எழுத்துரு அளவு Larger Font Smaller Fontசென்னை, ஜூலை 13 இது தந்தை பெரியார் பிறந்த மண் - சமூகநீதி மண் - நீட் தேர்வை ஒழித்து சமூகநீதியைக் காப்பாற்றிடத் தொடர்ந்து போராடுவோம் என்றார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

சென்னையில் நேற்று நடைபெற்ற ‘நீட்' தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அவர் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:

நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி தமிழக அரசு நிறை வேற்றியிருக்கிற சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் இன்னும் வழங்கப்படவில்லை. அதனை உடனடியாக வழங்கிடவேண்டும் என்பதை வலி யுறுத்தும் வகையில் நாம் இன்று இங்கு கூடியிருக்கிறோம்.
மத்திய அரசை, மோடி அரசை எதிர்த்துப் போராடுகிற துணிச்சல் தமிழ்நாட்டில் மட்டும்தான், சமூகநீதிப் போராளிகளுக்கு மட்டும்தான் உண்டு.

மோடி எதிர்ப்பு தமிழ்நாட்டில்தான் அதிகம்

வேறு எந்த மாநிலத்திலும் மோடி அரசின் நட வடிக்கைகளை பெரிய அளவில் யாரும் எதிர்க்கவில்லை. அதிலும் குறிப்பாக சமூகநீதித் தொடர்பான போராட்டக் களம் என்பதில், தமிழ்நாடுதான். தந்தை பெரியார் அவர்கள் தொடங்கி வைத்த கனல். இன்றும் தமிழர் தலைவரின் தலைமையில் அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. நாமெல்லாம் கைகோத்து இந்தக் களத்தில் நின்றுகொண்டிருக்கிறோம்.

பள்ளி கல்வி அல்லது கல்லூரி கல்வி, பல்கலைக் கழகக் கல்வி என்று கல்வித் தொடர்பான அதி காரங்கள் மாநில அரசுகளின் கைகளில்தான் இருக்க வேண்டும். அப்பொழுதுதான், அந்தந்த மாநில சூழ்நிலைகளுக்கேற்ப கல்வித் திட்டங்களை வரையறுக்க முடியும். மாண வர்கள் பின்னணியை அறிந்து, அவர்களுக்கேற்ப தேர்வு களையும் நடத்த முடியும்.

ஆனால், மத்திய அரசு அதனை கபளீகரம் செய்ய இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக, இந்த மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் மத்திய அரசு தலையிடுவதும், மருத்துவக் கல்வியே மிகப்பெரிய ஒரு நகைப்புப் பொருளாக மாறிவிட்டது.

இந்த மருத்துவக் கல்விக்கான கல்விக்கூடங்கள் அல்லது கல்லூரிகள் என்பது மத்திய அரசால் நிறுவப் பட்டது அல்ல. தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகள் அனைத்தும் மத்திய அரசின் நிதியால் கட்டப்பட்ட கல்லூரிகள் அல்ல. மாநில அரசு மற்றும் தனியார் நிறு வனங்களால்தான்.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது.

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு மருத்துவக் கல்லூரிகளின் பலம் என்பது இங்கே மேம் படுத்தப்பட்டு இருக்கிறது.

தமிழ்நாட்டில் மருத்துவ வளர்ச்சி....

வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வியில் உயர் கல்வித் துறை வளர்ந்திருக்கிறது.
அப்படிப்பட்ட நிலையில், இந்த வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க நம்முடைய மாநிலம்தான் பொறுப்பு - மாநில அரசுதான் பொறுப்பே தவிர, மத்திய அரசு பொறுப்பல்ல.

மத்திய அரசின் நிதியால் கட்டப்பட்டதல்ல மருத் துவக் கல்லூரிகள் - மத்திய அரசு அனுமதி தருகிறது அவ்வளவுதான்!
மாணவர்கள் பிளஸ் டூ படித்துவிட்டு, அதிலும் மருத் துவக் கல்விக்கான பிரிவு - ஏ குரூப், பி குரூப் படிக்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில். ஆனால், இருக்கின்ற கல்விக் கூடங்களின் எண்ணிக்கை மிகமிகச் சொற்பம்.

மத்திய அரசு அனைவருக்கும் மருத்துவக் கல்வி அளிக்கவேண்டும் என்று விரும்பினால், மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை கூட்டவேண்டுமே தவிர, இப்படிப்பட்ட நெருக்கடிகளை உருவாக்கக் கூடாது. மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை கூட்டுவதில் இவர்களுக்கு என்ன தயக்கம்? மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான இருக்கைகளின் எண்ணிக்கை. டீம்டு யூனிவர்சிட்டி என்றால், 100 இடங்கள்; சாதாரணமான மருத்துவக் கல்லூரிகள் என்றால், 5 இடங்கள். இதற்குமேல் இவர்கள் எண்ணிக்கையை ஒதுக்குவதில்லை.

மருத்துவக் கல்லூரிகளின் இடங்களின் எண்ணிக் கையை உயர்த்தவேண்டும். அதற்கான கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கு மத்திய அரசு நிதி அளிக்கவேண்டும். மருத்துவக் கல்லூரிகளை மேம் படுத்துவதற்கு, அதனை வளப்படுத்துவதற்கு மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல், நாம் உருவாக்கி வைத்திருக்கின்ற வளத்தைப் பயன்படுத்திக் கொள்ள, அல்லது அபகரித்துக் கொள்ள அல்லது ஆக்கிரமித்துக் கொள்ள மத்திய அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை எந்த வகையிலும் நாம் அனுமதிக்க முடியாது.

இது ஒரு மிகப்பெரிய எதேச்சதிகாரமான போக்கு. மோடி அரசு எல்லாத் துறைகளிலும் தலையிடுகிறது. அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று முயற்சிக்கிறது. கலாச்சார அதி காரத்தை உயர்த்திப் பிடிக்கிறது. அதுவே, கல்வித் துறையிலும் திணிக்க முயற்சிக்கிறது.

மத்திய அரசின் நோக்கம்

எங்கோ ஒரு மூலையில் படிக்கின்ற குக்கிராமத்தைச் சேர்ந்த மாணவனையும், அவர்கள் விரும்புவதைப்போல உருவாக்கவேண்டும் என்று அவர்களுக்கு ஒரு கனவுத் திட்டம் இருக்கிறது. ஆகவே, அவர்கள் கல்வியை முழுமையாகக் கையிலெடுத்துக் கொள்ள, கல்வி தொடர்பான அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்ள அவர்கள் மேற்கொள்கின்ற முயற்சிக்கான ஒரு முன்னோட்டம்தான் நீட் தேர்வு என்பது. இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல.

யூனிவர்சிட்டி கிரான்ட் கமிசன் இருக்கிறது - அது பல்கலைக் கழகங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது. பல்கலைக் கழக நடவடிக்கைகளை வரைமுறை செய்கிறது - கவனிக்கிறது. பல்கலைக் கழகங்கள்தான் தேர்வுகளை நடத்துகிறது. அப்படி பார்க்கின்றபொழுது, மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவப் பல்கலைக் கழகம் இருக்கிறது. மருத்துவப் பல்கலைக் கழகம்தான் தேர்வுகளை நடத்தவேண்டும். அதில் மத்திய அரசுக்கு என்ன வேலை? தமிழகத்தில் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் இருக்கிறது. அதுதான் தேர்வுத்தாளை தீர்மானிக்கவேண்டுமே தவிர, மத்திய அரசு இதில் மூக்கை நுழைப்பது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இது மிக மோசமான ஒரு எதேச்சதிகாரமான போக்கு.

அகில இந்திய கோட்டாவால் ஆபத்து!

ஆகவே, இதனை அடிப்படையில் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். மோடி அரசின் எதேச்சதிகாரத்தை எதிர்க்கிறோம். இந்த நீட் தேர்வை இவர்கள் நடை முறைப்படுத்துவதின்மூலம், என்னென்ன பிரச்சினைகள் உருவாகும் என்று சொன்னால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது ஒருபுறம் - தமிழ்நாடு அரசு அல்லது தமிழ்நாட்டு மக்கள் அல்லது தமிழ்நாட்டு கல்வியாளர்கள் அரும்பாடுபட்டு உருவாக்கியிருக்கிற இந்த மருத்துவக் கல்வி இடங்கள் - அகில இந்திய கோட்டா என்கிற பெயரால், நம்முடைய இடங்களை அவர்கள் அபகரித்துக் கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அதிகமாக அவர்கள் கபளிகரம் செய்ய வாய்ப்பிருக்கிறது.

அதற்குக் கேள்வித் தாள்களை அவர்களே வரையறை செய்வதால், பல்கலைக் கழகங்கள் முடிவு செய்வதில்லை. மாநில அரசுக்கு அதில் எந்த அதிகாரமும் இல்லை. தமிழ்நாடு மாநில அரசை சார்ந்த கல்வியாளர்களுக்கு அதில் எந்தப் பங்களிப்பும் இல்லை. எவனோ ஒருவன் புதுடில்லியில் அமர்ந்துகொண்டு கேள்வித் தாளை வரையறை செய்கிறான்.

அந்தக் கேள்வித்தாள்கள், அவர்கள் விரும்புகிற மத்திய பாடத் திட்டத்தின் அடிப்படையில் அமை கின்றன. சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின்கீழ் அந்தக் கேள்வித்தாள்கள் அமைகின்றன.

சி.பி.எஸ்.இ. பாடங்களாக மாற்றத் திட்டம்!

இனி வருங்காலத்தில் பள்ளிகளின் பாடத் திட்டங்கள், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்களாக மாற்றப்படும். மாநில கல்வித் திட்டத்தை முற்றிலுமாக அழிப்பதுதான். ஒவ்வொரு மாநில அரசும், மாநில அரசு கல்வித் திட்டத்தை முற்றிலும் கைவிட்டுவிடுவார்கள்.  மத்திய அரசின் கல்வித் திட்டத்தை நோக்கி நகர்வார்கள். மத்திய அரசு கல்வித் திட்டம் என்று வந்துவிட்டால், அதில் நாம் பெரியாரைப் படிக்க முடியாது - சமூகநீதிப் போராளிகளைப்பற்றி நாம் அறிந்துகொள்ள முடியாது. நம்முடைய பாரம்பரியம், தமிழர்களின் கலாச்சாரம், தமிழர்களின் பண்பாடு தொடர்பான பாடத் திட்டங்கள் அதிலே வருவதற்கு வாய்ப்பு இல்லை. நம்முடைய தொன்மை குறித்த பதிவுகள் அதிலே இருக்காது. நம்முடைய அடையாளங்கள் மெல்ல மெல்ல நசுக்கப்பட்டு, எதிர்கால சந்ததியினர் தமிழர் என்கிற அடையாளத்தை இழக்க நேரும்.
இப்படியெல்லாம் மறைமுகமான ஒரு தாக்குதல் நடத்துவதற்கான ஒரு முயற்சி இது. காவி மயப்படுத்துகிற ஒரு முயற்சி. சமஸ்கிருத மயமாதல் - காவி மயமாதல் என்பதுதான் அவர்களின் அடிப்படையான ஒரு கலாச்சார அடிப்படைவாதமாக இருக்கிறது.

இது பெரியார் பிறந்த மண்

அதை அவர்கள் கல்வித் துறை மூலமாகவும் திணிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை மொத்தமாக எதிர்த்து நிற்கிற மண்தான் பெரியார் மண் - தமிழ்நாடு என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அதனால்தான் கேரளாவில் போராட்டம் நடக்கவில்லை, ஆந்திராவில் நடக்கவில்லை, கருநாடகாவில் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் நிகழ்வதற்குக் காரணம், இந்தக் கும்பலின் உண்மையான சதித் திட்டத்தை புரிந்துகொள்கிற பார்வை பெரியாரின் பார்வை. இடதுசாரிகளின் பார்வை - அம்பேத்கரிய பார்வை - அதனால்தான் இந்த மண்ணில் நாம் கைகோத்து நின்று போராடிக் கொண்டிருக்கின்றோம்.

அவர்கள் நீட் தேர்வை நடத்தி முடித்தாலும்கூட, ஒருமுறை அவர்கள் சாதித்துவிட்டாலும்கூட, அப்படியே அதனை விட்டுவிடவேண்டும் - அதனை அனுமதித்துவிடவேண்டும் என்பதல்ல; போராளிகளின் குணம் - நடைமுறைப்படுத்துகின்ற ஒன்றை - ரத்து செய்கின்ற ஆற்றல் - அதனை இல்லாமல் தகர்க்கக்கூடிய ஆற்றல் போராளிகளுக்கு உண்டு - சமூகநீதிப் போராளிகளுக்கு உண்டு என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஆகவே, தேர்வை நடத்தி முடித்துவிட்டார்கள் - தேர்வு முடிவுகளை அறிவித்துவிட்டார்கள் - கவுன்சிலிங் நடத்தப் போகிறார்கள் என்பதனால், எல்லாம் முடிந்துவிட்டது, இனிமேல் நாம் போராடிப் பயனில்லை என்கிற சோர்வு தேவையில்லை என்பதை உணர்த்தும் அடையாளமாகத்தான் இந்தப் போராட்டம் இன்றைக்குத் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பெரும்பாலான அமைப்பிலிருக்கின்றவர்கள் இந்த அமைப்பிலே நாம் கைகோத்துக் கொண்டிருக்கின்றோம். திராவிடர் கழகம் இதனை முன்னெடுத்தாலும், ஆசிரியர் அவர்கள் தலைமை வகித்தாலும், அவருடைய தலைமையின்கீழ், திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரசு பேரியக்கம், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் அமைப்பு, இசுலாமிய அமைப்புகள்  என்று தமிழகத்தைச் சார்ந்த மிக முக்கியமான அனைத்துக் கட்சிகளும் இதிலே பங்கேற்று இந்தக் களத்திலே நாம் கைகோத்து நிற்கிறோம்.

தொடர்ந்து போராடுவோம்

எனவே, நீட் தேர்வை ரத்து செய்கிற வரையில், தமிழ்நாடு தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கும் என்பதை நாம் உறுதிப்படுத்தக் கூடிய வகையில், நாம் இணைந்து நிற்போம். களமாடுவோம் என்று சொல்லி, வாய்ப்புக்கு நன்றி கூறி, என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

- இவ்வாறு  விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் உரையாற்றினார்

பிரின்ஸ் கஜேந்திர பாபு

1973ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு, கூட்டாட்சித் தத்துவத்தை எந்த அதிக பலமான நாடாளுமன்றத்தாலும் மாற்ற முடியாது என்ற தீர்ப்பைக் கொடுத்தது.

அந்தத் தீர்ப்பின் அடிப்படையில்தான் பேராசிரியர் ரஞ்சன்ராய் சவுத்ரி வல்லுநர் குழுவின் அறிக்கையிலே, தனியார் மருத்துவக்கல்லூரிகளில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்ற பரிந்துரையில், எந்தெந்த மாநிலங்கள் விரும்வில்லையோ, அந்த மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று 2014ஆம் ஆண்டில் வல்லுநர் குழு அறிக்கை கொடுத்தது.

அந்த வல்லுநர் குழு அறிக்கையை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்தின் சுகாதாரத்துறை சார்ந்த நிலைக்குழு தனது 92ஆவது அறிக்கையிலே மிகத்தெளிவாக, எந்தெந்த மாநிலங்களெல்லாம் விரும்பவில்லையோ, அந்த மாநிலங்களுக்கெல்லாம் விலக்களித்து, அகில இந்திய அளவிலே மருத்துவ பொதுத் தேர்வை நடத்தலாம் என்கிற பரிந்துரையைக் கொடுத்தது. 8.3.2016 அன்று தாக்கல் செய்யப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை புறந்தள்ளிவிட்டுதான் 2016 ஆகஸ்ட் மாதத்தில் அமைச்சர் நட்டா இந்தியன் மெடிக்கல் (திருத்த) சட்டம் என செக்ஷன் டியைக் கொண்டு வருகிறார்.

2016_2017க்கு விலக்கு கொடுக்கிறேன் என்பவர் மாநிலப் பாடத்திட்டத்துக்கும், நீட் பாடத் திட்டத்துக்கும் வெவ்வேறாக இருக்கின்றது என்பதை ஒப்புக்கொண்டவர், 2016க்குப் பிறகு, இன்னமும் அந்த பாடத்திட்டத்தின் வேறுபாடுகளால், அந்த மசோதாக்களுக்கு, எங்களால், இதுவரை விலக்கு கொடுக்க முடியவில்லை என்று சொல்வது மக்களைப் பழிவாங்கும் செயலாகும். 2.5.2016 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மிகத் தெளிவாக, மாநில அரசுக்கு மட்டுமே இதில் அதிகாரம் இருக்கிறது என்று திட்டவட்டமாக சொல்லியிருக்கிறது.  

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, நாடாளுமன்றத்தின் நிலைக்குழு அறிக்கை அனைத்தையும் புறந்தள்ளி, தமிழ்நாடு அரசின் இரண்டு சட்ட மசோதாக்களுக்கு  இந்திய அரசமைப்புச்சட்டத்துக்கு எதிராக, இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா? என்று கேள்வி எழுப்பக்கூடிய வகையிலே, இதுவரை மோடியின் அரசு இரண்டு மசோதாக்களுக்கும் ஏற்பு இசைவைக் கொடுக்கிறார்களா? இல்லை நிராகரிக்கிறார்களா? என்கிற பதிலைச் சொல்லாமல் இருக்கிறார்கள். இது நீதித்துறையையும், நாடாளுமன்றத்தையும் அவமானப்படுத்தும் செயலாகும்.

தமிழ்நாட்டில் ஒருபோதும் இதை அனுமதிக்க மாட்டோம். தமிழ்நாட்டின் இரண்டு மசோதாக்களுக்கு உடனடியாக ஏற்பிசைவைக் கொடுக்க வேண்டும். ஏற்பிசைவைக் கொடுக்கும்வரை, தமிழ்நாடு மருத்துவக் கலந்தாய்வையே தமிழ்நாடு அரசு நிறுத்தி வைக்கவேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாகக் கோருகிறோம்.

செல்வசிங்நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு எதிரானது மட்டுமல்ல, மாநில உரிமைகளுக்கும் எதிரானது. கூட்டாட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது. தமிழகத்தின் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டபோது, குயரசுத தலைவர் ஒப்புதல் வழங்கவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் குடியரசுத் தலைவருக்கு ஒப்புதல் அளிக்குமாறு கோரி கடிதம் எழுதியபோது, குடியரசுத் தலைவர் அவர்கள் இப்படிப்பட்ட மசோதா எங்களுக்கு வந்துசேரவில்லை என்று சொல்கின்றார். எனவே, இடையிலே இருக்கின்ற மோடி அரசு தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பரிந்துரை செய்து குடியரசுத் தலைவருக்கு  அனுப்பாததனுடைய விளைவாக, இன்று வரை தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது. தமிழக அரசு இதுபற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதேசியக் கல்விக் கொள்கை என்றபெயரில், கல்வியை மத்தியத்துவப் படுத்துவது, கல்வியை வணிகமயமாக்குவது, கல்வியை வகுப்புமயமாக்குவது என்ற 3 அம்சங்களின் அடிப்படையில், உயர்கல்வியையும் அனைத்து மக்களுடைய கல்வியையும் பறிக்கக் கூடிய வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதனுடைய தொடக்கமாகத்தான் நீட் தேர்வை திணிக்கிறார்கள். பல்கலைக்கழகங்கள்மீது தாக்குதல்களைத் தொடுக்கிறார்கள். மாணவர்களுக்கு எதிராக, தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கிறார்கள். ஆளுங்கட்சியினர் மாநில உரிமையை பறிகொடுப்பவர்களாக இருக்கிறார்கள். இதை அனுமதிக்க முடியாது. தமிழகத்திற்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஜனநாயக சக்திகளை இணைத்து முறியடிக்கும்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் திமுக

திமுக மாநில மாணவரணி செயலாளர் எழிலரசன் தலைமையில் பெரும் திரளான மாணவர்கள் ஆர்ப் பாட்டத்தில் பங்கேற்றனர். வடசென்னை மாவட்ட  திமுக மேனாள்  செயலாளர் எல்.பலராமன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் கோ.ஏகப்பன் உள்ளிட்ட திரளான திமுக தோழர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

தலித் கிறித்துவ அமைப்பு

பெருந்திரள் ஆர்ப்பாட்டத்தில் தலித் கிறித்துவ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பே.பெலிக்ஸ் மற்றும் சென்னை ஒருங்கிணைப்பாளர்கள் பவுசஸ் நாயகம், சத்தியசீலன்,   மரியஎட்வர்ட்,   ரிச்சர்ட் தயாநிதி,  டாம், ராஜா,  சாக்ரட்டிஸ்   மற்றும்  தலித் மாணவர் கூட்டமைப்பு பிரான்சிஸ் சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகம் வடசென்னை

தே.ஒளிவண்ணன் (மாவட்டச் செயலாளர்), வழக்குரைஞர் மு.சென்னியப்பன், பெ.செல்வராசு, கி.இராமலிங்கம், தளபதி பாண்டியன், ந.இராசேந்திரன், பெரு.இளங்கோவன், புரசை சு.அன்புச்செல்வன், தி.சே.கோபால். பா.கோபாலகிருட்டிணன், தி.செ. கணேசன், பாலு, ஏ.மணிவண்ணன், துரை.இராவணன், டி.மனோகரன், கு.ஜீவா, புதுவண்ணை செல்வம், சத்திய மூர்த்தி, சி.வாசு, நாத்திகம் சேகர்,  ஏழுகிணறு கோ.கதிரவன்.

தென்சென்னை

செ.ர.பார்த்தசாரதி (மாவட்டச் செயலாளர்), பொதுக்குழு உறுப்பினர் எம்.பி.பாலு, செ.தமிழ்சாக்ரடிசு, கோ.மஞ்சநாதன், கோ.செல்வராஜ், கோ.வீ.ராகவன், டி.ஆர்.சேதுராமன், சா.தாமோதரன், ந.இராமச்சந்திரன், மு.ந.மதியழகன், ஈ.குமார், அ.செல்வராசு, பி.சீனிவாசன், மயிலை பாலு, சி.செங்குட்டுவன், சேத்பட் அ.பாபு, இராஜேந்திரன் (சூளைமேடு), சைதை தென்றல், சேரலாதன்.

ஆவடி மாவட்டம்

பா.தென்னரசு (மாவட்டத் தலைவர்), உடுமலை வடிவேல், கலைமணி, அம்பத்தூர் நடராசன், மதுரவாயல் பாலமுரளி, பெரியார் மாணாக்கன், வேலவன்.

தாம்பரம் மாவட்டம்

கோ.நாத்திகன் (மாவட்ட செயலாளர்), நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், சு.மோகன் ராஜ், ஜெயராமன், மா.ராசு, குணசேகரன், க.கண்ணன், ஆ.இர.சிவசாமி, லட்சுமிபதி, சோமசுந்தரம், பொய்யாமொழி, செஞ்சி ந.கதிரவன், உத்திரகுமார், சீனிவாசன், சன் சரவணன், அனகாபுத்தூர் மாணிக்கம், சட்ட நாதன், கணேசமூர்த்தி, ஜெனார்த்தனன், முத்து கன்னியப்பன், சுமதி பொய்யா மொழி, தொழிலாளரணி நாகரத்தினம், பூ.இராமலிங்கம்.

கழக மகளிரணி

இன்பக்கனி (வடசென்னை செயலாளர்), இறைவி, பசும்பொன், வளர்மதி, கலைமதி, சீர்த்தி, மு.செல்வி, மணிமேகலை, தங்க.தனலட்சுமி, துர்கா, தமிழரசி, மருத்துவர் ஆருயிர், வா.விமலா.

கும்முடிப்பூண்டி மாவட்டம்

ரமேஷ் (மாவட்ட செயலாளர்), பொன்னேரி செல்வி (மகளிர் பாசறை), க.ச.க.இரணியன் (இளைஞரணி), சு.நாகராஜ் (இளைஞரணி), வெ.அருள், மு.சுதாகர், சு.துர்கா, கெ.முருகன், ஏ.முரளி, செ.உதயகுமார், ‘தொழில் உலகம்’ விஜயகுமார், ரவி, பாலு.

பெரியார் திடல் தோழர்கள்


சுரேசு, சு.விமல்ராசு, அம்பேத்கர், ஆனந்த், கே.என்.மகாதேவன், யுவராஜ், விஜய் பிரபு, சிறீராம், முத்துராஜ், சுதன், மகேசு, அசோக் மற்றும் திரளான கழக தோழர் - தோழர்கள் பங்கேற்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner