எழுத்துரு அளவு Larger Font Smaller Fontசென்னை, ஜூலை 9 செம் மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக் கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் வலி யுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக் கிழமை வெளியிட்ட அறிக்கை:

“திமுக தலைவர் கலைஞரின் பெரும் முயற்சியால் அப் போதைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைமையிலான மத்திய அரசு, கடந்த 2004 அக் டோபர் 12  ஆம் தேதி அன்று தமிழ் மொழிக்குச் செம்மொழி தகுதியை வழங்கி, அறிவிப்பு வெளியிட்டது. தமிழ் செம்மொழி யாக அறி விக்கப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மத்திய செம் மொழி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்தாலும், முதல்வராக கலைஞர் இருந்த போது, அன்றைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் மறைந்த அர்ஜுன் சிங்கிடம் வலியுறுத்தி, அந்த செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை, தனித்தன்மை யுடன் செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்துக்குக் கொண்டு வந்தார்.

மைசூருவில் இருந்து போரா டிப் பெற்று வந்த செம் மொழித் தமிழாய்வு நிறுவ னத்தை, குறிப் பாக, தன்னாட்சி அமைப்பாகச் செயல்பட்டு வரும் இந்த நிறுவ னத்தை திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தில் ஒரு துறையாக மாற்று வதை, எக்காரணம் கொண்டும் தமிழர் களால் ஏற்றுக் கொள்ளவே முடி யாது. மத்திய அரசின் இந்த முயற்சியை தமிழ்கூறும் நல்லு லகம் நிச்சயம் மன்னிக்காது.

ஆகவே, செம்மொழித் தமி ழாய்வு மத்திய நிறுவனத்தை திருவாரூர் மத்திய பல்கலைக் கழத்துடன் இணைக்கும் முயற் சியை மத்தியில் உள்ள பாஜக அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை உடனடியாகக் கைவிட வேண்டும். மேலும் செம்மொழித் தமி ழாய்வு நிறுவனத்தின் தன் னாட்சித் தகுதியை மாற்றும் வகையில் செயல்படுவதை நிறுத் திக் கொண்டு, இந்த நிறுவனம் முழுநேர இயக்குநர் மற்றும் முழு நிதியுதவியுடன் தமிழா ராய்ச்சிப் பணிகளில் தன்னாட்சி அதிகாரத்துடன் தொடர்ந்து செயல்படுவதற்குரிய நடவடிக் கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று  தளபதி மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.