எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 15- சட்டப் பேரவையில் 110வது விதியின் கீழ் வெளியிடப்படும் அறிவிப் புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட இயலாவிட்டாலும், அந்த அறிவிப்புகள் உறுதிமொ ழிக் குழுவுக்குஅனுப்பி வைக் கப்படுமா? என்று தமிழக சட் டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று நேரமில்லா நேரத்தின் போது, முதலமைச்சர் எடப் பாடி பழனிச்சாமி 110ஆவது விதி யின்கீழ் சில அறிவிப்புகளைப் படித்தார். இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எழுந்து பேசியதாவது:

-சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அமைச்சர்கள்பதில் அளிக்கும் போதும், மானியக் கோரிக்கை களின் மீதான விவாதங்களின் முடிவில் அமைச்சர்கள் பதில ளிக்கும் போதும் அளிக்கப் படும் உறுதிமொழிகள், வாக் குறுதிகள் அனைத்தும் உறுதி மொழிகள் குழுவுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், சட்ட மன்றத்தின் 110ஆவது விதியின் கீழ் வெளியிடப்படும் அறிவிப் புகளைப் பொறுத்தவரை அவை உறுதிமொழிக் குழுவுக்கு அனுப்பப்படுவதில்லை.

ஏற்கனவே பலமுறை இந்த 110ஆவது விதியின் கீழ் மறைந்த முன்னாள் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள், அதற்குப் பிறகு இப்போது வெளியிடப் பட்டு வரும் அறிவிப்புகள் குறித்தும், அவற்றின் நிலை என்ன? எந்தெந்த அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று விளக்கமாக வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும் என நான் பலமுறை வலியுறுத் தியுள்ளேன். நான் இப்போது இந்த அறிவிப்புகள் பற்றி கூற விரும்புவது வெள்ளை அறிக்கை வெளியிட இந்த அரசால் முடி யாவிட்டாலும், இந்த அறிவிப்புகளையெல்லாம் உறுதி மொழிக் குழுவுக்காவது அனுப்பி வைக்கதமிழக அரசு நட வடிக்கை எடுக்குமா? என்பதை முதலமைச்சர் மூலமாக நான் தெரிந்துகொள்ள விரும்புகி றேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த முத லமைச்சர் எடப்பாடி பழனிச் சாமி, மறைந்த முன்னாள் முத லமைச்சர் ஜெயலலிதா அவர் களால் 110ஆம் விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு களும் நிச்சயம் நிறைவேற்றப் படும். நீதிமன்றத்தில் நிலுவை யில் இருப்பது போன்ற கார ணங்களால் தாமதம் ஏற்பட் டாலும்கூட, 110விதியின் கீழ் அறிவிக்கப்படும் அனைத்து அறிவிப்புகளும் இந்த அரசால் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று பதிலளித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner