திசை திருப்புகிற ஒரு யுக்தி

இந்த மூன்றாண்டுகளில் மோடி என்ன செய்தார்? என்று யாரும் விவாதிக்கவில்லை. மாட்டுக்கறி தின்னலாமா? வேண்டாமா? என்கிற விவாதம் இன்றைக்கு நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படி விவாதத்தை திசை திருப்புகிற ஒரு யுக்தியாகவும் இதைக் கையாளுகிறார்கள்.

எத்தனை லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாகச் சொன்னார். வறுமையை ஒழிப்பதுதான் தன்னுடைய கடமை என்று உறுதியளித்தார். இன்றைக்கு யாராவது, மோடி அவர் களே, நீங்கள் வறுமையை ஒழித்தீர்களா? என்று கேட்கி றோமா? இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைத் தந்தீர்களா? என்று நாம் கேட்கிறோமா?

மதுவை ஒழிப்பதற்கு மோடியிடம்

என்ன திட்டம் இருக்கிறது?

ஊழல் முடைநாற்றம் வீசுகிறது; அடிமுதல் நுனிவரையில். ஊழலை ஒழிப்பதற்கு மோடியிடம் என்ன திட்டம் இருக்கிறது. மதுவை ஒழிப்பதற்கு - மது எவ்வளவு பெரிய தீங்கு - தேசம் முழுவதும் - தமிழ்நாட்டில் மட்டுமல்ல - இந்தியா முழுவதும் - எல்லா கிராமங்களிலும் - ஒரு கிராமத்திற்கு 50 இளைஞர் களாவது 30 வயதிற்குள் அவ்வளவு வீரியத்தையும் இழந்து கிடக்கிறார்கள் - காயடிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களால் இனி எந்தப் பயனும் இல்லை என்கிற அளவுக்குப் பாதிக்கப்பட்டு, பாழாகிக் கிடக்கிறார்கள். அந்த அளவிற்கு மது இந்த தேசத்தின் மிகப்பெரிய தீமையாக இருக்கிறது. ஆனால், மதுவை ஒழிப்பதற்கு மோடியிடம் என்ன திட்டம் இருக்கிறது? இப்படி எத்தனையோ அடுக்கிக் கொண்டு போகலாம். நேரமில்லை.

நாம் கைகோத்து களமாடவேண்டிய

தேவை இருக்கிறது

வீட்டு மனைப் பட்டா போட்டு மக்கள் மனு போட்டுக் கிடக்கிறார்கள். குடிசைகூட இல்லாமல், கோடிக்கணக்கான மக்கள் இன்னும் இருட்டில் புதைந்து கிடக்கிறார்கள். போதிய மின் உற்பத்தி இல்லை. நீர் மேலாண்மை இங்கு இல்லை. குடிநீருக்கு மக்கள் அல்லாடுகிறார்கள். போதிய உணவு உற் பத்தி இல்லை. மாநிலங்களுக்கிடையில் பிரச்சினைகள் - அதனைத் தீர்க்கமுடியவில்லை. இப்படி எதைப்பற்றியுமே கவலைப்படாத மோடி, மாட்டுக்கறியைப்பற்றி விவாதிக்க வைத்திருக்கிறார். நம்மை முட்டுச் சந்துக்குள் கொண்டு போய் தள்ளியிருக்கிறார். அவருடைய யுக்தி இன்றைக்கு இங்கே ஒரு விவாதமாக மாறிக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணிகளையெல்லாம் புரிந்துகொண்டு, நாம் கைகோத்து களமாடவேண்டிய தேவை இருக்கிறது. எப் போதும்போல், இத்தகைய களங்களில் நம்மை வழிநடத்தக் கூடிய ஆளுமை பெற்றவர் நம்முடைய அய்யா ஆசிரியர் அவர்கள் - தமிழர் தலைவர் அவர்கள்.

தேர்தல் அரசியலில் நாம் எந்தத் திசையில் சிதறிப் போனா லும், இந்தக் கோட்பாட்டுக் களத்தில், அய்யா ஆசிரியர் அவர் களோடு தமிழர் தலைவர் அவர்களோடு கைகோத்து நின்று நாம் போராடவேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனை உணர்ந்து களமாடுவோம் - கொள்கை களமாடுவோம் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி சொல்லி, விடைபெறுகிறேன், நன்றி, வணக்கம்!

- இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்  உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner