எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 20- வணிகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பொது மக்களின் எதிர்ப்பை மீறி, தமிழக சட்டப்பேரவையில் நேற்று (19.-06.-2017) ஜி.எஸ்.டி., சட்ட மசோதாவை அதிமுக அரசு நிறைவேற்றியதை கண்டித்தும், ஜி.எஸ்.டி. சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமை யில், கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும், சட்டமன்றத்தைப் புறக்கணித்து வெளி நடப்பு செய்தனர். இதுகுறித்து மு.க.ஸ்டாலின் அவர்கள் செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

ஜி.எஸ்.டி., மசோதாவை அறிமுகப்படுத்திய நேரத்தில், அதற்கு நாங்கள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தாலும், அதுகுறித்து இன்று விவா தம் நடைபெற்றபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய சட்ட மன்ற உறுப்பினர் திரு. அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள், இதில் இருக்கக்கூடிய பிரச்சி னைகளை, சங்கடங்களை, எந்தெந்த பொருளுக்கு வரி அதிக மாக இருக்கிறது, எதையெல் லாம் குறைக்க வேண்டும் என் பதை எல்லாம் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

அதுமட்டுமல்ல, வாட் வரி விதிக்கப்பட்ட நேரத்தில், அப்போது திமுக ஆட்சி நடை பெற்று, முதல்வராக இருந்த தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் சம்பந்தப்பட்ட வணி கப் பெருமக்கள், தொழிலதிபர்கள் அத்தனை பேரையும் அழைத்து, கூட்டம் நடத்தி, அவர்களுடன் கலந்து பேசி, அவர்களுடைய கருத்துகளை எல்லாம் கேட்டு, அதன் பிறகு தான் அதனை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.

ஆகவே, நியாயமாக ஜி.எஸ்.டி. சட்ட முன்வடிவை இன்று இந்த அவையில் நிறைவேற்றுவதற்கு முன்னால், இதனால் பாதிக்கப்படக்கூடிய வணிகர் கள், தொழிலதிபர்கள், அதற்கான அமைப்புகளை எல்லாம் அழைத்து, பேசியிருக்க வேண்டும். அந்த முறையை இந்த அரசு கையாளவில்லை.

அதன் பிறகு கடைசியாக, இதை செலக்ட் கமிட்டிக்கு அனுப்பி, அதன் பிறகு இந்த சட்ட முன்வடிவை சட்டமன் றத்தில் வைக்கலாம் என்ற கருத்தையும் நான் திமுக சார்பில் தெரிவித்தேன். அதையும் இந்த அரசு ஏற்காத காரணத்தால், இந்த சட்டத்தை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறை வேற்றிய நேரத்தில், அதனைக் கண்டித்து, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவையில் இருந்து வெளிநடப்பு செய் திருக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner