எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 23 கீழடியில் கிடைத்த தொல்பொருள்களை தமிழகத் திலேயே பாதுகாத்து ஆய்வு மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வியாழக் கிழமை கூறினார்.

சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது:

தமிழர்களின் பண்பாட்டு அடையா ளங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தவை என்பதை நிரூபிக்கும் வகையில் கீழடி அகழ்வாய்வுக்கு மத்திய அரசின் ஒத் துழைப்பு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. அதில் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு வந்த ஆய்வாளர்கள் திடீ ரென மாற்றப்படும் நிலையும் தொடர் கிறது. கீழடியில் கிடைத்த பழங்காலப் பொருள்களை அண்டை மாநிலத்தில் உள்ள மைசூருக்கு மாற்றும் முயற்சியும் நடக்கிறது. தமிழர்களின் வரலாற்றுப் பெருமைகளை அந்தக் கல்வெட்டுகள், செப்பேடுகள் உலகத்துக்கு எடுத்துக் காட்டக் கூடிய வகையில் அமைந்திருக் கின்றன. எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து, அவற்றை எல்லாம் தமிழகத்திலேயே பேணிப் பாதுகாக்கும் வகையில் எல்லாவித முயற்சிகளையும் அரசு எடுக்க வேண் டும் என்றார்.

அப்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியது: கீழடியில் அகழ்வாய்வு மேற் கொள்ளத் தேவையான அனைத்து நட வடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். அதற்காக 72 சென்ட் நிலம் கொடுக்கப் பட்டுள்ளது. 2 ஏக்கர் நிலம் வேண்டும் என்று கோரியுள்ளனர். அதை வழங்கு வதற்குப் பரிசீலித்து வருகிறோம். இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கும் கடிதம் எழுதியுள்ளோம். கீழடியில் கிடைத்த தொல்பொருள்களை தமிழகத் திலேயே பாதுகாத்து ஆய்வு மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

அங்கன்வாடியில் ஆங்கில வழிக்கல்வி

சென்னை, ஜூன் 23 அங்கன்வாடியில் ஆங்கில வழிக் கல்விக்கு வகை செய் யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வியாழக் கிழமை கேள்வி நேரத்தின் போது, திமுக உறுப்பினர் ரங்கநாதன் துணைக் கேள்வி எழுப்பினார். தனியார் பள்ளி கள் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாக வும், அரசே மழலையர் பள்ளிகளைத் தொடங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்: எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பு களில் பிள்ளைகளைச் சேர்க்கும் பெற் றோர், கடன்களை வாங்கித் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, அரசே அங்கன்வாடியில் ஆங்கில வழியிலான மழலையர் வகுப்புகளை எப்படி நடத் துவது என்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

பள்ளி மாணவர்களுக்கு
உள்ளூர் சுற்றுலா

சென்னை, ஜூன் 23 பள்ளி மாண வர்களுக்கு மாவட்ட அளவிலான உள் ளூர் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும் என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி ந.நடராஜன் கூறினார்.

சுற்றுலாத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சர் நடராஜன் வெளியிட்ட அறிவிப்புகள்:

பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ஏதேனும் ஒரு சுற்றுலா தலத்துக்கு, ஒருநாள் சுற்றுலா சென்று வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்காக 32 மாவட்டங்களுக்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் மொத்தம் ரூ.64 லட்சம் செலவிடப்படும்.

ராமேசுவரம், மாமல்லபுரம், கொடைக்கானல், ஏற்காடு, மதுரை, கன்னியாகுமரி ஆகிய 6 இடங்களில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா விடுதிகளுக்கு தலா ரூ.9.54 லட்சம் செலவில் புதிய வர்த்தக சலவை இயந்திரங்கள் வாங்கப் படும்.

கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருச்சி, திருச்செந்தூர், ஏற்காடு, ஒகேனக்கல், காஞ்சிபுரம், ராமேசுவரம் ஆகிய இடங் களில் செயல்படும் தமிழ்நாடு சுற்றுலா விடுதிகளுக்கு ரூ.25 லட்சம் செலவில் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும்.

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களி லுள்ள சுற்றுலா அலுவலகங்களுக்கு புதிய மடிக் கணினி, பிரிண்ட்டர், ஸ்கே னர் ஆகிய உபகரணங்கள் ரூ.40 லட்சம் செலவில் வாங்கப்படும்.

உலக சுற்றுலா தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 27-ஆம் தேதி கொண்டாடப் படுகிறது. திருச்சியில் இந்த ஆண்டு சுற்றுலா தினம் கொண்டாடுவதற்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்றார்.

நீதிமன்றங்களில் காணொலிக்
காட்சி விசாரணை வசதி

சென்னை, ஜூன் 23 குற்றவாளி களிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை மேற்கொள்ள மேலும் 52 நீதிமன்றங்களுக்கு வசதி ஏற்படுத்தப் படும் என்று சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் கூறினார்.

சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ராமச்சந்திரன் பேசும்போது, குற்றவாளி களை அழைத்து வரும்போது அவரது விரோதிகள் கொலை செய்யும் நிகழ் வுகள் நடக்கின்றன. இதனால் சிறையில் உள்ள குற்றவாளிகளிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை நடத்துவதற் குத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அப்போது அமைச்சர் சி.வி.சண் முகம் குறுக்கிட்டுக் கூறியது: 352 சிறைச்சாலைகளில் உள்ள குற்றவாளி களிடம் 33 நீதிமன்ற நீதிபதிகள் காணொ லிக் காட்சி மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் 52 நீதிமன்றங் களுக்கும் காணொலிக் காட்சி விசா ரணை மேற்கொள்வதற்குத் தேவையான வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்கான அரசாணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

பள்ளி, கல்லூரிகளில் சட்டக் கல்வி  

சென்னை, ஜூன் 23 பள்ளி, கல் லூரிகளில் அடிப்படை சட்டங்கள் குறித்த பாடத்திட்டங்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப் பினர் ஜே.ஜி. பிரின்ஸ் பேசும்போது, சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு போதுமானதாக இல்லை. இதனால் சட்டங்கள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் படிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக் கும் என்றார்.

அதற்கு அமைச்சர் சி.வி.சண்முகம் குறுக்கிட்டுக் கூறியது: காங்கிரஸ் உறுப் பினர் கூறுவது நல்ல யோசனை. இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சருடன் கலந்து ஆலோசிக்கப் படும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் அடிப்படை சட்டத்தைத் தெரிந்து கொள்ளும் வகையில் பாடத்திட்டத்தில் சேர்க்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப் படும்.

ஜூலைக்குள் முழுமையாக
மின்னணு குடும்ப அட்டைகள்  

சென்னை, ஜூன் 23 ஜூலை மாதத்துக்குள் முழுமையாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
சட்

டப் பேரவையில் வியாழக் கிழமை கேள்வி நேரத்தின் போது திமுக உறுப்பினர் பூங்கோதை எழுப் பிய கேள்விக்கு அமைச்சர் அளித்த பதில்:
தமி

ழகத்தில் கடந்த 2011ஆம்-ஆண்டு முதல் 5 ஆண்டுகளில் 2 ஆயிரத்து 276 நியாய விலைக் கடைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன. மதுராந்தகம், ஆலங்குளம் உள்ளிட்ட சில தொகுதி களில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கடைகள் திறக்கப்படாமல் உள்ளதாக அந்தத் தொகுதிகளின் எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணங்கள் உறுப்பினர் களுக்குத் தெரிவிக்கப்படும். தமிழகம் முழுவதும் மின்னணு குடும்ப அட் டை கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் அனைத்தும் ஜூலைக்குள் முடிக்கப்படும்.

வேலூர் அரசு சட்டக் கல்லூரியில்
ரூ.4 கோடியில் மாணவியர் விடுதி

சென்னை, ஜூன் 23 வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் ரூ.4 கோடியில் மாணவியர் விடுதி புதிதாகக் கட்டப் படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.

சட்டம், நீதிமன்றம், சிறைச்சாலை துறை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேரவையில் அமைச்சர் சி.வி.சண்முகம் வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் தேசிய மாணவர் படை பயிற்சிக்குத் தடகளப் பயிற்சி மையம் மற்றும் அணிவகுப்பு பயிற்சி மையம் ரூ.35 லட்சம் மதிப் பீட்டில் கட்டப்படும். உள் விளை யாட்டு அரங்கம் ரூ.50 லட்சம் மதிப் பீட்டில் அமைக்கப்படும். மாணவியர் விடுதி வளாகத்தைச் சுற்றி ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.

வேலூர் அரசு சட்டக் கல்லூரியில் புதிய மாணவியர் விடுதி ரூ.4 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும். செங்கல் பட்டு அரசு சட்டக் கல்லூரியில் உட் கட்டமைப்பு வசதிகள் ரூ.2 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

நீதி நிர்வாகம்: சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் துணைப் பதிவாளர் (நிர்வாகம்), துணைப் பதி வாளர் (நீதித் துறை) துணைப் பதிவாளர் (ரிட் மனு) பதவிகளை அந்தத் துறை சார்ந்த இணைப் பதிவாளர்களாக நிலை உயர்த்தப்படும்.

மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் வட்டங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் தமிழ் நாடு மாநில அகண்ட அலைவரிசை இணைய வசதி அமைப்பதற்காக ரூ.37 கோடி வழங்கப்படும்.

புழல் மத்திய சிறை தவிர அனைத்து மத்திய சிறைகளிலும் அடுமனைக் கூடம் ரூ.2.10 கோடியில் தொடங்கப் படும். சிறைத்துறை துணைத் தலைவர் பணியிடத்தை சிறைத்துறை தலைவர் பணியிடமாக நிலை உயர்த்தப்படும். வேலூர் மத்திய சிறையில் பெண்களுக் கான குறைந்த எடையுள்ள காலணிகள் தயாரிக்கும் தொழிற்கூடம் ரூ.1.26 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும். புழல் மத்திய சிறையில் புதிதாக தையல் தொழிற்கூடம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும் என்றார்.

திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியாரிடம் செல்வதை தடுப்போம் : அமைச்சர் உறுதி

சென்னை, ஜூன் 23 சட்டசபையில்  தி.மு.க. உறுப்பினர் அன்பில் பொய்யா மொழி பேசும் போது, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியார் மயமாக்க முயற்சி நடக்கிறது. தமிழக அரசு மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் கொடுத்து இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து தொழில் துறை அமைச்சர் சம்பத் பேசியதாவது:-

மத்திய அரசு நடத்தி வரும் இந்த துப்பாக்கி தொழிற்சாலையில் இருந்து துப்பாக்கிகள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி ஆகின்றன. மத்திய அரசின் திட்டக்குழு இந்த தொழிற்சாலையை தனியாருக்கு விடுவது பற்றிய சாத்திய கூறு குறித்து ஆய்வு செய்ய அந்த நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த தொழிற்சாலையை தனியாரிடம் செல்வதை தடுக்க பிரதமரிடம் முறையிடுவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

துறைமுகம் தொகுதியில் சாலையோரம் வசிப்பவர்களுக்கு அடுக்குமாடி வீடுகள்

சென்னை, ஜூன் 23 சட்டசபையில் நேற்று (22.6.2017) கேள்வி நேரத்தின் போது துறைமுகம் தொகுதி பல்லவன் நகரில் வசிப்பவர்களுக்கு வீடுகள் கட்டப்படுமா? என்று அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர் பாபு (தி.மு.க.) கேள்வி எழுப் பினார்.

இதற்கு வீட்டு வசதி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

இந்த பகுதியில் 753 குடும்பங்கள் வாழ் கிறது. கூவம் நதி மேம்பாடு திட்டத்துக்கு நிலம் தேவைப்படுவதால் அங்கு வீடுகள் அமைக்க இயலாது. இதனால் பெரும் பாக்கம் எழில் நகரில் 726 பேருக்கு வீடு ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அங்கு செல்லவில்லை.

பி.கே.சேகர்பாபு:- ஒதுக்கப்பட்ட வீடு களுக்கு இங்குள்ள மக்கள் செல்லாதது உண்மைதான். காரணம் இங்கு தொழில் பார்க்கிறார்கள். குழந்தைகள் படிக்கிறது. எனவே வால்டாக்ஸ் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு அவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்கலாம்.

இது குறித்து பரிசீலிக்கப்படும்.

பி.கே.சேகர்பாபு:- துறைமுகம் பகுதி யில் சாலையோரம் 2000 குடும்பங்கள் உள்ளன. பெரும்பாக்கத்தில் 4000-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வைத்திருப் பதாக அமைச்சர் கூறி இருந்தார்.

அதில் 2000 பேருக்கு வீடுகள் ஒதுக் கினால் அவர்கள் அங்கு குடியேறுவார்கள்.

சாலையோரம் வசிப்பவர்கள் 300 பேர் தான் உள்ளதாக எங்களுக்கு தெரிகிறது. ஆனால் சட்டமன்ற உறுப்பினர் 2000 பேர் என்கிறார். அந்த பட்டியலை தந்தால் அவர்களுக்கு வீடுகள் ஒதுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

எண்ணூர் துறைமுகம் முதல்-அமைச்சர் விளக்கம்

சென்னை, ஜூன் 23 சட்டசபையில் நேற்று (22.6.2017) கேள்வி நேரம் முடிந்ததும் தி.மு.க. உறுப்பினர் சுதர்சனம் எண்ணூர் துறைமுகம் குறித்து ஒரு கவன ஈர்ப்பு கொண்டு வந்தார்.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் அன்றைய பிரதமர் வாஜ்பாயால் திறந்து வைக்கப்பட்டது. 3 ஆயிரத்து 100 ஏக்கர் பரப்பளவு கொண்டது. ரூ. 15 ஆயிரம் கோடி மதிப்புடையது. ரு.480 கோடி நிகர லாபம் வருகிறது

சிறப்பாக செயல்பட்டு வரும் இந்த துறைமுகத்தை மத்திய அரசு தனியாருக்கு விற்கப்போவதாக செய்திகள் வருகின்றன. தமிழக அரசு மத்திய அரசுக்கு தகுந்த அழுத்தம் கொடுத்து இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:-

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந் துள்ள காமராஜர் துறைமுகம் (முந்தைய எண்ணூர் துறைமுகம்) மத்திய அரசின் மினி ரத்னா தகுதி பெற்ற ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.

இந்த பிரச்சினை தொடர்பாக காமராஜர் துறைமுக நிர்வாகம் மற்றும் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறை யிடமிருந்தும் எவ்வித அறிக்கையும் அரசுக்கு வரப்பெறவில்லை.

19.6.2017 அன்றைய செய்தித்தாள்களில், இத்துறைமுகத்தின் மத்திய அரசின் 100 சதவிகித பங்குகளை விலக்கிக் கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சகத்திலிருந்து இப்பொருள் சம்பந்தமான விவர அறிக்கை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.