எழுத்துரு அளவு Larger Font Smaller Fontதிருவொற்றியூர், ஜூலை 1- சென்னை துறைமுகத்தில் இருந்து மணலி சிபிசிஎல் நிறுவனம் வரை கச்சா எண்ணெய் கொண்டு செல்வதற்காக காசிமேடு, எண் ணூர் விரைவு சாலை, மணலி சாலை வழியாக ராட்சத குழாய் பதிக்கப்படுகிறது.

இதற்கு, மீனவர்களும், குடியிருப்பு நல சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல் வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 8ஆம் தேதி, மிகப்பெரிய குழாய் பதிக்கும் பணி, திருவொற்றியூர் நல்ல தண்ணீர் ஓடை குப்பம் பகுதியில் தொடங்கப்பட்டது. இதை கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கச்சா எண்ணெய்க்கான மிகப் பெரிய குழாய் பதிப்பதற்கான திட்டம் குறித்த விளக்க கூட் டம் சிபி சிஎல் நிறுவனம் சார் பில், திருவொற்றியூரில் தனி யார் திருமண மண்டபத்தில் நேற்று காலை நடந்தது.

இதில், அம்பத்தூர் ஆர்டிஓ அரவிந்தன், திருவொற்றியூர் தாசில்தார் செந்தில்நாதன், சிபி சிஎல் நிறுவன அதிகாரிகள் புருஷோத்தமன், தங்கராஜ் ஆகியோர் திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவ கிராம நிர்வாகி கள், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக் களிடம் கருத்துகளை கூறினர். கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, அதிமுக பகுதி செய லாளர் கிருஷ்ணன், மீனவ சங்க நிர்வாகிகள் கோசுமணி ஆகியோர் தலைமையில் 500க் கும் மேற்பட்ட பொதுமக்க ளும், மீனவ மக்களும் ஒன்று கூடி கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், திட்ட விளக்க கூட்டம் நடத்துவதாக கூறி முழக்கமிட்டனர்.

பின்னர், திருமண மண்ட பத்தை முற்றுகையிட்டு முழக் கமிட்டனர். அதிகாரிகள், அவர் களிடம் சமரசம் பேசியபோது, இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர், சமரசம் பேசுவதாக இருந்தால், உள்ளே செல்லுங்கள், இல்லாவிட்டால் கலைந்து செல்லுங்கள் என பொதுமக்களை மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். சில மீட்டர் தூரம் ஊர்வலமாக சென்ற அவர்களை, காவல் துறையினர் வழி மறித்து அனை வரையும் கைது செய்தனர். பின்னர், அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத் தில் அடைத்தனர். அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணன், கோசுமணி உள் பட 10 நிர்வாகிகளை மட்டும் சமாதானம் பேசி திருமண மண்டபத்துக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

அங்கு அவர்கள் சென்றதும், கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும். திட்ட விளக்க கூட்டம் தேவையில்லை என கூறி, கண்களில் கருப்பு துணி கட்டி கொண்டு, அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே திருமண மண் டபத்தில் இருந்த சிலரிடம் அதிகாரிகள், ராட்சத குழாய் பதிக்கும் திட்டம் குறித்து விளக்கினர். அப்போது, குழாய் பாதுகாப்பாக பதிக்கப்படுகி றது. விபத்து ஏற்படாது. இந்த ராட்சத குழாயில் கச்சா எண் ணெய் கொண்டு வருவதால் சிபிசிஎல் நிறுவனம் வளம் பெறும். அதன் மூலம் சுற்று வட்டார மக்களுக்கு நன்மை ஏற்படும் என்றனர். இதற்கு, கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் கவுன்சிலர் கே.பி. சங்கர், சிபிசிஎல் நிறுவனம் தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை திருவொற் றியூர், எண்ணூர் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, வேலை வாய்ப்பில் எந்த ஒரு முன்னுரிமையும் அளிக்க வில்லை, இனிமேல் நீங்கள் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பினார்.

அவரை தொடர்ந்து முன்னாள் நகராட்சி தலைவர் ஜெயராமன் பேசுகையில், ஒரு நிறுவனம் தங்களது லாபத்தில் இருந்து 2 சதவீதத்தை சுற்று வட்டாரத்தில் உள்ள பொது மக்களின் நலத்திட்டங்களுக்கு வழங்க வேண்டும். இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் என கேள்வி எழுப்பினர். பொது மக்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் அதிகாரிகள் திணறி னார்கள். பின்னர், அடுத்தடுத்து மீனவ கிராம சங்க நிர்வாகி களும், குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளும் கேள்வி எழுப்பினர். அனைத்து தரப்பி னரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத அதிகாரிகள், கூட்டம் முடிந்துவிட்டது என கூறி, ஓட்டம் பிடித்தனர்.

இதைதொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களும் விடு விக்கப்பட்டனர். இச்சம்பவத் தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner