எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 13- தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று (12.6.2017) தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

கடந்த ஆறாண்டுகளாக ஆட்சியில் உள்ள அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க வேண் டும், தூர் எடுக்க வேண்டும் போன்ற எந்தவொரு பணிகளி லும் ஈடுபடவில்லை.

தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்தாலும், கழகத்தின் 89 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள குளங்கள், ஏரிகள், கால் வாய்களை எல்லாம் தூர் வாரி, நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும் என்று நான் வேண் டுகோள் விடுத்தேன்.

அதேபோல, தி.மு.க. எம். எல்.ஏ.க்கள் இல்லாத தொகுதி களில் கழக நிர்வாகிகளும் அந்தப் பணியில் ஈடுபட வேண் டும் என்று கேட்டுக் கொண் டேன்.

அந்த வேண்டுகோளை ஏற்று, தமிழகத்தின் அத்தனை தொகுதிகளிலும் திமுக நிர் வாகிகள், தொண்டர்கள், செயல் வீரர்கள் இணைந்து நீர் நிலைகளை தூர் வாரும் பணியினை சிறப்புடன் மேற் கொண்டு வருகிறார்கள். அந் தப் பணிகளை எல்லாம் நானே நேரடியாகச் சென்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறேன். இந்தப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள அனைவரையும் தி.மு.க.வின் சார்பில் எனது வாழ்த்துகளை, பாராட்டுக்களை, நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

கேள்வி:- ஹைட்ரோ கார் பன் திட்டத்துக்கான புரிந் துணர்வு ஒப்பந்தம் போடும் போது தமிழக அரசு எந்தவித மான கருத்தையும் தெரிவிக்க வில்லை என்று மத்திய அமைச் சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறாரே?

மு.க.ஸ்டாலின்:- தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கின்ற இந்த பினாமி ஆட்சியானது, நீட் தேர்வாக இருந்தாலும், விவ சாயிகளின் பிரச்சினைகளாக இருந்தாலும், நெடுவாசல் பிரச் சினையாக இருந்தாலும், இவை போன்ற பல பிரச்னைகளில், சட்டமன்றத்தில் தீர்மானம் போடப்பட்டு இருக்கும் பிரச்சி னைகளில் கூட மத்திய அர சுக்கு உரிய அழுத்தத்தை வழங்கவில்லை. இதையெல்லாம் நாங்கள் தொடர்ந்து சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், முதல்-அமைச்சரும், துறை அமைச்சர்களும் தவறான தகவல்களை பொதுமக்களிடம் சொல்லி வருகிறார்கள்.

அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்பது, நேற்றைய தினம் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துள்ள விளக்கத்தின் மூலம் வெளி யாகியுள்ளது. நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப் பந்தம் போட்டபோது மாநில அரசு எந்தவித எதிர்ப்பையும் சொல்லவில்லை, கருத்தையும் சொல்லவில்லை என்பதை நான் சொல்லவில்லை, மத்திய அமைச்சரே வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். இந்த அரசு பினாமி அரசு தான் என் பதற்கு இதைவிட வேறு ஒரு சான்றை, உதாரணத்தை எடுத் துச் சொல்ல வேண்டிய அவசி யம் இல்லை.

கேள்வி:- மகாராஷ்டிர அரசு நேற்று விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், தமிழக அரசு அதற்கான வாய்ப்பே இல்லை என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறதே?

மு.க.ஸ்டாலின்:- இரு நாட்க ளுக்கு முன்பு, மத்திய அமைச் சர்  வெங்கய்யா நாயுடு, தமிழக விவசாயிகளின் கடனை தள்ளு படி செய்வதில் மத்திய அர சுக்கு எந்தவித தொடர்புமில்லை, விவசாயக் கடனை தள்ளுபடி செய்வது பற்றி மாநில அரசு தான் முடிவெடுக்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.

தமிழக விவசாயப் பெருங்குடி மக்கள் தொடர்ந்து போராட் டங்களில் ஈடுபட்டு, டில்லிக் குச் சென்று கூட போராடினார் கள். ஆனால், மாநில அரசு அதுபற்றி எல்லாம் கவலையே படாமல் இருக்கிறது. மாநில அரசு உடனடியாக விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும், அந்தத் தீர்ப்பை நிறைவேற்ற இந்த மாநில அரசு முன்வர வில்லை.

ஆனால், நூறு நாள் சாதனை என்று சொல்லி பல கோடி ரூபாய் செலவில் பக்கம் பக்கமாக விளம்பரங்களை வெளி யிட்டுக் கொண்டு இருக்கிறார் களே தவிர, மக்களைப் பற்றி எந்தக் கவலையும் படவில்லை.

கேள்வி:- மீன்பிடி தடைக் காலத்தில் மீனவர்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என்று மீனவர்கள் குற்றம் சாட் டுகிறார்களே?

மு.க.ஸ்டாலின்:- மீன்வளத்துறை மட்டுமல்ல, எந்தவொரு துறை யுமே இந்த ஆட்சியில் செயல் படாமல் இருக்கின்றன என்ப தற்கு இவை எல்லாம் எடுத்துக் காட்டாக அமைந்திருக்கின்றன.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner