எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, ஜூன் 19- கோவையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசியதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட் டம் 10.6.2017 அன்று தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் வீ.சிவாஜி, மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் ஆகியோர் கண் டன உரை நிகழ்த்தினர். மாவட் டத் துணைச் செயலாளர் பெ. கோவிந்தராசு, மாணவரணி மாவட்ட செயலாளர் வி.பி. சிங், துணைத் தலைவர் க.கதிர், மாணவரணி சந்திரபோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந் திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத் தைகள், இந்திய யூனியன் முஸ் லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மாதர் சங் கங்கள், தொழிலாளர் அமைப்பு கள் என பல்வேறு அமைப்புகள் சார்ந்த திரளானோர் பங்கேற்ற னர்.