எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 17- உயர்நீதிமன் றத் தீர்ப்பை எதிர்த்து செய்யப் பட்டுள்ள மேல் முறையீட்டை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற்று விவசாயிகள் கூட்டுறவுக் கடன்களைத் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேர வையில் மானியக்கோரிக்கை விவாதத்தில் குறுக்கிட்டுப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட் சித்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று (16.6.2017) கூட்டுறவுத் துறை, உணவு மற்றும் நுகர் பொருள் வழங்கல் துறை ஆகிய துறைகளுக்கான மானி யக் கோரிக்கை மீதான விவாதத் தில் முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை சட்டமன் றப் பேரவை உறுப்பினருமான எ.வ. வேலு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது குறுக்கிட்டுப் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர், “தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி ரூ.5,780 கோடி தான்” என்று கூறி நீண்ட விளக்கம் அளித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறுக் கிட்டு பேசியதாவது:

ரேஷன் கடைகளுக்குப் பொருட்கள் வராததற்கான காலதாமதம் குறித்து உணவுத் துறை அமைச்சர் இங்கே ஒரு விளக்கத்தைச் சொன்னார்கள், ஆனால், அன்றைய சூழ்நிலை யில் தி.மு.க.சார்பில் நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதாவது, உணவுத் துறை அமைச்சர் தங்களுடைய பதில றிக்கையில், அப்போது முதல மைச்சராக ஓ.பி.எஸ். இருந்தார் கள், வேண்டுமென்றே அவர் கையெழுத்து போடாமல் விட் டுவிட்டார்கள். அதனால்தான் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஒரு நீண்ட விளக்கத்தைத் தந்திருக்கிறார்கள். நான் கேட்க விரும்புவது 31.3.2016 வரையிலுள்ள நடுத்தர விவசாயிக ளின் 5,78,092 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதாக ஏற்கெனவே நீங்கள் அறிவித் திருக்கிறீர்கள், மத்திய அரசி டம் நீங்கள் கேட்டிருக்கிற வறட்சி நிதி 39,000 கோடி ரூபாய், ஆனால், கிடைத்ததோ வெறும் 1,712 கோடி ரூபாய். விவசாயிகள் தொடர்ந்த வழக்கு குறித்து எ.வ.வேலு சொன்னார். அதற்கு அமைச்சர் பதில் சொன்னார். அனைத்து விவசாயிகளுடைய கடனை தள்ளுபடி செய்ய வேண்டு மென்று சென்னை உயர்நீதிமன் றத்தின் மதுரை கிளையிலே தீர்ப்பு வந்தது. இதனால் அர சுக்கு 1,980 கோடி ரூபாய் கூடுத லாக செலவு ஏற்படும்.

ஆனால் உயர்நீதிமன்றம் தந்த அந்தத் தீர்ப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல், மேல் முறையீடு செய்தீர்கள். எனவே, நான் கேட்க விரும்புவது, மேல் முறையீட்டை, இப்பொ ழுது இருக்கக் கூடிய வறட்சி, விவசாயிகள் படக் கூடிய துன் பங்கள், துயரங்கள், மழை பொய்த்திருக்கக் கூடியது போன்ற இன்றைய கடுமை யான நிலை, இவற்றையெல் லாம் மனதில் வைத்துக்கொண்டு, விவசாயிகள் தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பதை யெல்லாம் நீங்கள் கருதி, தயவு கூர்ந்து இந்த மேல் முறை யீட்டை திரும்பப் பெற்று, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும். எனவே, அமைச்சர் இதற்கு tமீஸீsவீஷீஸீ ஆக பதில் சொல்லா மல், நீஷீஷீறீ ஆக பதில் சொல்ல வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன். (குறுக்கீடுகள்)

இவ்வாறு மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரவையில் உரை யாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner