எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூன் 25 முதுகலை மருத்துவப் படிப்புக் கான புதிய தகுதிப்பட்டியல் வெளியிட கால அவகாசம் கோரிய மனு ஜூன் 28ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.முதுகலை மருத்துவப் பட்டப் படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான ஊக்க மதிப்பெண்கள் தொடர்பாக கடந்த மே 5ஆம் தேதி தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அதன்படி கலந்தாய்வு நடைபெற்றது. இந்த அரசாணையால் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் மட்டும் அதிக இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

எனவே, அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று பிரணீதா என்ற மாணவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் ராஜீவ் சக்தோர், சுரேஷ் குமார் ஆகியோர் கொண்ட அமர்வு முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை ஊக்க மதிப்பெண் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்து கடந்த ஜூன் 16 ஆம் தேதி உத்தரவிட்டது.

மேலும் வழக்கின் அவரச நிலையை கருத்தில் கொண்டு வரும் மூன்று நாள்களுக்கு புதிய தகுதிப் பட்டியலை வெளியிட வேண்டும்.இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.

இந்த மனு ஜூலை மாதம்தான் விசாரணைக்கு வரும் என்பதால், புதிய தகுதிப் பட்டியலைத் தயாரிக்க இரண்டு வார அவகாசம் வழங்கக் கோரி தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.இந்த மனு வெள்ளியன்று (ஜூன் 23) நீதிபதிகள் ராஜீவ் ஷக்தேர், சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதித் தான் மூன்று நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

எனவே, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையிட்டிருக்கலாம் என அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அரசு தலைமை வழக்குரைஞர் முத்துக்குமாரசாமி, ஜூன் 27 அன்று இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் முறையிடப்படும் எனத் தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner