எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உயிர்கொல்லி குட்கா விற்பனை முறைகேடு பற்றி
பேச அனுமதி மறுப்பு:  சட்டசபையில் தி.மு.க. வெளிநடப்பு

சென்னை, ஜூன் 29 சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து குட்கா விற்பனை மற்றும் வரு மான வரி சோதனை தொடர்பான பிரச்சினையை சபையில் பேச தொடங்கினார்.

பேரவைத் தலைவர் ப. தனபால்:- இன்று காலை 9.32 மணிக்குத் தான் இந்த பிரச்சினை குறித்து பேச என்னிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுத்து இருக் கிறீர்கள். அது என் ஆய்வில் இருக்கிறது. பத்திரிகை செய்தி களை வைத்து பேச அனுமதி கொடுக்க முடியாது. ஆதாரம் இருந்தால்தான் பேச முடியும். இல்லாவிட்டால் அனுமதி கொடுக்க மாட்டேன்.

(அனுமதி கேட்டு எதிர்க் கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலி னும்,  துணைத்தலைவர் துரை முருகனும் பேரவைத் தலைவரை  தொடர்ந்து வற்புறுத்தினார்கள். ஆதாரம் இல்லாவிட்டால் பேச அனுமதி இல்லை என்று பேர வைத் தலைவர் கூறினார்.

இதையடுத்து தி.மு.க. உறுப் பினர்கள் அனைவரும் இது தொடர்பாக பத்திரிகைகளில் வெளி வந்த செய்தியின் நகல் களை சபையில் எடுத்துக் காட்டி னார்கள்)

பேரவைத் தலைவர்:- அனை வரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஒத்து ழைப்பு கொடுக்காவிட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

(மு.க.ஸ்டாலினை பேச அனுமதிக்கும்படி தி.மு.க. உறுப்பினர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள்.)

மு.க.ஸ்டாலின்:- குட்கா விற் பனை முறைகேடு தொடர்பாக வருமான வரித்துறையினர் நடத் திய சோதனையில் மாதவராவ் என்பவருடைய வீட்டில் டைரிகள், கணக்குப்  புத்தகங்கள் உள்பட பல்வேறு ஆதாரங்கள் சிக்கி இருக்கின்றன. அதில் பல்வேறு நபர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

பேரவைத் தலைவர்:- இது பற்றிப் பேச அனுமதி இல்லை.

(தி.மு.க. உறுப்பினர்கள் மீண் டும் செய்தி நகல்களை காட்டி ஒலி முழக்கம் எழுப்பினார்கள்)

பேரவைத் தலைவர்:- தொடர்ந்து இவ்வாறு செயல் பட்டால் தி.மு.க. உறுப்பினர் களை வெளியேற்ற வேண்டியது இருக்கும்.

மு.க.ஸ்டாலின்:- ஒரு முக் கியமான பிரச்சனையை சபையில் எழுப்பி அதுபற்றி பேச சபா நாயகர் அனுமதிக்கவில்லை. எனவே இதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

சட்டப் பேரவையில் இருந்து வெளியேறிய பிறகு மு.க.ஸ்டா லின் செய்தியாளர்களிடம் கூறிய தாவது:-

தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருள் விற்பனை தொடர்பாக லஞ்சம் கொடுக்கப் பட்ட விவகாரம் இப்போது வெளியாகி இருக்கிறது.

குட்கா ஏஜெண்டு மாதவராவ் வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் டைரிகள், பல் வேறு குறிப்புகள் அடங்கிய புத்தகங்கள், யார் யாருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டது என்ற பட்டியல் இடம் பெற்றுள்ளது.

அதில் முதல் பெயராக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் விஜயபாஸ்கர் பெயர் இடம் பெற்றுள்ளது. மொத்தம்ரூ.40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள் ளதாக அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

மக்கள் உயிரை காப்பாற்ற வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சரே குட்கா போன்ற உயிரை கொல்லும் பொருட்களை விற்பதற்காக மாமூல் வாங்கி இருக்கிறார். இது கொலை குற்றத்துக்கு சமமானது. எனவே அமைச்சர் விஜயபாஸ்கரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.க. கிளப்பிய அதே பிரச் சினை குறித்து பேச காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் அனுமதி கேட்டனர். பேரவைத் தலைவர் அனுமதி மறுத்ததால் காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.


இசைக் கல்லூரியில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

சென்னை, ஜூன் 29 தமிழ்நாடு இசைக் கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும் என்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் எழுப் பிய கேள்வி:

தமிழ்நாடு இசைக் கல்லூரி யில் விரிவுரையாளர்கள் உள் பட பல்வேறு பதவிகள் காலி யாக உள்ளன. இதனை நிரப் புவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதற்கு அமைச்சர் ராமச் சந்திரன் கூறியது: தமிழ்நாடு இசைக்கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு வதற்கு அரசு பரிசீலித்து வருகிறது. இது குறித்து முதல் வரின் கவனத்துக்குக் கொண்டு தக்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்துவோம்: முதல்வர் உறுதி  

சென்னை, ஜூன் 29 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் பொதுப்பணி, நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு புதன்கிழமை பதிலளித்து அவர் பேசியதாவது:

நடுவர் மன்றத்தின் இறுதி உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்க மத்திய அரசுக்கு கடிதங்கள் மூலமும், பிரதமரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

படுகை மாநிலங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு உகந்தவை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு ஜூலை 11ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்தப்படும்.

86,355 விவசாயிகளுக்குப் பலன்:  குடிமராமத்துத் திட்டத் தின் கீழ் ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. மாநிலத்திலுள்ள நீர் வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சித் துறைகளின் பராமரிப்பிலுள்ள 42,649 நீர்நிலைகளில் வண்டல் மண் படிவுகள் கண்டறியப்பட்டுள்ளன. 36,345 நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுவரை 4.41 மில்லியன் கனமீட்டர் வண்டல் மண் அகற்றப்பட்டு, அதன்மூலம் 86,355 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

அத்திக்கடவு அவினாசி:  காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்தில் இருந்து பவானி ஆற்றின் உபரி நீரை நீரேற்று பாசன முறையின் மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் அத்திக்கடவு}அவினாசி திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்மூலம் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 31 நீர்வள ஆதாரத் துறை ஏரிகள், 40 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 630 நீர்நிலைகள் பயன்பெறும். இந்தத் திட்டத்தால் நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படுத்தப்படும். இந்தத் திட்டத்துக்காக நிகழ் நிதியாண்டில் ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

அரசு மருத்துவக் கல்லூரிக்கு
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பெயர்

சென்னை, ஜூன் 29 புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு டாக்டர் முத்துலட்சுமிரெட்டியின் பெயரை வைக்க அரசு பரிசீலித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறினார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர் எஸ்.ரகுபதி எழுப்பிய கேள்வி:

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. ஆசிய கண்டத்திலேயே முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமிரெட்டி. இவர் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே பிறந்தவரும் ஆவார். அதனால், புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு அவரின் பெயரை வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதற்கு, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது: புதுக் கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு ஏற்கெ னவே முத்துலட்சுமி ரெட்டியின் பெயர்தான் உள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அப்போது, சமூகத் தலைவர்கள் எல்லாம் முதல்வரைச் சந்தித்து, மருத்துவக் கல்லூரிக்கு முத்துலட்சுமி ரெட்டியின் பெயரை வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து முத்துலட்சுமி ரெட்டியின் பெயரை வைக்க முதல்வர் ஆலோசித்து வருகிறார். இந்த விவகாரத்தில் சாதகமான பதில் கிடைக்கும் என்றார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner