எழுத்துரு அளவு Larger Font Smaller Fontகாரைக்குடி, ஜூலை 9 நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்குக்கோரும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றிய இரு மசோதாவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதலை மாநில, மத்திய அரசுகள் பெற்றுத் தரவேண்டும் என்பதை வலி யுறுத்தி சூலை 12ஆம் தேதி தமி ழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் ஒரு கோடி மாணவர்கள் அஞ்சலட்டை, மின் அஞ்சல்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப  வலியுறுத்தப்படும்.

இது பற்றி சிவகங்கை மாவட்ட அளவில் ஜனநாயக உரிமைப்பாதுகாப்புக் கூட்ட மைப்பின் கலந்தாய்வுக் கூட் டத்தை திராவிடர் கழகம் ஏற் பாட்டில் காரைக்குடி செக்காலை பெரியார் படிப்பக அலுவலகத்தில் தலைமைச் செயற்குழு உறுப் பினர் சாமி.திராவிடமணி தலை மையில், சிவகங்கை வழக்கு ரைஞர் ச.இன்பலாதன் முன்னி லையிலும் நடந்தது. மாவட்ட செயலாளர் தி.என்னாரசு பிராட் லா வரவேற்றார். மாவட்ட தலை வர் ச.இரங்கசாமி நன்றி கூறினார்.

காரைக்குடியில் ஆர்ப்பாட்டம்

இக்கூட்டல் நா.குணசேகரன் (திமுக), ந.பாண்டிமெய்யப்பன் (காங்), பிஎல்.இராமச்சந்திரன் (இ.கம்யூ), பத்மநாபன் (சிபிஎம்), உதயகுமார் (வி.சி.கட்சி), ஹைதர்அலி அம்பலம் (மு.லீக்), கமருள் ஜமான் (ம.ம.க.), நவில் (தி.இ.த.பே), இளங்கோ (தமிழ் ஆசிரியர் கழகம்), தமிழ் கார்த்திக் (பச்சை தமிழகம்), இரவிச்சந்திரன் (க.இ.பெ.மன்றம்), சிவாஜிகாந்தி (ஏஅய்ஒய்எப்), செல்லமுத்து (அரசு ஊழியர் சங்கம்), அன்சாரி (தமுமுக), ந.செகதீசன் (திராவிடர் கழகம்), பெரியார் முத்து (தி.வி. கழகம்) ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

வருகின்ற சூலை 12ஆம் நாள் காலையில் காரைக்குடி இராஜீவ் காந்தி சிலை அருகில் பெருந்திரள் தொடர்முழக்கப் போராட்டம் நீட் தேர்வை தமிழகத்திற்கு விலக்கு அளித்திட சட்டமன்றத்தில் நிறை வேற்றியதற்கு குடியரசுத் தலை வரின் ஒப்புதலை பெற்றுத் தர மாநில, மத்திய அரசுகள் முயற் சிக்க வலியுறுத்தி நடத்தப்படு கின்றது. மாவட்டம் முழுவது மிருந்து அனைத்துக் கட்சித் தொண்டர்கள் கலந்து கொள் கின்றனர்.
மாவட்ட தலைவர் ச.அரங்க சாமி நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner