எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டத்தினை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ஜூலை 1 இல் பிறந்த நாள் காணும் கழகத் தோழர் இரா.மாதவனுக்கு மரக்கன்று ஒன்றினை வழங்கினார். “பல்கலைக் கழகங்களில் தமிழர் தலைவர்” என்ற நூலினை மு.க.ஸ்டாலினுக்கு பரிசாக வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன், எக்ஸ்னோரா நிர்மல், நடிகர்கள் மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட் டோர் உள்ளனர்.