எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வடகாடு, ஜூலை 18- புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத் திய அரசு அனுமதி வழங்கியது. இதைக்கண்டித்து, நெடுவாச லில் அப்பகுதி மக்கள் கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி 2ஆம் கட்டமாக போராட்டத்தை தொடங்கினர். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன போராட்டங்கள் நடத்தி மத்திய, மாநில அரசு களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நெடுவாசல் நாடியம்மன் கோவில் அருகே 97ஆவது நாளாக நேற்றும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட் டத்தில் கலந்து கொண்டவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டத் துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கொண்டு, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் பல் வேறு முழக்கங்களை எழுப்பினர்.